தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் சமுதாய நலமன்றம் சார்பில் 'சிகரத்தை நோக்கி' எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி மல்லிபட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர், பொருளியல்துறைத் தலைவர் பேராசிரியர் மேஜர் எஸ்.பி கணபதி, டாக்டர் எம். ஹுசைன் பாஷா, இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் எஸ். ஆபிதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு அரசுப்பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து கருத்துரை வழங்கினார்கள். மேலும் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இக்கருத்தரங்கில் +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மல்லிபட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர்.சுபாஸ்ரீ, கே. திவ்யபாரதி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் 40 மாணவர்கள் சேர்ந்தால் மூன்று ஆண்டுகள் கழித்து அக்கல்லூரி படிப்பை முடிக்கும்போது எஞ்சியிருப்பது 20 பேர் மட்டுமே. அதிலும் படிப்பை முழுமையாக முடித்து பட்டம் பெறுவது பத்து பேர் மட்டுமே. இந்த 10 மாணவர்களும் சமுதாயத்தில் என்ன செய்கின்றனர். என்பது பற்றிய முழுமையான ஆய்வு முடிவுகள் இல்லை. பட்டம் பெற்ற பல மாணவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனராக, பெட்டி கடை வியாபாரியாவதற்கு கல்லூரி கல்வி தேவையா? கள ஆய்வு மாணவர்களுக்கு தேவையான ஓன்று. பயணத்தை திட்டமிட்டு சிகரத்தை எட்ட வாழ்த்துக்கள்.
ReplyDelete