அதிரை நியூஸ்: மே 21
தாய்லாந்தில் தாமரை மலர்ந்தால் நமக்கென்ன என சிலர் உள்ளங்கள் கேட்கலாம். இது தாமரை மலர்ந்தது என்ற வெறும் செய்தி மட்டுமல்ல நம் மண்ணிலும் மீண்டும் இதுபோல் தாமரை மலரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை. நமதூரின் பெரும்பான்மையான குளங்கள் ஒரு காலத்தில் தாமரை மற்றும் அல்லி மலர்களால் சூழ்ந்திருந்தவை என்பது இன்றைய தலைமுறைக்கு அது ஒரு ஆச்சரிய வரலாறு ஏனெனில் குளங்களில் நீரையே பார்த்திராதவர்கள் அவர்கள். மேலும், தெர்மகோல் கொண்டு தண்ணீரை மூடும் மந்திரிகளை கண்டு வளரும் சமூகம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கழிவுநீர் கலப்புக்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தாமரைகள் தாய்லாந்தின் கவோ சாம் ரோய் யோட் தேசிய பூங்காவிலுள்ள ஏரியில் இளஞ்சிவப்பு நிற கடல் போல் பூத்துக்குலுங்கி காட்சியளிக்கின்றது. இந்தப் பூங்கா சுற்றுலாவாசிகளை தாய்லாந்திற்குள் கவர்ந்திழுக்கும் 61 முக்கிய பூங்காக்களில் ஒன்று. எனினும், நாம் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.
10 வருடங்களாக தாமரை பூக்காமல் போனதன் காரணம் சுற்றுப்புற மாசுபாடுகளே என அறிந்த அரசும், மக்களும் ஏரியில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகள் கழிவுகள் கலப்பதை தடுத்தனர் பின்பு ஏரியை சுற்றி சுத்தம் செய்தனர், விளைவு மண்ணுக்குள் 10 வருடங்களாக உறங்கிய தாமரைக் கிழங்குகள் மீண்டும் தாமே வளர்ந்து இலை பரப்பி பூத்து மக்கள் மனங்களில் மகிழ்ச்சியை பரப்பி நிற்கின்றது. இனி இந்த ஏரியை சுற்றுச்சூழல் பாதிக்காத வரை இயற்கை தெர்மகோலான தாமரை இலைகள் தண்ணீரை பாதுகாத்துக் கொள்ளும்.
அன்புநிறை (அதிராம்பட்டினம் உட்பட அனைத்து) தமிழக மாணவர்களே! இளைஞர்களே! பெரியோர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை ஆனால் தேவை சிறு உழைப்பு. உங்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்கும் திட்டத்தை செலவின்றி அல்லது சிறிய செலவில் அமைத்து பூமிக்கு அடியில் தற்போது அவ்வப்போது பெய்யும் கோடைமழை நீரை சேமியுங்கள், எஞ்சிய நீரை நமது வீட்டுக்கு அருகாமையிலுள்ள குளத்தில் சிறு வாய்க்கால் வெட்டி சேமிப்போம். நமது வீடுகளிலும், நம் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரங்களை இயன்றளவு நடுவோம். நமக்கு கிடைத்துள்ள இந்த கோடைக்கால ஓய்வு பல நல்ல சமூக நல காரியங்கள் செய்ய பயன்படட்டும். மாற்றம் நம்மிடமிருந்து ஆரம்பமானால் தாய்லாந்து உதாரணங்கள் பின் தேவைப்படாது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.