.

Pages

Sunday, October 12, 2014

முத்துப்பேட்டை அருகே சிறுவன் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் !

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் கஜ்ஜாலி. இவரது மகன் முஹம்மது ரஹூப் ( வயது 12 ). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று தனது இரு சக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தின் அருகே சென்ற போது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் சிலர் சிறுவனை வழிமறித்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக தெரிகிறது. இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறுவனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக தற்போது தஞ்சை தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். சிறுவன் மீது நிகழ்த்திய திடீர் தாக்குதலால் அந்தபகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

செய்தி மற்றும் படம் :
சூனா ஈனா ( முத்துப்பேட்டை )




5 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இந்த குழந்தையை பிரிந்து தவிக்கும் அப்பெற்றோர்களுக்கு
    படைத்த இறைவன்.மன அமைதியும் சமாதானத்தையும்
    அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
    Replies
    1. நன்றாக படித்து கருத்திடுங்கள் குலாம் அவர்களே... பூரண குணமடைய துஆ செய்வோம்

      Delete
  2. அட பாவிகளா இந்த சிறுவன் அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டான்? இப்படி ரத்தம் சிந்தும் அளவுக்கு காயம் படுத்தி விட்டீர்கலே ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஏக இறைவனிடம் கேள்வி கனக்கு உண்டு.

    ReplyDelete
  3. இந்த சிறுவன் என்றுகூட பார்க்கமல் ஈவு இரக்கம்மின்றி வெறிச்செயலை அறங்கேற்றிருக்கும் மிருகத்தை வன்மையாக கன்டிக்கிறோம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு கொலை வழக்கில் தண்டனை பெறசெய்ய வேண்டும்

    ஸஹீஹுல் புகாரி 2448. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
    Volume:2,Book:46.

    ஸஹீஹுல் புகாரி 4206. யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களின் காலில் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை கண்டேன். அவரிடம், 'அபூ முஸ்லிமே! இது என்ன காயம்?' என்று கேட்டேன். 'இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், 'ஸலமா தாக்கப்பட்டுவிட்டார்' என்று கூறினர். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாகத் துப்பினார்கள். (அதன்பின்னர்) இந்த நேரம் வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை" என்று ஸலமா(ரலி) கூறினார்.
    Volume:4,Book:64.
    பூரண குணம்மடைய அல்லாயிடத்தில் பிராத்திப்போம்.

    ReplyDelete
  4. இந்த சிறுவனுக்கு அல்லாஹ் நல்ல சுகத்தை கொடுப்பானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.