.

Pages

Saturday, October 4, 2014

மல்லிபட்டினத்தில் அதிரை அன்வர் நடத்தி வைத்த ஹஜ் பெருநாள் தொழுகை ! [ படங்கள் இணைப்பு ]

தமிழகத்தில் எதிர்வரும் [ 06-10-2014 ] அன்று ஹஜ் பெருநாள் கொண்டாட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் 'உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும்' என்ற சர்வதேசப்பிறை அடிப்படையில் மல்லிபட்டினத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகையை அதிரை அன்வர் அவர்கள் நடத்தி வைத்தார். முன்னதாக பெருநாள் தொழுகை குறித்து விளக்கி கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1 comment:

  1. நாம் வசிக்கும் இருப்பிடத்தில் பிறை காணாமல் பெருநாள் தொழுகை தொழுவது நபி வழி அல்ல மேலும் நபிகளார் காலத்தில் மக்காவிற்கும் மதினாவிற்கும் இடைப்பட்ட தூரத்தில் கூட பிறை ஒருநாள் முந்தியும் பிந்தியும் தென்பட்டதால் பெருநாள் தொழுகைகள் ஒருநாள் முந்தியும் பிந்தியும் இருதுள்ளதற்கான ஆதாரங்கள் அதிகம் உள்ளன . ஆனால் இன்றோ பல்லாயிர கணக்கான மைல்களை கடந்து வசிக்கும் நமக்கு இந்த சர்வதேச பிறை வணக்கம் எப்படி பொருந்தும் ??இதற்கான விபரங்களுக்கு தனக்கு சாதகமான வீண் விவாதங்கள் நிறைய பேசலாம் அது நல்லதல்ல ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.