இந்த வகையில் ஐந்தறிவு படைத்த மிருகங்களை விட ஆறறிவு படைத்த மனிதன் உலகத்தின் கண்முன்னால் கேவலமாகப் பார்க்கப்படுகிறான். காரணம் மனிதனைத்தவிர வேறு எந்த இனமும் தற்கொலை செய்துகொள்வதை தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டு தெருவில் திரியும் நாயோ, அனாதையாக விடப்பட்ட மாடோ , அடிபட்டு ஓடிப்போகும் பாம்போ கூட தங்களின் உயிர்களை தாங்களே மாய்த்துக் கொள்வதில்லை. ஆனால் மனதில் ஒரு சிறு சலனம் ஏற்பட்டுவிட்டாலும் சிந்திக்காத மனிதன் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
சில செய்திகளைப் பார்க்கும் போதும் படிக்கும்போதும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் சிலர் அதற்காக கூறும் காரணங்கள் மிகவும் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்துவிட்டு அதற்காக அதிகமான விருப்பங்கள் வரவில்லை என்ற காரணத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற செய்தி இந்த தற்கொலை எவ்வளவு மலிவான காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை உலகுக்குச் சொல்லும்.
ஒரு ஓய்வுபெற்ற ஐ பி எஸ் அதிகாரியான ஸ்ரீவாஸ் என்பவர், தனது மனைவி தன்னை வீட்டில் தனியாக வீட்டில் விட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப தாமதித்த காரணத்தால் தன்னைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி டில்லியிலிருந்து வெளியான வேளையில் உறுதிமிக்க காவல் துறையில் ஒரு உயர் அதிகாரியாக இப்படிப்பட்ட ஒரு கோழை எவ்வாறு பணியாற்றினார் என்று நம்மை மூக்கின் மேல் விரலைவைத்து சிந்திக்கத் தூண்டியது.
கல்லூரி மாணவிகளும், மாணவர்களும் விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ளாத நாட்களே இல்லை என்கிற அளவுக்கு நாடு முன்னேறிக் ( ? ) கொண்டு இருக்கிறது. இந்தியா தற்கொலைகளின் தலைநகரமாக மாறி வருகிறது என்ற தகவலை இந்திய தேசிய குற்றவியல் ஆணையம் எச்சரிக்கும் தகவலாகத் தருகிறது.
உலக சுகாதார நிறுவனமோ இன்னும் ஒருபடி மேலே போய் உலகின் எல்லா நாடுகளிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் அவை குறைவதற்கான வாய்ப்புக்களும் குறையாது என்றும் தோன்றுவதாக தனது பங்குக்குக் குறிப்பிடுகிறது. அத்துடன் இப்போது இருக்கும் நிலவரப்படி , உலகத்தில் ஒவ்வொரு 40 விநாடிகளுக்குள் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாகவும், வரும் 2020-ம் ஆண்டு 20 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
அதே உலக சுகாதார நிறுவனம், உலகத்திலே நடக்கும் தற்கொலைகளில் இந்தியாவில் மட்டும் 20 சதவிகிதம் நடந்துள்ளதாகவும், இங்கு 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும், அடுத்தபடியாக 38 வயதுக்கு கீழே உள்ளவர்களும், கடைசியில் வயதானவர்களும் இதை மேற்கொள்கிறார்கள் என்றும் அவர்கள் பெரும்பாலும் இனிமேல் எதற்காக வாழப்போகிறோம் என்ற விரக்தியிலேயே தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்வதாகவும் சொல்கிறது.
இந்திய தேசிய குற்றவியல் துறை, தற்கொலையைத் தேர்வு செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்து ஒரு அறிக்கை தந்துள்ளது. அந்த அறிக்கையில் மன அழுத்தம், அதிக வேலைப் பளு, அவமானப்படுத்தப்படுதல், கடன்சுமை, போதிய வருமானம் இன்மை, காதல் தோல்வி, குடும்பப் பிரச்னைகள் , வரதட்சணை கொடுமை, சமூகப் பாகுபாடுகள், தேர்வுகளில் தோல்வி, சக்திக்கு மீறிய படிப்புச்சுமை , கல்வி நிலையங்களில் ராகிங்க் போன்ற செயல்கள், தனிமையில் வாழும் கவனிப்பாரற்ற முதியவர்கள், தீராத நோய், பாலியல் குற்றங்கள், போதைப் பழக்கம், அவசரபுத்தி என்று பல்வேறு காரணங்களை பட்டியலிட்டுள்ளது.
பள்ளிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகள் முதல் கல்லூரிகளில் இளநிலை பட்ட வகுப்புகளில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்றும் இந்திய தேசிய குற்றவியல்துறை குறிப்பிடுகிறது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள தேர்ந்தெடுக்கும் இடங்களும் கல்லூரி அல்லது பள்ளி வளாகங்கள்தான்.
விவசாயிகளில் மராட்டிய மாநிலத்திலும் அதற்கடுத்து ஆந்திராவிலும்தான் அதிக அளவில் தற்கொலைகள் பதிவாகி இருக்கின்றன. விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் விவசாயத்துக்காக வாங்கிய கடன்களை பல்வேறு காரணங்களால் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் வாழ்வாதாரங்களுக்கான நிலங்கள், வட்டிக் கடனுக்காக பறிமுதல் செய்யப்படுமென்ற அச்சம்தான் காரணம் என்று அறியப்படுகிறது. பல நேரங்களில் அரசின் கெடுபிடி நடவடிக்கைகளும் விவசாயிகளின் தற்கொலைகளைத் தூண்டுகின்றன என்ற உண்மை, ஒரு விவசாய நாடு என்று கூறப்படும் இந்தியாவின் வெட்கங்கெட்டதனத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் போட்டு உடைத்தது.
குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. குடி, குடியைக் கெடுக்குமென்பது வெறும் வார்த்தைகளாக மது பாட்டில்களின் மீது ஒட்டப்படவில்ல. பலரது வாழ்க்கையிலும் அதுதான் ஒட்டப்பட்டு இருக்கிறது என்பது இதனால் தெரிகிறது.
தற்கொலைகள்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று குழம்பிய மனநிலையில், சின்னச் சின்ன தவறுகளுக்காக, இந்தச் சமூகம் எப்படி நம்மை பார்க்கும், இனி எப்படி வாழ முடியும் என்ற விரக்தியில் இருக்கும் போதுதான் தற்கொலைக்கான முதல்முடிவை அந்தச்சூழல் எடுக்க வைக்கிறது. அடுத்த கட்டமாக யாருமற்ற தனிமையும், தற்கொலை செய்து கொள்ள ஏதுவான சூழலும் இருந்துவிடுவதால் தற்கொலைகளை எளிதில் நிறைவேற்றி விடுகின்றன.
இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் என்ற மனநிலையில்தான் தற்கொலைகள் அதிகம் அரங்கேறுகின்றன. சமீபத்தில் ஒரு ஆய்வின் அடிப்படையில், பரம்பரை வழியாக வரும் மன அழுத்தமும், தற்கொலை செய்யத் தூண்டுவதாக சொல்கிறது. இப்படி சில குடும்பங்களையே பைத்தியக்காரக் குடும்பங்கள் என்று முத்திரை குத்தும் பழக்கமும் சமுதாயத்தில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்தக் குடும்பத்தில் பலர் தற்கொலை செய்வது மூலமே தங்களின் உயிர்களைப் போக்கி இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் முழுதாகவோ அல்லது ஓரளவுக்கோ மனநிலை பாதிக்கபட்டவர்களாக இருப்பார்கள்.
இன்றைய உலகம், நவீன மயமாதலில் உச்சத்தில் இருப்பதால் இன்டர்நெட், டி.வி என்று மனிதத் தொடர்புகளே இல்லாமல் எல்லாமே இயந்திரத்தனமான வாழ்வில் மூழ்கிவிடுவதால், மனித வாழ்வில் நடக்கும் அன்றாட சம்பவங்களில் வெற்றி - தோல்விகளை பக்குவப்பட்டு பார்க்கும் மனநிலை அல்லது உலக வாழ்வின் அனுபவம் பெற இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அதே சமயம் எதையும் மனம்விட்டு பேசும், குடும்ப கலந்துரையாடல் என்பதும் நவீன காலத்தில் பரபரப்பான வாழ்வில் மிகவும் குறைந்துவிட்டது. பெற்றோர்கள் வேலை, பணம் என ஓடுகிறார்கள். மேலும் அவர்கள் குழந்தைகளையும் நிர்ப்பந்தித்து மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று ஓட வைக்கிறார்கள். வாழ்வில் ஏற்படும் சறுக்கல்களையும் வீழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் மனங்கள் பக்குவப்படாததால் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் தற்கொலை என்பது, தனிநபர் தற்கொலைகளாகவும், குடும்பத்தோடு கூட்டு தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது. இதில் ஒரு பரிதாபமான விஷயம் என்னவென்றால் கூட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் இறந்து யாராவது ஒருவர் மட்டும் பிழைத்து அனாதைகளின் பட்டியலில் சேர்ந்துவிடுவதுதான்.
“வாழ்க்கை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள் ; தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உனக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார் “ என்று சொன்னான் ஒரு மேல்நாட்டு அறிஞன். தற்கொலை செய்யவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை சாவதற்கு பதில் வாழ்வதற்குப் பயன்படுத்தலாமே என்பதை இந்த எண்ணம் கொண்டவர்களுக்கு எடுத்துரைக்க ஒரு இயக்கம் வேண்டும். இப்படி சில இயக்கங்களை சில தன்னார்வத் தொண்டு அமைப்புகள்- பெண்ணுரிமை அமைப்புகள் சில நகரங்களில் நடத்தி வருகின்றன என்பது சற்று ஆறுதலான விஷயம்.
துன்பங்கள் நேரும்போதெல்லாம் தற்கொலை முடிவை எடுப்பதை மனித இனம் பழக்கமாக வைத்து இருந்தால் உலகில் ஒரு மனிதர் கூட வாழ முடியாது. துன்பங்களை வாழ்வில் சந்திக்காத எந்த மனிதரும் உலகில் இல்லை.
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்; ஆனால் அந்த உப்புக்கு வாழ்க்கையை இனிப்பாக மாற்றும் சக்தி உண்டு என்பதை துன்பங்களில் உழல்வோர் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.
தற்கொலைகளைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான சில வழிமுறைகளை மனோதத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்து இருக்கிறார்கள். அவற்றைப் பட்டியலிடலாம்.
குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டு பேச நேரத்தை ஒதுக்கவேண்டும். அடிக்கடி குடும்பத்தினருடன் அவுட்டிங்க் என்கிற வெளிப் போக்கு, சுற்றுலா ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை கொடுக்க வேண்டும். அவர்கள் மீது பெற்றோகள் தங்களின் ஆசைகளைத் திணிக்கக் கூடாது.
தனிமையை விரட்ட நல்ல நண்பர்கள், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை வாசித்தல், பிடித்த பாடல்களை கேட்டல், விளையாடுதல் தங்களுக்குப் பிடித்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் வளரும் பருவத்தை நட்பாக்கி, நல்ல நண்பனைபோல் அணுகி அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு, அதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை பெற்றோர் புரிய வைக்கவேண்டும்.
தற்கொலை எண்ணங்களை தவிர்க்க அரசே பள்ளி, கல்லூரிகளில் அதற்காக பிரத்யேக வகுப்புகள், ஆலோசனைகள், நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். எதையோ பறிகொடுத்தாற்போல் ஏகாந்தமாக இருக்கும் சிலரைக் கண்டறிந்து அவர்களை தனியே அழைத்துப் பேசும் கவுன்சலிங்க் முறைகளை கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி வைக்க வேண்டும்.
நிறைய மதிப்பெண்கள எடுக்கும் சிறந்த மாணவர்களின் மீது மட்டும் மேலும் மேலும் கவனத்தை வைக்காமல் மிகக் குறைந்த மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களையும் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் விதத்தில் பேசாமல் அன்போடு அணுகி அவர்களின் உண்மையான பிரச்னைகளுக்கு ஆலோசனைகளை சொல்லி கண்காணிக்க வேண்டும். சில பெரிய புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் இதற்காக தனி ஆசிரியர்களை நியமித்து இருக்கிறார்கள்.
தொழிற்சாலைகளில் கூட நல்ல உற்பத்தித்திறன் உள்ள தொழிலாளர்களை மட்டும் பாராட்டிப் பரிசு கொடுக்காமல் குறைந்த உற்பத்தித் திறன் உள்ளவர்களையும் அவர்களது பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்க்கும் ஆலோசனைகளை வழங்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் மற்றும் தொழிற்சாலைகளில் தற்கொலை தவறு என்பது பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சிகள் பற்றிய பாடங்கள் நடத்த வேண்டும்.
வயதானவர்களுக்கு அன்பும், ஆறுதலும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். இயன்றவரை, .அவர்களை கூடவே வைத்து கவனிக்க வேண்டும். இதற்கு இயலாதவர்கள் சிறந்த பராமரிக்கும் நிலையங்களில் செலவைப் பார்க்காமல் அவர்களை வைத்துப் பராமரிப்பதுடன் அத்தோடு அவர்களை கை கழுவி விடாமல் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது அவர்களுடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்துக் கொள்ள வேண்டும்.
ஏதேனும் உளவியல் சிக்கலில் இருப்பர்களுக்கு இலவச ஆலோசனை உதவி மையம் வைத்து மன அழுத்தம் குறைய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாழ நினைத்தால் வாழலாம்!
வழியா இல்லை பூமியில் ?
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா!
வாழ்க்கை வாழ்வதற்குதான்!' வந்த விலைக்கு விற்பதற்கல்ல. பிறப்பது ஒரு முறைதான் அதில் எதற்காக இறப்பதை பற்றி சிந்திக்க வேண்டும்!

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான ஆழமான ஆக்கம், எதிர்நீச்சல் போடத்தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கும் கடைசி கட்டம்தான் இந்த போக்கு.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
ஆக்கம் அற்புதம் நன்றி!
ReplyDeleteஸஹீஹுல் புகாரி 1364. ஹஸன் அறிவித்தார். ஜுன்துப்(ரலி), இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப்(ரலி), நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார். 'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume:2,Book:23.
ஸஹீஹுல் புகாரி 1365. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (அயூதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்." அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:2,Book:23.
ஸஹீஹுல் புகாரி 2653. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.
Volume:3,Book:52.
ஸஹீஹுல் புகாரி 6105. 'இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆம்விடுகிறார் எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.
Volume:6,Book:78.
Nice article
ReplyDeleteThanks a j Mohideen for hadeeth
ஜப்பானில் அதிகம் தற்கொலைகள் நடைபெறும் காரணம் அவர்களின் குறிக்கோள்கள் எட்டப்படாத சூழல் இதனால் இங்கு இவர்கள் பேய்களுக்கு பயப்படும் பழக்கமும் உள்ளது 70 வயதுகளை தாண்டியும் வேலை செய்யும் ஜப்பானியர்கள் உலகத்தில் இருக்கும் ஏனைய மக்களைப்போல் பொழுதுபோக்கு ஈடுபாடுகளும் இவர்களிடத்தில் குறைவு இஸ்லாம் பற்றி விளங்காதோர் மற்றும் தெரியாதோர் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்வது என்பதே நிதர்சன உண்மை .
ReplyDeleteதற்கொலை என்பது ஒரு நொடி பைத்தியகாரத்தனம் இவர்களுக்கு வாழ்க்கை சூழல் வாழபிடிக்காத மன உளைச்சல் வரும்போது இருப்பிடத்தையும் மனிதர்களையும் மாற்றி கொள்ளலாம் அப்போது புதியமக்கள் அறிமுகம் கிடைக்கபெறும் .
இந்த தற்கொலைக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை .ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை சிலமக்களால் பரிந்துரைக்கபடுகின்றது இதன்படி வாழ்வோர் மனைவி பிடிக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர் ....இதற்குதான் இஸ்லாம் காட்டிய வழியில் தலாக் மற்றும் மறு விவாகம் தெளிவாக கூறப்பட்டுள்ளது .
தற்க்கொலை செய்து கொள்வது கோழைத் தனம் மட்டுமல்ல குடும்பத்தையே நாசம் செய்கின்ற ஒரு செயலாகும். தற்க்கொலையால் தான் பெற்ற குழந்தைகள் அனாதரவற்று போகின்றன. கணவனோ, மனைவியோ மறுமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு வாழ்வில் அத்தனையும் மாறுபட்டு காலத்திற்கும் நிம்மதியில்லாமல் நிர்க்கதியாகி விடுகின்றன. தப்பு எங்கோ நிகழ காலத்திற்கும் குடும்பத்தார்களுக்கு பிறரின் வசைச் சொல்லுக்கு ஆளாக நேரிடுகின்றன. ஆகவே இந்த சுயநலப் போக்கை முடிவெடுப்பது தரமான செயலல்ல. வாழ்க்கை ஒரு போர்க்களம் போலத்தான் அதை எதிர்கொண்டு வாழ்வது தான் புத்திசாலித்தனமாகும்.
ReplyDeleteஇதைப் பற்றி கடந்த வருடம் ''பிரச்சனைகள் தீர தரக் கொலை ஒரு தீர்வாகுமா.?'' என்கிற தலைப்பில் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.
தற்கொலை எண்ணத்தை அறவே போக்கும் தலையங்கமாக இருக்கிறது !
ReplyDeleteஇந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது.
//சேக்கனா M. நிஜாம்October 10, 2014 at 4:28 PM
ReplyDeleteதற்கொலை எண்ணத்தை அறவே போக்கும் தலையங்கமாக இருக்கிறது !
இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது.//
2013 ல் மட்டும் 16927 தற்கொலை இதில் எத்தனை கொலைகள் தற்கொலையாக மற்ற பட்டதோ???
அன்மையில் ஏற்பட்ட தற்கொலைகள் இவ்வாக்கம் எழுத தூண்டியிருக்கலாம்.
ReplyDeleteதன்னுடைய விரகத்தி தற்கொலைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பிறர்க்காக தற்கொலை செய்ய எப்படி முடியும் !? அதிலும் ஒரு இலாபம் இருக்கலாமோ ! உணர்ச்சி வசப்பட்டு தன்னை மாய்ப்பவர் தற்கொலைகளில் அற்பமாகவே இருக்கலாம். அதிலும் ஏமாற்றம், மானப்பிரச்சனை, ரோஷம், இயலாமைப் போன்ற காரணங்களுக்காகவும் இருக்கலாம். அரசியலில் தற்கொலைகள் அரசியலுக்கானவைகளே !
தற்கொலைக்கான காரணங்களின் பட்டியலில் அரசியல் தலைவர்கள் கைது செய்யபட்டாலோ சிறையிலடைக்கபட்டாலோ அவர்களை இவ்வளவு வருடங்கள் நம்பியிருந்த தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வது விடுபட்டுப் போயிருக்கிறது.
ReplyDeleteதமிழகம் தற்கொலையில் முன்னிலை வகிப்பதற்கு இதுவே காரணமாகக் கூட இருக்கலாம்.
வியட்நாமை அமெரிக்கர்கள் ஆக்ரமித்தபோது வியட்நாமின் புத்த பிட்சுகள் தீக்குளித்து தங்களின் எதிர்ப்பைக் காட்டினார்கள்.
இன்றும் கூட திபெத்தியர்கள் சீனாவுக்கு எதிராக தங்களின் அரசியல் எதிர்ப்பைக் காட்ட தீக்குளிக்கிறார்கள்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல மாணவர்கள் தீக்குளித்தார்கள்.
இன்று ஒரு அரசியல் கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டதற்காக தற்கொலைகள் செய்யப்படுவதை ஊடகங்கள் ஊக்கப்படுத்தும் விதங்களில் செய்திகளைப் போடுகின்றன.
அரசியல் தலைவர்கள் சிறையில் அடைப்க்கபட்டு தண்டனை வழங்குவதற்காக தற்கொலை செய்துகொள்பவர்களில் இரண்டு வகைகள் இருக்கலாம்.
அவற்றில் ஒன்று சிறையிடப்பட்ட தலைவர் மேல் இருந்த பாசம் பற்று பிரியம் அன்பு ஆகியவை .
இரண்டாவது இவ்வளவு காலம் நாம் நம்பிய ஒரு தலைவர் இவ்வளவு மோசமான ஒரு குற்றவாளியா? என்ற விரக்தியில் கூட தற்கொலை செய்துகொள்ளலாம். ஊடகங்கள்தான் விசாரித்து செய்தி போட வேண்டும்.
தற்கொலையில்மோசமானதுதன்கட்சிதலைவனைசிறையில் அடைத்தால்தொண்டன்தற்கொலைசெய்துகொள்வது .தலைவனால்சொத்துசேர்த்தவன்பதவிசுகம்கண்டவன்எவனும் செய்வதுதற்கொலைசெயயாதநிலையில்இந்தமடச்சாம்பிராணிதற்கொலைசெய்வதுஏன்என்றுபுரியவில்லை.தலைவனுக்கோ எண்ணில்அடங்காசின்னவீடுகள்இருந்தும்ஒருவீடுகூட தற்கொலைசெய்துகொள்ளவில்லையேஏன்என்றுசிந்தித்துபார்த்திருந்தால்தற்கொலைசெய்வதைநிறுத்திவாழதுணிந்திருப்பான்.
ReplyDeleteதற்க்கொலைகோழைதனம்என்பதைவிடஅறியாமையும்அவசர புத்தியும்ஒருகாரணமாய்இருக்கலாம்.பொதுநலஇயக்கங்கள் மனோவியல்விற்ப்பன்னர்களைகொண்டுவந்துசெமினார் நடத்தலாம்
ReplyDelete