மரைக்கா பள்ளியில் முதல் பெருநாள் தொழுகை சரியாக 6 மணிக்கும் மறு தொழுகை மீண்டும் 8 மணிக்கும் நடைபெறும், அல் அமீன் பள்ளியில் காலை 7 மணிக்கும், இஜாபா பள்ளி 7 மணிக்கும், செக்கடி பள்ளி 7.30 மணிக்கும், பெரிய ஜும்மாப் பள்ளி, தக்வா பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி, ஹனீப் பள்ளி, புதுப்பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, தரகர் தெரு [ ஆஷாத் நகர் ] ஜும்மாப்பள்ளி, மேலத்தெரு அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளி, AJ பள்ளி ஆகிய பள்ளிகளில் காலை 8 மணிக்கும், பிலால் நகர் பள்ளி மற்றும் AJ பள்ளி ஆகியவற்றில் காலை 8.30 மணிக்கும் பெருநாள் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொழுகைக்கு முன்னர் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகையை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் அமைந்துள்ள கிராணி மைதானத்தில் காலை சரியாக 7.00 மணிக்கு நடைபெறும் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் மேலத்தெரு சானவயலில் காலை சரியாக 7.30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும் மின்னொளியில் களைகட்டி காணப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக ஜவுளிக்கடைகள், தொப்பிக்கடைகள், இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் இனிப்பகங்கள் ஆகியவற்றில் வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன. சலூன் கடைகளில் சிறுவர் - பெரியவர் - இளைஞர் கூட்டம் அலைமோதுகின்றன. புதிதாக தைய்க்க கொடுத்துள்ள உடைகளை வாங்குவதற்காக டைலர் கடைகளில் கூட்டங்கள் கூடுதலாக காணப்பட்டது.
நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன. அதிரை மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.













Thakva palle
ReplyDeletepearunal
namas
kalai
8am
nadaipearum
9 am thavaru.
Super appu
ReplyDelete