.

Pages

Sunday, October 5, 2014

திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அதிரை வருகை !

அதிரை TIYA அமைப்பின் அமீரக செயலாளராக பொறுப்பு வகிப்பவர் நூர் முஹம்மது. துபாய் நாட்டில் பணிபுரியும் இவர் சமீபத்தில் விடுமுறையில் தாயகம் வந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வருகிறார்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள், நூர் முஹம்மது அவர்களின் நட்பு ரீதியான அழைப்பை ஏற்று இன்று மாலை அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

சந்திப்பின் போது பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.கே. குமார், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிரை மைதீன், முகைதீன் அப்துல் காதர், அஸ்ரப் அலி, ஹாஜா நசுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ நம்மிடம் கூறும் போது...
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.