.

Pages

Friday, October 10, 2014

குளு குளு ஊட்டி ! [ படங்களுடன் ஒரு பார்வை ]

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட பல மலைகளை கொண்ட ஊட்டியின் ஒரிஜினல் பெயர் உதக மண்டலம் என்பதாகும். ஆங்கிலேயர் காலம் முதல் ஊட்டியென்று செல்லமாக இந்த அழகு தவழும் ஊரை அழைத்ததால் நாளடைவில் ஊட்டி என்ற பெயரே அனைவரின் மனதில் நிலைகொண்டு விட்டது.

ஊட்டியென்ற பெயரைக் கேட்டாலே உடலும் உள்ளமும் தானாகவே குளிரச் செய்யும். கண்களும் மனதும் காணத் துடிக்கும். அதனால் தானோ என்னவோ ஊட்டி மலைகளின் ராணியாகத் திகழ்கிறது போலும்.! அதுமட்டுமல்ல ஊட்டியை தென்னகத்தின் காஷ்மீர் என்றுகூடச் சொல்லலாம்.

எந்நேரமும் குளிர் சீதோசன நிலையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ஊட்டியின் அடுக்கடுக்கான பச்சைப் பசேலென இருக்கும் மலைகளை கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கலாம்.

கண்ணுக்கெட்டும் தூரம் வரை தேயிலைத் தோட்டமும் கண்களையும் உடலையும் உரசிச் செல்லும் மேகமும் மிதமான குளிர்க்காற்றும் கண்கொள்ளாக் காட்சியாக திரும்பத் திரும்ப ஊட்டிக்கு வரத் தூண்டும்.ஊட்டியைச் சுற்றியுள்ள பரந்து கிடக்கும் பசுமையும் பள்ளத்தாக்கும் மலையும் மலைசார்ந்த வனப்பகுதியும் ஆகா...என்ன அழகு எத்தனையழகு கோடி இயற்கை கொட்டிக்கிடக்கும் அழகு என வர்ணிக்கத் தோன்றும்படி கொள்ளையழகைக் கொண்டுயிருக்கும்.

இன்னும் சொல்வதானால் அத்தனையழகும் மொத்தமாக கொட்டிக் கிடக்கும் ஊட்டியே தனியழகு .ஜில்லென்ற ஊட்டிக் காற்றில் அந்த சிவந்த மாலைப் பொழுதில் நறுமணப் பூக்களின் மத்தியில் மல்லக்கப்படுத்து மேகத்தையும் மேக முகில்களையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது மெல்லிய பனித்துளி மேனியில்படும்போது அடடா ...மனது அளவிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு ஆனந்தமாக இருக்கும் .இப்படி இன்னும் பல இயற்கைகளின் இனம்தெரியா அனுபவங்களை அனுபவித்து மகிழலாம். ஊட்டி தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நம் நாட்டின் தலைசிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஊட்டியில் தற்போது இரண்டாவது சீசன் களைகட்டியுள்ள நிலையில் இந்த வாரம் ஊட்டிக்கு சென்று கண்களுக்கும் மனதிற்கும் இயற்கையை விருந்தாக்கிவிட்டு வந்திருக்கும் அதிரை நியூஸ் வாசகர் 'அபூ இஸ்ரா' எடுத்தனுப்பிய ஊட்டியின் வண்ணப் படங்கள் வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கு இதோ...

செய்தி தொகுப்பு : அதிரை மெய்சா
படங்கள் : அபூ இஸ்ரா











4 comments:

  1. அருமையான க்ளிக், அழகான சுற்றுலா

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    ஊட்டி நகரத்தை அலங்கரித்த, நடக்கும் பூக்கள், நடக்கா பூக்களுக்கு ‎நன்றிகள் பல, நடக்கும் பூக்கள் இன்னும் பல இடங்களுக்கு நடந்து சென்று ‎நிறைய போட்டோ எடுத்து எங்கள் பார்வைக்கு தாருங்கள்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. ஊட்டிக்கு போன குட்டிகள்( ராத்தக்களின் )லூட்டிகள் ரொம்பவும் அருமை .

    ReplyDelete
  4. இந்தப் புகைப் படங்களை பார்த்ததும் எப்படியும் இந்தமுறை விடுப்பில் வரும்போது ஊட்டிக்கு போகவேண்டும் என எண்ணம் வந்து விட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.