.

Pages

Tuesday, October 7, 2014

அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கடற்கரைத்தெரு மக்கள்!

அதிரை கடற்கரைத்தெருவில் பல நாட்களாக தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சியில் பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் கவுன்சிலர் சே.மு.ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில், கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போரட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து அதிரை நியூஸ் செய்தியாளரிடம் பேசிய கவுன்சிலர் ஹாஜா முகைதீன்,  தண்ணீர் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படவில்லையெனில், சாலை மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.


1 comment:

  1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நடவடிக்கை இதுதானா? ADMK தொண்டரில் இவர் மட்டும் பொது பிரச்சனை கையில் எடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது - வாழ்த்துக்கள், சாலை மறியல் வேண்டாம் பெரிய பூட்டை வாங்கி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டுடுங்க, ஏதாவது சொல்லி அதிகாரிகள் சொதப்பிடுறாங்க,. விடாதிங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.