.

Pages

Tuesday, May 5, 2015

வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ஆன்-லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஒருவர் தனது வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் http://teda.in/apply/ இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும்.

இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக விண்ணப்பங்கள் 30 நாள் கால அவகாசத்தில் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும். 

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி.

    இதில் இன்னும் சில விபரங்கள் சேர்க்க வேண்டும். மேகமூட்டம் இல்லாமல் நன்கு வெயில் உள்ள நாட்களில் 1000 வாட் திறனுக்கு தினசரி 3 to 4 யூனிட் சராசரியாக உற்பத்தி ஆகும். ஒரு வீட்டில் பயன்படுத்தும் மின்சாரம் மாதம் 100 யூனிட் என்றால், மீதமிருக்கும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் அதை நம்மிடம் எடுத்துக்கொண்டு(இதற்காக ஸ்பெஷல் மீட்டர், மின்வாரியம் பொறுத்தும்)., அடுத்தடுத்த மாதங்களில் நம் பயன்பாடு 120 யூனிட்டை கடந்துவிட்டால் இந்த கூடுதல் பயன்பாட்டை, முன்னர் உபரியாக வந்த யூனிட்டை சமன்படுத்தி பில்லிங் பண்ணுவார்கள்.

    மேலும் விபரங்களுக்கு 3M சோலார், எவர்கோல்ட் காம்ப்லெக்ஸ், மெயின் ரோட். மொபைல்: 9080595853, டெலிபோன்:242801 ஐ தொடர்பு கொள்ளவும். மானியத்தில் சூரிய ஒளி அமைக்கவும் ஏற்பாடு செய்து தருகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டு 1 வருட மேளாகிறது இது வரை எந்த பயனாளியும் மான்யம் பெறபட்டரா என்பதை தாங்கள் முழு விபரத்தை அறிவித்தால் மக்கள் பயன் பெறுவார்கள். அரசியல் வாதிகள் திட்டங்களை அறிவிப்பது தினசரி நாளிதழில் முன் பக்க செய்தி வர வேண்டி தான், எந்த திட்டத்திலும் பயனாளிகள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது என்பது சாமான்ய மக்களுக்கு நன்கு புரியும். மேலும் விபரங்கள் தாருங்கள்.

      Delete
  4. எங்கள் நிறுவனம் மாறலாக இருவருக்கு ஏற்பாடு செய்து, மின்வாரிய பொறியாளர்கள் பார்வையிட்டு நம்பர் ஆகிவிட்டது, பணம் கட்டி விட்டால் சூரிய ஒளி தகடு மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு விடும்.

    ReplyDelete
  5. மின்சூரிய தகட்டின் விலை மிகை படுத்தி விற்கப்படுகின்றது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.