.

Pages

Saturday, March 2, 2013

அதிரை பைத்துல்மாலின் பிப்ரவரி மாத சேவை மற்றும் செயல்பாடுகள் !


அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி:02/03/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் – பிப்ரவரி2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
3
ஹாஜா நகர்- 10 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,000.00
4
புதுத்தெரு- 17 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,100.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
7
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
8
சின்னநெசவுத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
9
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
10
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
11
பிலால் நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
12
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
13
பழஞ்செட்டித் தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
நடுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால்த் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
செட்டி தோப்பு காலனிநபர் ஒருவருக்கு
300.00
23
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
24
சுரைக்காய் கொல்லைநபர் ஒருவருக்கு
300.00
25
மண்ணப்பங்குளம் தென்கரை நபர் ஒருவருக்கு
300.00
26
சாயக்காரத் தெரு  நபர் ஒருவருக்கு
300.00


                                                            மொத்தம் 119 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 35,700.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு - நபர் ஒருவருக்கு
20,000
2
சுப்ரமணியன்கோயில் தெரு  - நபர் ஒருவருக்கு
20,000
3
பிலால் நகர் – நபர் ஒருவருக்கு
20,000
4
ஆஸ்பத்திரித் தெரு  - நபர் ஒருவருக்கு
20,000
                             நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
80,000

திரும்பி வந்த கடன் தொகை
.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு- 3 நபர்கள்
  16,500
2
பெரிய நெசவுத் தெரு – 2 நபர்கள்
 7,000
3
புதுத்தெரு – 2 நபர்கள்
 10,000
4
காலியார் தெரு  - 2 நபர்கள்
20,000
5
ஆஸ்பத்திரித் தெரு ஒரு நபர்
20,000
6
சின்ன நெசவுத் தெரு - ஒரு நபர்
 1,000
7
C.M.P லேன் - ஒரு நபர்
20,000
8
தக்வா பள்ளி தெரு - ஒரு நபர்
2,000
9
புதுமனைத் தெரு  - 2 நபர்கள்
25,000
10
செட்டி தெரு ஒரு நபர்
14,000
11
புதுஆலடித்தெரு ஒரு நபர்
3,000
12
கடற்கரைத் தெரு - 2 நபர்கள்
21,500
19 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
1,60,000

திரும்பி வந்த நகையில்லாக்கடன் தொகை
விபரம்
தொகை
மேலத் தெரு - ஒரு நபர்
2,000.00

சதகா வரவு
அதிரைவாசிகள்
2,500.00
மேலத்தெருவை சேர்ந்த ஒரு நபர்
600.00
ஜமாலுதீன் (துபாய்)
12,000.00
மொத்தம்
15,100.00

சிறு தொழில்  கடன் வரவு
மொத்தம் நபரிடமிருந்து
150.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
மொத்தம் நபர்களிடமிருந்து
10,300.00

திருமண உதவி
காலியார் தெருவை சேர்ந்த 2 நபர்கள் தலா ரூ.2000 வீதம் மொத்தம்
4,000.00

இதர உதவிகள்
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
400.00
செலவு
500.00

சென்னை பல்லாவரம் கட்டிடம்
காலி செய்வதற்கான முன் பணம் கொடுத்தல்
2,00,000.00

இதர வரவுகள்
விபரம்
தொகை
ABM அலுவலக தென்னை மர தேங்காய் விற்ற வகையில்
100.00
ABM அலுவலக மேல்மாடி கொட்டகை பிரித்த வகையில் கிடைத்த சவுக்கு விற்ற வகையில்
500.00
                                             மொத்தம் ரூபாய்
600.00

கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு – அறைகள் வருட வாடகை
25,200.00
துபாய் ஃபேன்சி ஸ்டோர் – மாத வாடகை 
1,200.00
சென்னை பல்லாவரம் -  2 மாத வாடகை (Dec’12,Jan’13)   தலா ரூ.3000 வீதம் மொத்தம்
6,000.00
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு – அறைகள் மாத வாடகை
2,100.00
                                             மொத்தம் ரூபாய்
34,500.00

அலுவலக செலவுகள்
.எண்
விபரம்
தொகை
1
மின்சார கட்டணம்
335.00
2
டெலிபோன் & இன்டர்நெட்
910.00
3
ஸ்டேஷனரி செலவு
121.00
4
பொது செலவு
324.00
5
தபால் ஸ்டாம்ப் செலவு
250.00
                                             மொத்தம் ரூபாய்
1,940.00

சம்பள பட்டுவாடா
விபரம்
சம்பளம்
மேலாளர்
5,000.00
கணினி இயக்குனர்
5,000.00
துப்புரவு தொழிலாளி
300.00
                                                         மொத்தம் ரூபாய்
10,300.00

நாள்: 28-02-2013
மாதாந்திரக்கூட்டம்
நிகழ்ச்சி நிரல்

தலைமை                                             : ஹாஜி. ஜனாப் S. பரகத் (தலைவர்)
கிரா-அத்                                             : ஹாஜி. ஜனாப் M.Z. அப்துல் மாலிக் (இணைப் பொருளாளர்)     
வரவேற்புரை                                      : ஹாஜி. ஜனாப் A.S. அஹமத் ஜலீல் (இணைச் செயலாளர்)
மாதாந்திர அறிக்கை வாசித்தல்         : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது (செயலாளர்)

விவாத பொருள்          :          
                                     
1. பல்லாவரம் கட்டிடம் காலி செய்ய அட்வான்ஸ் தொகை கொடுத்தல்.
                                                2. பள்ளிக்கொண்டான் இடம் விற்பது.
                                                3. குவைத் கிளை – ஜனாப் ஜைனல் ஹுசைன் (தலைவர்), U.கமருஜ்ஜமான்                                                              (துணைத் தலைவர்), S. முஹம்மது ஜமால் (துணைச் செயலாளர்) மற்றும்                                                                             M.சுல்தான் அப்துல் காதர் ஆகியோர்களின் கருத்துப் பரிமாற்றம்
                                                4. அதிரை பைத்துல்மால் கட்டிட வாடகை சம்பந்தமாக.
                                                5. நகைக்கடன் வழங்கல் தர்காலிகமாக நிறுத்திவைப்பு.
                                                6. பென்ஷன் நபர்களை மறுபரிசீலனை செய்தல்.
                                                7. மஹல்லாஹ் மீட்டிங் சம்பந்தமாக.
                                                8. உயர்க்கல்வித் திட்டம். 

தீர்மானம்

11.    பல்லாவரம் கட்டிடம் காலி செய்ய அட்வான்ஸ் ரூ 2,00,000/- (ரூபாய்: இரண்டு லட்சம் மட்டும்) செலுத்தப்பட்டது, காலி செய்த பிறகு விற்பது சம்பந்தமாக பேசுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22.    பள்ளிகொண்டான் மனையை நல்ல விலை வரும்பொழுது விற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
33.       குவைத் சார்பில் துணைத்தலைவர் U.கமருஜ்ஜமான், துணைச் செயலாளர் S. முஹம்மது ஜமால் மற்றும் நிர்வாக உறுப்பினர் M.சுல்தான் அப்துல் காதர் அவர்கள் கூறிய கருத்துக்களை ஏற்று அதன்படி செயல்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
44.       மாதம் தவறாமல் ABM’க்கு சொந்தமான வணிக வளாக கட்டிட வாடகையை வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
55.       நிதி பற்றாக்குறையினால் நகைக்கடனை தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
66.       பென்ஷன் வாங்குபவர்களை நேரடியாக விசாரித்து மறுபரிசீலனை செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
77.       அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டம் இம்மாதம் மார்ச் முதல் ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
88.       இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு (2013-2014) முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றியுரை    :  ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முஹைதீன் (துணை தலைவர்)

வஸ்ஸலாம் ! ! !

இப்படிக்கு
அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

அதிரை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்காக மார்க்கக் கல்வி பயிற்சி !

அதிரை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்காக மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் [ வெள்ளிக்கிழமை தவிர ] காலை 6.30  மணி முதல்  8.00 மணி  வரை நடைபெற்று வருகின்றது. மார்க்க கல்வி பயின்ற ஆசிரியர்களால் குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொது அறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்புகளில் சிறுவர், சிறுமிகள் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அனைவரையும் வியக்க வைக்கிறது. மாதம் ஒரு முறை சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை வரவழைத்து குழந்தைகளின் நிலைகளை ஆசிரியர் குழுவினர் அவர்களுக்கு விளக்கி கூறுவது குறிப்பிடத்தக்கது.
இருபத்திஒன்பது மஸ்ஜித்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க நமதூரில் குறிப்பிட்ட சில மஸ்ஜித்களில் மட்டுமே சிறுவர், சிறுமிகளுக்கான “குரான் ஓதுதல் பயிற்சிகளின்” வகுப்புகள் நடைபெறுகின்றன. இது வருந்தத்தக்கதாகும்.

உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து இது போன்ற பயிற்சி வகுப்புகளை துவங்குவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

படங்கள் உதவி : சேனா மூனா [ டிஜிடெக் ]

அதிரையரின் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் !

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கார்காவயல் என்ற இடத்தில் உள்ளது மனோரா பாலிடெக்னிக் கல்லூரி. அதிரையர்கள் பங்குதாரர்களாக செயல்படும் இந்த கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் எஸ்.எம்.முகமது முகைதீன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.சரவணன் வரவேற்றார். முகாமில் 13 நிறுவனங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். மொத்தம் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், தாளாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் தொழில் நிறுவன மேலாளர்களையும், பணிநியமன ஆணை பெற்ற மாணவர்களையும் பாராட்டி பேசினர். முடிவில் கல்லூரி பணி நியமன அலுவலர் சி.அட்சயகுமார் நன்றி கூறினார்.

நன்றி : தினத்தந்தி

ஜன்ங் புட் : குழந்தைகளே உஷார் !


இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே நோய்கள் வந்துவிடுகின்றன. அதற்கு போதிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் தான் காரணம். மேலும் இந்த மாதிரியான பழக்கவழக்கங்கள் வருவதற்கு மற்றொரு பெரும் காரணம், இந்த பழக்கவழக்கங்கள் சிறுவயதிலிருந்து பழகியது. எனவே அத்தகைய ஆரோக்கியமற்ற பழக்கத்தை குழந்தைகள் பின்பற்றாமல் இருப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.ஏனெனில் இன்றைய நவீன உலகில் மார்டன் என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு சென்று ஜன்ங் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு அதன் சுவையானது நாவில் ஒட்டிக் கொண்டு, அதனையே அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவர். பின் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால் கூட, அதை விரும்பி சாப்பிடாமல், அடம்பிடித்து தவிர்த்து விடுவர். எனவே குழந்தைகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை கொடுத்து, அத்துடன் நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.

எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள்.

மிக முக்கியமான விசியத்தை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ளகிறேன் நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் ‘இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. விளைவு குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன  ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது என்று அறியவருகிறது.
என்னவே  மேலே படித்ததை மனதில் பதிந்து கொண்டு உங்களது குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பரிந்துரை : மான் A. ஷேக்  [ கனடா ] 
நன்றி :  தட்ஸ்தமிழ்

Friday, March 1, 2013

அதிரை பிலால் நகரில் ADT யின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

இன்று [ 01.03.2013 ] மாலை 5.30 மணியளவில் அதிரை பிலால் நகரில் முதன் முதலாக அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ADT யின் அங்கமான இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] அருகே நடைபெற்றது.
கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.



பொதுக்கூட்டத்திற்கு ADT யின் தலைவர் 'தமிழ் அறிஞர்' அதிரை அஹமத் B.A.  அவர்கள்  தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார் 

'மருமைச் சிந்தனை' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார் மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்.

ADT யின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் ADT உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த JAQHன் மாநில துணைத்தலைவர் சகோ. கோவை அய்யூப் அவர்கள் 'படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் இறுதியில் ADT யின் துணைத்தலைவர் சகோ. B. ஜமாலுத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். 

பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என வாகன வசதிகளும், தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதிரை BVC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !


அதிரை பீச் கைபந்து கழகம் [ BVC ]  சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நமதூர் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மைதானத்தில் இன்று [ 01-03-2013 ]  இரவு 7.00 மணியளவில் சிறப்பாக துவங்க இருக்கின்றது. இன்றைய போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து வர இருக்கின்ற ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருகின்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்குகொள்ள இருக்கின்ற இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிரை பீச் கைபந்து கழகம் [ BVC ]  சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லிப்பட்டினத்தில் வலையில் சிக்கியது ஓரக்கத்தாளை !

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் ஓரக்கத்தாளை எனும் அதிசய மீன்கள் சிக்கியது. மொத்தம் 202 மீன்கள் சிக்கி இருந்தது.

ஒரு மீன் 20 முதல் 30 கிலோ வரை எடைகொண்டதாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இவ்வகை மீன்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக ரூ.60 லட்சத் திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் முகம்மது யூசுப் கூறுகையில்,
'இவ்வகை மீன்களில் உள்ள நெட்டி என்ற உறுப்பு மருத்துவ குணம் உடையது. இவ்வகை மீன்கள் 30 ஆண்டுகளுக்கு முன் இத்துறைமுகத்தில் 7 சிக்கியது. தற்போது 202 மீன்கள் சிக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை எடை உள்ளது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்காக வியாபாரிகள் ரூ.60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்' என்றார்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய ஓரக்கத்தாளை மீன்களை ரூ.60 லட்சத்துக்கு வாங்கிய வியாபாரிகள் அதை லோடு ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர்.

நன்றி : செல்வகுமார்
ரிப்போர்ட்டர் - தினகரன்