.

Pages

Friday, May 3, 2013

அதிரை பொருட்காட்சியில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் ஆய்வு !

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்தப் பொருட்காட்சியில் வர்த்தக நிறுவனங்கள் சார்பாக ஸ்டால்கள் அமைத்து தங்களின் பொருட்களை பொதுமக்கள் மத்தியில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக பார்வையாளர்கள் நாள் ஒன்றுக்கு 2250 முதல் 2500 வரை வந்து செல்கின்றனர். மேலும் புத்தக ஸ்டால், இலவச கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் இனிப்பு நீர் பரிசோதனைகள் ஆகியன அங்கே இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.

மேலும் பொதுமக்களை மகிழ்விக்க ராட்சஸ ராட்டணங்கள், ஊஞ்சல்கள்,  உயர்ந்த மனிதன், அபூர்வ விலங்கினங்கள், அபூர்வ பறவைகள் போன்றவை இடம்பெற்றுள்ளதோடு சிறுவர் சிறுமிகளுக்காக குதிரை சவாரி, ஒட்டக சவாரி மற்றும் அவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இத்துணை பாசிட்டிவான விசயங்கள் இருந்தும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறம்பாக கரோக்கி மூலம் ஒலிப்பரப்பு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியால் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகள் சிலரும் குறை பட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அதிரையில் வசிக்கக்கூடிய மார்க்க அறிஞர்கள் பொருட்காட்சியை எடுத்து நடத்துகின்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை ஏற்ற நிர்வாகத்தினர் இன்று [ 03-05-2013 ] முதல் கரோக்கி மூலம் ஒலிப்பரப்பு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இதனால் இசை நிகழ்ச்சி நடத்தும் மேடை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. ரத்து செய்ததை அடுத்து பொருட்காட்சியில் இன்று அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. வியாபாரமும் படு ஜோராக நடைபெறுவதாக வர்த்தக நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.
பொருட்காட்சியில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் ஆய்வு !
அதிரையைச் சார்ந்த தனி நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று [ 03-05-2013 ] பொருட்காட்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் ஆய்வை மேற்கொண்டார்.

இதுகுறித்து 'அதிரை நியூஸ்' சார்பாக அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் கருத்தை பெற்றோம்...

அதிரை கலாச்சார மற்றும் வர்த்தக அமைப்பின் சார்பாக நடத்தும் இந்த பொருட்காட்சி இந்திய சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. மேலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்க்கென்று பதிமூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த ஆய்வின் மூலம் தான் திருப்தி அடைவதாகவும் கருத்து தெரிவித்தார்.

கிரிக்கெட் தொடர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற AFCC அணியினர் !

கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து அதிரையில் அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] சார்பாக மாவட்ட அளவில் Twenty-20 கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

சென்ற [23-04-2013 ] அன்று துவங்கிய முதல் போட்டி இன்றுடன் நிறைவுற்றது. இன்று [ 02-05-2013 ] மதியம் 2 மணியளவில் AFCC கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய அதிரை AFCC அணியினரும், தஞ்சை SGCC அணியினரும் மோதினார்.

முன்னதாக தாஸ் வென்ற AFCC அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடினர். இதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146  ரன்கள் எடுத்து இருந்தனர். AFCC அணியினரின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் அவர்கள் 57 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தனி நபர் அதிக ரன்கள் எடுத்த சாதனையை தக்க வைத்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தஞ்சை SGCC அணியினர் தொடர்ந்து போராடி 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். சிறப்பாக பந்து வீசிய AFCC அணியினரின் நட்சத்திர வீரர் முகைதீன் [ பொட்டியப்பா ] தொடர்ந்து மூன்று விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். பலம் பொருந்திய இரு அணியினரில் அதிரை AFCC அணியினர் சிறப்பாக விளையாடி 24 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்று அதிரைக்கு பெருமை சேர்த்து தந்தனர்.

வெற்றி பெற்றோர் விவரங்கள் :
1. முதல் இடம் :  AFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் 30,000/-
2. இரண்டாம் இடம் : SGCC அணியினர் [ தஞ்சை ]- பரிசுத்தொகை ரூபாய் 20,000/-
3. மூன்றாம் இடம் : காரைக்குடி அணியினர்- பரிசுத்தொகை ரூபாய் 15,000/-

கடந்த பத்து தினங்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்த பல்வேறு அணியினர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னாள் விளையாட்டு வீரர்கள் பாருக், சாலிஹு ஆகியோர் போட்டியைத் துவங்கி வைத்தனர். இன்றைய இறுதி போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சகோதரர்கள் ஆதம் செய்யது, மாலிக், இப்ராஹீம், சேக் அலி, நெய்னா, ஆஷிக், அனஸ் , சமியுல்லா ஆகியோருடன் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்களோடு ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் AFCC சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

தர்ஹாக்காக நேர்ச்சை செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் பள்ளியின் கட்டுமானப் பணிக்காக ஒப்படைப்பு !

அதிரை மேலத்தெருவைச் சார்ந்த சகோதரி ஒருவர் தர்ஹாக்காக தான் நேர்ச்சை செய்து வைத்திருந்த தங்க ஆபரணங்களை அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப் பணிக்காக இவற்றை பயன்படுத்திக்கொள்ள இன்றைய [ 03-05-2013 ] ஜூம்மா தினத்தில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

அதிரையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி நடத்தும் பொதுக்கூட்டம் அறிவிப்பு !

அதிரை பேருந்து நிலையம் அருகே தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக நடத்த இருக்கின்ற பொதுக்கூட்டம் - புதிய அலுவலகம் திறப்பு - இரத்த தானம் ஆகியவற்றின் ப்ளெக்ஸ் போர்டுகள், வால் போஸ்ட்டர்கள் அறிவிப்புகள் அதிரை நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் அதிரை நகரத் தலைவராக B. உமர் தம்பி மரைக்காயர் அவர்கள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Thursday, May 2, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 02-05-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சியின் நிரல் :

1. ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

2. ஆங்கிலத்துறை சார்பில் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடப்பட்டு ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் ஆங்கிலத்துறை பேராசிரியை திருமதி MA. தஸ்லீமா அவர்கள்.

3. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் AM. உதுமான் முகைதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவி முனைவர் R. கலாமணி அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

5. ஆங்கிலப் பிரிவைச் சார்ந்த கல்லூரியின் மாணவ மாணவியர் பல்வேறு தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.

6. நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் முனைவர் M. சிக்கந்தர் பாஷா அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.

7. நிகழ்ச்சிகள் அனைத்தும் உதவி பேராசிரியை  E. பிளோமினா அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தரமற்ற பைப்பால் வீண் விரையமான அதிரை பேரூராட்சியின் குடிநீர் !

அதிரை 14 வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு மேல்புறம், காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் பற்றாக்குறையுடன் காணப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகவும் பாதிப்படைந்து வந்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்கள் மூலம்  அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து விலாரிக்காடு பகுதியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூபாய் நான்கு இலட்சம் செலவில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடப்பட்டன.

இந்தப் பணிகளின்  செய்தியை முதன் முறையாக கடந்த [ 23-04-2013 ] அன்றே தளத்தில் வெளியிட்டோம்.




JCB இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போதே இந்த பகுதிகளில் புதைத்திருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் சில துண்டிக்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தன.

இதைத் தொடர்ந்து புதிதாக புதைக்கப்பட்ட பைப் லைன் மூலம் இன்று அதிகாலை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன. அப்போது சிஎம்பி லேன் பிராதான சாலையில் புதைக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்ததால் தெருவெங்கும் வெள்ளம போல் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள்  சிலர் கருத்து தெரிவிக்கையில்...

'தரமற்ற குழாய்கள் புதைக்கப்படும் போதே நாங்கள் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றோம். ஆனால் யாரும் பொருட்படுத்த வில்லை. குழாய்கள் உடைந்து தெருவெங்கும் வெள்ளம போல் குடிநீர் பெருக்கெடுத்து  ஓடுவது எங்களுக்கு அதிர்சியளிக்கின்றது. குடிநீர் பற்றாக்குறையான இந்த் வெயில் காலத்தில் குடிநீர் வீண் விரையம் ஆவது வேதனைத் தருவதாக உள்ளது' என்றனர்.

இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்களை  அலைபேசியில் தொடர்புகொண்டு அவரின் கருத்தைப் பெற்றோம்...

இதன் அருகே மற்றொரு நேரடி பைப் லைன் செல்வதாகவும், இதில் எந்த பைப் லைன் உடைந்துள்ளது என்று நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை உடன் நிவர்த்தி செய்வதாகக் குறிப்பிட்டார்.

Wednesday, May 1, 2013

மரண அறிவிப்பு [ நடுத்தெரு - மேட்டுத்தெரு ]



நடுத்தெரு மேட்டுத்தெரு பகுதியைச் சார்ந்த மர்ஹூம் செ.மு.நெ. ஹாஜி செய்கு முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி. முஹம்மது ஹுசைன் ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்தீன் அப்துல் காதர், ஹாஜி முஹம்மது மீராசாஹிப் ஆகியோரின் சகோதரரும், N. அமானுல்லா அவர்களின் மாமனாரும், ஹாஜி. முஹம்மது இஸ்மாயில், சரபுதீன் இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி. அப்துல் கரீம் அவர்கள்
இன்று [ 01-05-2013 ] மதியம் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [  02-05-2013 ] காலை 8 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

தகவல் : 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீத்

அதிரை தவ்ஹீத் ஜமாத் நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அதிராம்பட்டினத்தில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 25-04-13 அன்று  துவங்கி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதில் ஏராளமான மாணவ, மாண‌விகள்  சேர்ந்து  நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்றுவருகின்றனர்.

மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி  வருகின்ற 05-05-13 அன்று நடைபெறும். தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.