.

Pages

Monday, December 2, 2013

கொட்டும் மழையிலும் அதிரையின் முக்கிய பகுதிகளில் த.மு.மு.க நடத்திய தெருமுனை பிரச்சாரங்கள் !

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்.

2. பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக எதிர்வரும் [ 06-12-2013 ] அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் நகர கிளை சார்பாக பெறும் திரளாக சென்று கலந்துகொள்வது என்ற தீர்மானத்தை அடுத்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளார் திண்டுக்கல் பாருக் அவர்கள் மூலம் தெருமுனை பிரச்சாரங்கள் அதிரையில் பேருந்து நிலையம், தரகர் தெரு, கடற்கரைதெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, நடுத்தெரு [ தக்வா பள்ளி அருகில் ], மேலத்தெரு, பிலால் நகர் ஆகிய  பகுதிகளில் இன்று [ 02-12-2013 ] காலை 10 மணிக்கு ஆரம்பமான பிரச்சாரம் இரவு வரை நீடித்தன. இதில் த.மு.மு.க வின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது ஆகியரோடு அதிரை நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிரையில் இன்று மதியம் 3 மணிமுதல் பெய்து வரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது குறிபிடத்தக்கது.






அதிரையில் ஒட்டப்பட்ட திடீர் போஸ்ட்டரால் பரப்பரப்பு !

இன்று காலை அதிரை நகரின் முக்கிய பகுதிகளில் அதிரை வாழ் பொதுமக்கள் என்ற முகவரியில்லா பெயரில் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் நடராஜன் ஆகியோரை கண்டித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் [ புகைப்படங்கள் ] !

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு புதுத்தெரு பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் பேரூராட்சியை கண்டித்து கடந்த [ 30-11-2013 ] அன்று அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் இன்று காலை 10 மணியளவில் 8, 9, 10 ஆகிய வார்டுகளில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீரை விநியோகிக்கவில்லை எனக்கூறி இப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பேரூராட்சி எதிரே உள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் புறப்படுவதில் தாமதமாகின.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக தந்தால் சம்பந்தபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேண்டுகோள் வைத்தனர். இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து வட்டாசியார் தலைமையில் இருதரப்பினரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் 8, 9, 10 ஆகிய வார்டு பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்குவற்குரிய தேவையான நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.






  


Sunday, December 1, 2013

அதிரை பிலால் நகரில் SDPI கட்சியின் புதிய கிளை துவக்கம் ! [ புகைப்படங்கள் ]

அதிரை பிலால் நகரில் SDPI கட்சியின் புதிய கிளை அமைக்கும் பணியும் நிர்வாகிகள் தேர்வும் இன்று (1/12/13) பிலால் நகர் பள்ளியில் அதிரை நகரத் தலைவர் யு.அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நகரச் செயலாளர் இப்ராஹீம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. 

தகவல் : அதிரை போஸ்ட்








அதிரையில் பல்வேறு பகுதிகளில் TNTJ வழங்கிய வாழ்வாதார / மருத்துவ உதவிகள் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த ஹஜ் பெருநாளின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குர்பானி தோல்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்திலிருந்து அதிரையில் பல்வேறு பகுதிகளில் வாழும்  ஏழை எளியோர் பயன்பெறும் விதமாக அவர்களுக்கு வாழ்வாதார / மருத்துவ உதவிகளை செய்துள்ளனர்.

நடுத்தெருவை சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்னுக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5000 வழங்கப்பட்டது.

புதுமனைத்தெருவை சார்ந்த சகோதரிக்கு தன் பிள்ளையின் மருத்துவ செலவுக்காக ரூ5000 வழங்கப்பட்டது.

மேலத்தெருவை சார்ந்த சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ6000 வழங்கப்பட்டது.

ஆட்கொல்லி நோய்க்கு உன்னை ஆட்கொள்ளாதே !?

உலக எயிட்ஸ் தினமான டிசம்பர் 1 தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு தரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. எயிட்ஸ் நோயினால் இறந்தோரை நினைவு கூறவும், எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நோய் பரவலை தடுக்க வேண்டும் என்ற சமூக அக்கறையின்பால் தனது பேனாவை ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து பல படைப்புகளை கவிதையின் மூலம் வெளிப்படுத்தி வரும் அதிரையின் பிரபல கவிஞர் கவியன்பன் அபுல் கலாம் அவர்களும், தனது இனிய குரலால் அனைவரின் பார்வையையும் தனது பக்கம் இழுத்து வரும் அதிரை ஜாஃபர் அவர்களும் இணைந்து உயிர்க்கொல்லி நோய் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள காணொளியை உங்களின் பார்வைக்காக இதோ...


புண்ணைத் தேடிப் புறப்படும் ஈயாய்த் (தீயப்)
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்

அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம்

மங்கை யான மனைவியே மாண்பாம்
நங்கை இன்பம் நலவுடன் காண்பாய்
எங்கோ சென்று இழப்பது ஏனோ?
பங்கம் கிட்டும் பழக்கமும் வீணே!

தாயும் ஈன்றாள் தரணியில் மேவ
நோயும் கொண்டால் நொடியினில் சாவு
வாயில் புண்ணை வளர்க்குமாட் கொல்லி
பாயில் தூங்கிப் புலம்புவாய்ச் சொல்லி

நாணம் கொண்டு நல்முடன் ஈமான்
பேணச் செய்தால் பெருகிடும் சீமான்
காணும் செல்வம் கணக்கிலா ஏட்டில்
வேணும் அச்சம் விரைவுடன் நாட்டில்!

பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்
பாடல் இயற்றியவர் : கவியன்பன் அபுல் கலாம்

துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு ! திரண்டுவர அழைப்பு !!

எதிர்வரும் 06.12.2013 அன்று துபையில் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி நிகழ்ச்சிகள் - காலையில் தர்பியா, மாலையில் மார்க்க சொற்பொழிவு நடைபெறஉள்ளது.


&

தர்பியா நிகழ்ச்சி

நாள்    :    
06.12.2013, வெள்ளிக்கிழமை
 
நேரம்    :    
காலை 8.30 மணிக்கு
 
இடம்    :    
அல் மனார் சென்டர் (தெய்ரா கிளை)
        பிரைமரி நர்சரி எதிரில்
துபை ஹாஸ்பிட்டல் பின்புறம்
அல் பரஹா
தெய்ரா, துபை

 
நல்லொழுக்கப் பயிற்சி வழங்குபவர்
 
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள
 
மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்


தகவல் : அதிரை அமீன்

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் காத்திருப்பு போராட்ட அழைப்பிதழ் !


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பாக எதிர் வரும் உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 (03,12,2013) அன்று காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை பெரியார் சிலையிலிருந்து மணிக்கூண்டு வரை மாபெரும் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது,,

மேலும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக கடந்த உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 03,12,2012 அன்று பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை வேண்டி மாபெரும் காத்திருப்பு பேராட்டம் நடத்தப்பட்டு சுமார் 150; விண்ணப்பங்கள் வட்டாட்சியாரிடம் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்;கப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு வருடம் கடந்த பின்பும் என்னவென்றே தெரியாமல் நிலுவையில் உள்ளது, ஆகவே. வரும் 03,12,2013 அன்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை வைத்து பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் உதவி கிடைக்கும் வரை மாபெரும் காத்திருப்பு பேராட்டம் நடைபெற உள்ளது,,

ஆகவே. அனைத்து மாற்றுத்திறனாளிள். பாதுகாவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேhம்,

குறிப்பு: உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வருபவர்;கள் மாற்றுத் திறனாளிக்கான அடையான அட்டை நகல். குடும்ப அட்டை நகல். பாஸ்போட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவும்.

அதிரையில் தொடர்புக்கு 9865939831

எ.முகம்மது ராவுத்தர் 9842585483

இப்படிக்கு.

நிர்வாகிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உhpமைகளுக்கான சங்கம்
பட்டுக்கோட்டை ஒன்றியம். மற்றும் அதிராம்பட்டினம் நகரம்.


தகவல் : எ.முகம்மது ராவுத்தர் [ஒன்றிய செயலாளர்,TARATDAC, PKT]