.

Pages

Monday, February 3, 2014

அதிரையில் இளைஞர் காங்கிரஸினர் நடத்திய துண்டு பிரசுர நிகழ்ச்சி !

அதிரை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை அதிரையின் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

துண்டு பிரசுரத்தில் காங்கிரஸ் அரசின் லோக்பால் மசோதா நிறைவேற்றம், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் கட்டாய இட ஒதுக்கீடு, ஏழை மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் விளக்கி கூறப்பட்டு இருந்தது.

இதில் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், நகர செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன், நகர இளைஞர்  காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், முஹம்மது இஸ்மாயில் ஆகியரோடு கட்சியினர் பலர் கலந்துகொண்டு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.




விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம்


பட்டுக்கோட்டையில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய அதிரை இளைஞர் !

அதிரை இளைஞரின் சொந்த முதலீட்டில் வணிகப்பகுதியாக கருதப்படுகிற பட்டுக்கோட்டை சாமுமுதலி தெருவில் [ விஜய் மெட்டல் அருகில் ] புதியதோர் உதயமாக 'செலக்க்ஷன் ஷாப்பிங் சென்டர்' நிறுவனம் இன்று [ 03-02-2014 ] காலை 9 மணி முதல் செயல்பட துவங்கியது.

திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் பங்கேற்றனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜாஹிர் அலி அன்புடன் வரவேற்றார்.





குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

மரண அறிவிப்பு !


புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மனைவியும் இக்பால், சர்புதீன், ஜாஹிர் ஹுசைன், ஷாஜஹான் ஆகியோரின் தாயாருமாகிய ஜுலைஹா அம்மாள் அவர்கள் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 1 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Sunday, February 2, 2014

அதிரையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தும் இரத்ததான முகாம், பேரணி குறித்து நமக்களித்த நேர்காணல் [ காணொளி ]

நேற்று தஞ்சையில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர் மற்றும் மாணவர் அணியின் பொறுப்பாளர்கள் சேக் அப்துல்லா, அர்சத்கான் ஆகியோர் பங்கேற்று திரும்பியுள்ளனர்.

தஞ்சை ஆலோசனைக்கூட்டத்தில் அதிரையில் எதிர்வரும் [ 23-02-2014 ] அன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியின் அலுவலகம் திறப்பு, அதனை தொடர்ந்து இரத்ததான முகாம், முக்கிய பகுதிகளில் கட்சியின் அறிமுக தெருமுனை பிராச்சாரங்கள், அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை அதிரை காவல் நிலையம், அதிரை பேரூராட்சி ஆகியவற்றில் வழங்குதல், செக்கடி மேட்டிலிருந்து முக்கிய பகுதிகளில் பேரணி ஆகியவற்றோடு இறுதியாக ஆலோசனைக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர் ஆகியோர் நமக்களித்த நேர்காணல்...

போராட்ட களத்தில் பங்கேற்ற அனைவருக்கும் TNTJ அதிரை கிளையின் நன்றி அறிவிப்பு !

இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த [ 28-01-2014 ] அன்று திருச்சியில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டத்திற்காக நமதூர் தக்வா பள்ளி அருகிலிருந்து 35 வேன்கள், 3 பஸ்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றில் பெரும்திரளானோர் பயணத்தை மேற்கொண்டனர்.

திருச்சி போராட்ட களத்தில் பங்கேற்ற அனைவருக்கும் TNTJ அதிரை கிளையின் சார்பாக மார்க்க பிராச்சாரகரும், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளருமாகிய அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

தகவல் : M.I. அப்துல் ஜப்பார்

Saturday, February 1, 2014

முஸாபர் நகர மக்களுக்காக த.மு.மு.க வினர் அதிரையில் திரட்டிய ரூ 2,01,850/- ஒப்படைப்பு !

முஸாபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் துயரை போக்கும் வகையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கக்கோரி தலைமையகத்தின் அறிவிப்வை அடுத்து தமுமுக வின் அதிரை கிளையினர் கடந்த [ 10-01-2014 ] முதல் நிதி திரட்டும் பணியில் மும்முரமாக  ஈடுபட்டனர். இதற்காக அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று வசூலில் ஈடுபட்டனர்.

இவர்களின் தொடர் முயற்சியில் அதிரை நகர பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் 2,01,850/- ஐ [ இரண்டு இலட்சத்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும் ] இன்று மாலை பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நடைபெற்ற 'நிதி அளிப்பு' நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் J.S. ரிஃபாயி ரஷாதி அவர்களிடம் தஞ்சை மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, த.மு.மு.க அதிரை நகரத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் தமீம் அன்சாரி, த.மு.மு.க / ம.ம.க பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, ம.ம.க நகர செயலாளர் ஹாலித், துணைச்செயலாளர் சேக் நசுருதீன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிரை நகர த.மு.மு.க / மமக நிர்வாகிகள் உள்ளிட்ட தஞ்சை தெற்கு பகுதிகளிலிருந்து வந்திருந்த பலர் கலந்துகொண்டனர்.






செடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும்திரளானோர் பங்கேற்பு !

அதிரைக்கு மழை வேண்டி வறண்டு காணப்படும் நமதூர் செடியன் குளத்தில் இன்று காலை 9 மணியளவில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், பெண்கள் உட்பட பெரும்பாலானோர் திரளாக வருகை தந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக மார்க்க பிராச்சாரகர் அப்துல் ஹமீது அவர்களால் மழை தொழுகை குறித்து விளக்கத்தில் 'சட்டையை திருப்பி அணிந்து தொழும் படியும், மழை வேண்டி இறைவனிடம்  இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தியுங்கள்' என குறிப்பிட்டு பேசினார்.

ஒழு செய்வதற்காக ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தனர். ஆங்காங்கே தண்ணீர் பாக்கெட்களும் விநியோகம் செய்யப்பட்டன. தொழுவதற்காக வந்திருந்த பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தொழுகை முடிந்தவுடன் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த பிரார்த்தனையில் தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் இறைவனிடம் மனம் உருகி தனித்தனியே பிரார்த்தனை செய்தார்கள்.








மின்சாரம் தாக்கி உயரிழந்த ஜாஹிர் ஹுசைன் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கியது அதிரை நகர த.மு.மு.க !

அதிரை மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து வந்த மர்ஹூம் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் கடந்த வருடம் மின்சாரம் தாக்கி உயரிழந்தார். இவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அதிரை நகர த.மு.மு.க வின் சார்பாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 11,500/-ஐ திருவாரூர் மாவட்ட ம.ம.க செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், ஆசிரியர் பக்கிரி சாமி மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.