.

Pages

Saturday, May 2, 2015

மரண அறிவிப்பு !

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு முஹம்மது சாலிகு அவர்களின் மகளும், M. காதர் சுல்தான் அவர்களின் மனைவியும், ஹாஜி D. பகுருதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முஹம்மது மீராஷா அவர்களின் மாமியாரும், இப்ராஹிம்ஷா, சாகுல் ஹமீது, ஜாஹிர் உசேன் ஆகியோரின் தாயாருமாகிய ஹசினா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ஊர் வளர்ச்சியில் நமது பங்கு !


முன்பொருகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எவ்விதபாகுபாடுமின்றி ஊர் நலனுக்காக எத்தனையோ பொதுச் சேவைகள் செய்து இருக்கிறார்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்கரைகாட்டி நமது ஊருக்காக நல்லபல பயனுள்ளவைகளைச் செய்து இருக்கிறார்கள்.அதையொட்டி சுற்றுவட்டார கிராம மக்களும் பயனடைந்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்தகாலகட்டத்தில் உள்ளதுபோல அன்று இத்தனை உட்பிரிவுகள் ஈகோ ஏதும் இல்லாமல் நமது சமுதாயம் நமது மக்கள் என்ற பார்வையும் சுயநலமில்லாத நல்ல நோக்கம் மட்டும்தான் இருந்தது. பொதுமக்களுக்கும் ஊரின்மீதும் அக்கறையும் இருந்தது.

ஆனால் அன்றிருந்தவைகளெல்லாம் இன்று எங்கோ சென்று ஓடிமறைந்து விட்டது. ஒற்றுமையாய் வாழ்வது என்பதெல்லாம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் ஒருத்தருக்கொருத்தர் புரிந்துணர்வு இல்லாமல் நம்மனதில் விஷச் செடிகள் வளர்ந்து மனித நேயத்தை சாகடித்து நம்மை பிரித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வதுபோல மனம் வைத்து நாம் ஊர் நலன்கருதி ஊருக்கு ஒரு பிரச்சனையென்றால் அனைவரும் பாகுபாடின்றி கைகோர்த்து ஓரணியாய் நிற்ப்பதுதான் பலம் சேர்ப்பதாக இருக்கும். இப்படி பல பிரிவினைகள் நமக்குள் பல்கிப் பெருத்ததுதான் மிச்சம். அன்று எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் செய்த நற்காரியங்களை ஊர் நலன்களை இப்போது இத்தனை வித்தியாசங்களுக்குள் மக்களின் மனம் போனபடியால் ஒன்றும் ஊருக்கு உருப்படியாய் செய்தபாடில்லை. செய்யவும் நாதியில்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. அப்படியே யாராவது எதையாவது செய்ய முன்வந்தாலும் அதில் குறைகாண்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். இந்தப்போக்கு முதலில் அனைவர்களின் மனதிலிருந்து மாறவேண்டும்.
 
அதுமட்டுமல்ல. அனைவரிடத்திலும். காசுபணம் பெருகப் பெருக அத்தோடு பல தலைக் கணங்களும், விரோத மனப்பான்மையும் உருவாகி இறுதியில் நமக்குள் நீயா நானா? நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற போட்டி வந்து தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டதுதான் இன்றைய நிலையில் உச்சகட்ட நிலையாக இருக்கிறது. இந்த நிலையைப் போக்குவதற்கு நாம் அனைவரும் மனத்தால் ஒன்றுபடவேண்டும். மனத்தால் ஒன்றுபடுவதாக இருந்தால் முதலில் நமக்குள் சில திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்.

1, ஊர் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் முதலில் நமக்குள் நீயா நானா? என்கிற நிலை மாறவேண்டும்.

2, 
ஊர் நலனில் பொதுச் சேவைகளில் பாகுபாடின்றி எல்லோரிடத்திலும் அக்கரை இருக்கவேண்டும். 

3, 
யார் எந்தக் கட்சி எந்த அமைப்பை சார்ந்து இருந்தாலும் ஊருக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அனைவரும் ஓர் அணியில் கைகோர்த்து நிற்க்க வேண்டும்.

4, 
ஒவ்வொரு முஹல்லாவாசிகளும் அவரவர் தலைமையை மதித்து அவர்கள் சொல்லும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

5, 
தனிப்பட்ட எந்த ஒரு சொந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கி தெருப் பிரச்சனை ஊர்ப்பிரச்சனை என்று ஆக்கி விடக்கூடாது.

6, 
தெருவாரியாக வேற்றுமை பார்ப்பதை மனதிலிருந்து அடியோடு அறுத்து வீச வேண்டும்.

7, 
ஜாதிமத பேதமில்லாமல் அக்கம்பக்கத்து கிராம மக்களையும் அரவணைத்து அவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்..

இப்படி நாம் அனைத்து விஷயங்களிலும் பேணி நடந்து வந்தொமேயானால் நம்ம ஊர் இந்த பூமியில் தலை சிறந்த பூமியாக அனைத்து வசதிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராக அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

வறுமையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒற்றுமை இப்போது ஓரளவு வசதிவாய்ப்பை பெற்றதும் நமக்குள்ளான ஒற்றுமை தூர விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஈகோ எனும் காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருக்கிறது. அடுத்து சுயநலம் தலைதூக்கி விட்டது. இவைகள் அனைத்தையும் ஒவ்வொருவரது மனதிலிருந்து களைந்து எறிந்தால்தான்  நாம் ஒன்றுபட்டு வாழமுடியும்.! நாம் ஒன்றுபடுவோமா...!?!?

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்

Friday, May 1, 2015

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக முஹம்மது இல்யாஸ் தேர்வு !

எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் இன்று பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக Z. முஹம்மது இல்யாஸ் அவர்களும், துணை தலைவராக ஏ.கே சாகுல் ஹமீது, பொதுச்செயலாளராக ஜே. ஹாஜி சேக், செயலாளர் எம்.எஸ் அபுல் ஹசன், பொருளாளர் கே. சேக் ஜலாலுதீன், செயற்குழு உறுப்பினர்களாக எம். அமானுல்லா, யூ. அப்துல் ரஹ்மான், ஏ.ஜே முஹம்மது அசாருதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

M.M.S. பஷீர் அஹமது அவர்களை வாழ்த்த திரண்டு வந்த கட்சியினர் !

அதிரை M.M.S குடும்பத்தை சேர்ந்தவர் M.M.S. பஷீர் அஹமது. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர். அதே போல் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் அவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், மூத்த தலைவர்கள் ஜிஆர் மூப்பனார், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ் சித்தன், ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றார்.

இந்நிலையில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரியாதை நிமித்த சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு அதிரை பேருந்து நிலைய M.M.S வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா மூத்த உறுப்பினர் M.M.S முஹம்மது யூசுப், சிங்காரவேலு, பொன்னம்பலம், M.M.S நிஜார், M.M.S ரபி அஹமது, M.M.S அன்வர், அதிரை மைதீன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமாகாவின் பொதுக்குழு உறுப்பினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு தமாகா நகர நிர்வாகிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட்டது. இதில் M.M.S அப்துல் கரீம், சிங்காரவேலு, பொன்னம்பலம், அதிரை மைதீன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதன் பின்னர் M.M.S. பஷீர் அஹமது தனது ஏற்புரையில், புதிதாக பொறுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தமது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து கட்சி வளர்ச்சியிலும், அதிரை பொதுநலன் சார்ந்த விசயங்களிலும் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி முடிவில் சிங்காரவேலு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அலுவலக வராண்டாவை சுற்றி அமர வைக்கப்பட்டனர். சிலர் நின்று கொண்டு இருந்துனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் M.M.S. பஷீர் அஹமது அவர்களோடு ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமாகா அலுவலகம் கூட்டத்தால் நிரம்பி வழிந்து காணப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு நகர தமாகா சார்பில் வாழ்த்து தெரிவித்து அதிரை பேரூந்து நிலையப்பகுதியில் வைக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்
 

அதிரையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி !

அதிரை இளைஞர்கள் மற்றும் Terri Wear இணைந்து நடத்தும் 10th,11th,12th முடித்த மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் (08-05-2015) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி  காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியர் M. ஆசியதாரா M.A.,M.Phil.,Ph.D., அவர்கள் ( அடுத்து என்ன படிக்கலாம்? ) என்ற தலைப்பிலும் ,ACCESS INDIA COUNSELLOR வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் (கல்வி சம்மந்தமாக பெற்றோர்கள்,மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்) அளிப்பார்.

மேலும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி சம்மந்தமான சிறப்பு பயிற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் அளிக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

அதிரை பிஎஸ்என்எல் தொழிற்சங்க ஊழியர்கள் கொண்டாடிய மே தின விழா !

அதிரை பிஎஸ்என்எல் தொழிற்சங்க ஊழியர்கள் மே தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் என் எஃப் டி ஈ தொழிற்சங்கத்தின் அதிரை நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதிரை பிஎஸ்என்எல் அலுவலத்தில் பணிபுரியும் அலுவலர்கள் - ஊழியர்கள் முன்னிலை வகித்தனர். இதில் என் எஃப் டி ஈ அதிரை நகர உதவித்தலைவர் பாலு தொழிற்சங்க கொடியை ஏற்றிவைத்து உறுதிமொழி வாசித்தார்.

விழா முடிவில் என் எஃப் டி ஈ தொழிற்சங்க அதிரை நகர செயலாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை பிஎஸ்என்எல் அலுவலர்கள் - ஊழியர்கள் - என் எஃப் டி ஈ தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
 
 
 

ஜொலி ஜொலிக்கும் செக்கடி குளம் ! [ படங்கள் இணைப்பு ]

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை மாலை செக்கடி குளம் நடைமேடை பகுதியில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நாளை திறப்பு விழா காணப்பட இருக்கிற ஜொலிக்கும் செக்கடி குளம் நடை பாதை பயிற்சி வளாகத்தை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கின்றனர்.
 
 
 
 

செக்கடி மேடு நடைபயிற்சி பாதை திறப்பு விழா அறிவிப்பு !

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை மாலை செக்கடி குளம் நடைமேடை பகுதியில் நடைபெற இருக்கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கவும், உள்ளூர் முக்கியஸ்தர்கள் தலைமை, முன்னிலை வகிக்கவும் இருக்கின்றனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது: