அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வரும் செப்டம்பர்-10 ந்தேதி அன்று வேலையின்மை, மதுவிலக்கு, கல்வி வியாபாரம், ஆணவக் கொலைகள், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆகஸ்ட்-29 ந்தேதி தொடங்கி செப்டம்பர் 1, 5 ஆகிய ஐந்து தினங்கள் தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விளக்க பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.
அதிரையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரத்திற்கு இளைஞர் பெருமன்றம் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் என். காளிதாஸ், இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் எம். முஜிபூர் ரஹ்மான், இளைஞர் பெருமன்றம் நகர தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ப. தர்மராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதிரையில் கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.