.

Pages

Tuesday, February 2, 2016

அதிரையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் கூட்டம் அதிரை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாயக் கூடத்தில் இன்று காலை நடந்தது.

கூட்டத்திற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணை சேர்மன் இர்பான் சேக், மான் ஏ சேக், ஏ. ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட பொருளாளர் எஸ். முத்துகுமார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர் சேக் நாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை புதிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பட்டுக்கோட்டை கிளை சேர்மன் சுவாமிநாதன்  மதுக்கூர் கிளை சேர்மன் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு வெள்ள நிவராணப்பொருட்கள், 56 குருதிக்கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதிதாக இணைந்த ஆயுட்கால உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவற்றை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம்,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட பொருளாளர் எஸ். முத்துகுமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர் சேக் நாசர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் செயலாளர் எம்.நிஜாமுதீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் சி. சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை கெளரவ ஆலோசகர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

முன்னதாக கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம்  மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது  ஆகியோர் விழா மேடையில் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆறுமுகச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக கமிட்டி உறுப்பினர் எம். அஹமது அன்சாரி நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணை தலைவர் என்.பிச்சை, திமுக நகர செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 

 
 
 
 
 
 
 
 


அதிரை ஈசிஆர் சாலையில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விவசாயி பலி !

அதிராம்பட்டினம் அருகே மலவேனிற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல் (வயது 55), சாமிகண்ணு (60). விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் வைக்கோல் போர் வாங்குவதற்காக இன்று அதுகாலை மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு சென்றனர்.

சாமிகண்ணு வண்டியை ஓட்டிசென்றார். பழனிவேல் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதேவழியாக மாட்டு வண்டியின் பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிவந்த மாட்டிவண்டியின் மீது வேகமாக மோதியது.

இதில் மாட்டு வண்டியின் பின்னால் அமர்ந்து வந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்டியை ஓட்டி சென்ற சாமிகண்ணு படுகாயம் அடைந்தார். வண்டியை இழுத்து சென்ற 2 மாடுகளில் ஒருமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு மாடுக்கு கால்கள் முறிந்தது.

இதுகுறித்து போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த சாமிகண்னை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பழனிவேலின் உடலை அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து இறந்த மாடையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காயமடைந்த மாட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து அந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா !

67 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளர் ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருது வழங்கி கெளரவித்தார்.

இதையொட்டி சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் அவர்கள் கோட்டை அமீர் விருது பெற்ற அபூபக்கர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், கோட்டை அமீர் விருது பெற்ற அபூபக்கர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் அதிரை நகர தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தனது வாழ்த்துரையில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டுதலையும், வாழ்த்தையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் அவர்கள் கோட்டை அமீர் என்றால் யார் ? என்ற தலைப்பில் சிறிதுநேரம் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக சம்சுல் இஸ்லாம் சங்க துணை செயலாளர் நூர் முஹம்மது வரவேற்புரை ஆற்றி விழா முடிவில் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

 

பட்டுக்கோட்டை அருகே கார்-டிப்பர் லாரி மோதல்:மணமக்கள் உள்பட 8 பேர் காயம்!

பட்டுக்கோட்டை வளவன்புரம் தெருவைச் சேர்ந்த ஜின்னாவுக்கும் (35), மதுக்கூரைச் சேர்ந்த வகிதாபேகத்துக்கும் (28) திங்கள்கிழமை காலை மதுக்கூர் மணமகள் வீட்டில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் விருந்து முடிந்து பிற்பகல் 3 மணிக்கு மணமக்கள் உறவினர்களுடன் பட்டுக்கோட்டையில் உள்ள மணமகன் வீட்டுக்கு காரில் சென்றனர்.

பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை நசுவினி ஆற்றுப்பாலம் அருகே இவர்கள் கார் மீது எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் மணமகன் ஜின்னா, மணமகள் வகிதாபேகம், உறவினர்கள் மூர்னிஷா (55), அப்துல் நசீர் (41), ரசியாபேகம் (32), சல்மா (50), ஆதின் (4), ரகுமான் (35) ஆகிய 8 பேர் காயமடைந்தனர்.

இதில் மணமகன் ஜின்னா உள்பட 7 பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் மணமகள் வகிதாபேகம் இடது கால் நசுங்கி பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

நன்றி: தினமணி
Image credit: madukkurexpress

Monday, February 1, 2016

அதிரையில் புதியதோர் உதயம் 'நேஷனல் டிரேடிங்' !

அதிரையை சேர்ந்தவர் ஏ.முஹம்மது முகைதீன். நடுத்தெரு ( செக்கடி மேடு அருகில் ) 'நேஷனல் டிரேடிங்' என்ற பெயரில் அரிசி மொத்தம் மற்றும் சில்லறை தொழில் நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று நிறுவனத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர். நிறுவன உரிமையாளர் ஏ. முஹம்மது முகைதீன் மற்றும் அவரது மகன் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஏ. முஹம்மது முகைதீன் நம்மிடம் கூறுகையில்...
'இன்று புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் மொத்தமாகவும், சில்லரையாகவும் அனைத்து வகை ரக அரிசி வகைகள் சுத்தமான மற்றும் நியாமான விலையில் விற்பனை செய்யப்படும். தொலைப்பேசி ஆர்டரின் பேரில் நேரடியாக இல்லம் சென்று விநியோகிக்கப்படும். அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு : 7502999776
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களின் நூல் வெளியீட்டு விழா அழைப்பு !

அதிரை நிருபர் இணையதளத்தில் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' என்ற நூல் பிரபல 'சாஜிதா புக் சென்டர்' பதிப்பகம் சார்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளீயிட்டு விழா நிகழ்ச்சி எதிர்வரும் [ 04-02-2016 ] அன்று மாலை 4.30 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஹைதர் அலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலை வெளியிட உள்ளார். மேலும் சம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இணையதள ஊடக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி நூல் ஆசிரியர் எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி, அதிரை நிருபர் நெறியாளர், பதிவர்கள் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா [படங்கள்]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 67 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்  [ 31-01-2016 ] ஞாயிறு காலை 9 மணியளவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மாலை 03:30 மணிக்கு மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் கிராத் ஓத பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஹ்பூப் அலி அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பள்ளி விளையாட்டு சாதனை அறிக்கையை உடற்கல்வி ஆசிரியர் ராஜா அவர்கள் வாசித்தார்கள். இதனை தொடந்து அதிரை ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஹமீத் கான் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்கள்

முன்னதாக பள்ளியின் முன்னாள் முதுகலை ஆசிரியர்கள் லியாகத் அலி, தர்மலிங்கம், சண்முகம் உள்ளிட்டோர் விழா மேடையில் அமர்ந்து போட்டிகளை பார்வையிட்டனர்.