.

Pages

Thursday, March 2, 2017

மரண அறிவிப்பு ( P. முஹம்மது ஹனீஃபா அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-2
அதிராம்பட்டினம், புதுக்குடி நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம்
செ.இ பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் அமீர் ஹம்சா, மர்ஹூம் அப்துல் அஜீஸ், அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அலி, மீரா ஹுசைன், பகுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஜலீல், தாஜுதீன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய P. முஹம்மது ஹனீஃபா அவர்கள் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 02-03-2017 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, March 1, 2017

பட்டுக்கோட்டையில் கருவூல அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓக்கள் போராட்டம் !

பட்டுக்கோட்டை, மார்ச், 1:
பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் என மொத்தம் 400 பேருக்கு பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை சார்நிலை கருவூல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் லெட்சுமிநாராயணன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து கருவூல அலுவலருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.கோவிந்தராசு முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் மார்ச் 2-ம் தேதி (வியாழன்) மாலைக்குள் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் 400 பேருக்கும் சம்பளம் அனுப்பப்படும் என்று கருவூல அதிகாரி பாலகிருஷ்ணன் உறுதியளித்தார். இதையடுத்து விஏஓக்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் மு்லம் பயனாளிகளுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னனு அட்டை (Smart Card ) வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட உள்ளது,  அதற்காக. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் கைபேசி எண் விவரங்கள் தொடர்புடைய நியாயவிலை அங்காடிகளில் உள்ள விற்பனை முனையக் கருவியில் (POS) பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.  

இதில் இன்றளவும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் கைபேசி எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக தங்களது பகுதியிலுள்ள தொடர்புடைய நியாயவிலை அங்காடிக்குச் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும்.

சென்னை. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இணையத்தளம் வழியாக www.tnpds.com
என்ற இணையத்தில் பயனாளர் நுழைவு என்ற இடத்தில் குடும்ப அட்டையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் 7 எண்கள் கொண்ட OTP (one time password ) தங்களுடைய கைபேசியில் பதிவாகும்,  அந்த எண்களை இணையத்தில் குறிப்பிட்ட பகுதியில் உள்ளீடு செய்யவும்,  அதன் பின்னர்.  பெரியவர்களுக்குரிய ஆதார் அட்டையினையும். சிறியவர்களுக்குரிய (5 வயதுக்குட்பட்டவர்கள்) பிறப்பு சான்றினையும் (Birth  Certificate ) Scan செய்து அனுப்பும் பட்சத்தில். அவர்களுடைய விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்,  இதன் மு்லம் அனைத்து நபர்களின் விவரங்கள் அடங்கிய மின்னனு அட்டை (Smart Card) தங்களுக்கு கிடைக்கப்பெறும்.
                                     
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவரின் கைபேசி எண்ணை கட்டாயம் பதிவு செய்திருக்கவேண்டும்,  அவ்வாறு கைபேசி எண் பதிவு செய்துள்ள உங்களுக்கு நீங்கள் நியாயவிலை அங்காடி மு்லம் வாங்குகின்ற பொருட்களுக்கான விபரம் உங்களுடைய கைபேசியில் குறுஞ்செய்தியாக (SMS) வரப்பெறும்,  அப்படி நீங்கள் வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி (SMS) வந்தால். உடனே PDS (SPACE) 107 என டைப் செய்து 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு. அதன் விபரம் உங்களுக்கு தெரியப்டுத்தப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் கைபேசி எண் பதிவுசெய்து. அத்தியாவசியப்பொருட்கள் வாங்கியவுடன் குறுஞ்செய்தி (SMS) வரவில்லையெனில். தொடர்புடைய நியாயவிலை அங்காடியில் பதிவாகியுள்ள கைபேசி எண்ணை சரிபார்த்து. தவறு எனில். சரி செய்து கொள்ளுமாறு  தஞ்சாவூர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை. கேட்டுக்கொண்டுள்ளார்.             

அதிரையில் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-01
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாளையொட்டி அதிரையில் திமுகவினர் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.

திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல்ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் இராம. குணசேகரன் கட்சி கொடி ஏற்றிவைத்து
பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணைச்செயலாளர் அன்சர்கான், பொருளாளர் கோடி முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, முன்னாள் கவுன்சிலர்கள் எம். முகம்மது சரீப், நூர்லாட்ஜ் செய்யது, முத்துராமன், பகுருதீன், இராஜதுரை, ஏவிஎம் வரிசை முகமது, இராமநாதன்,
அதிரை பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, அகிலன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

துபாய் 'ரெண்ட் ஏ கார்' வாடகை கார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-01
துபையில் 'ரெண்ட் எ கார்' (Rent A Car) என்றழைக்கப்படும் நாள் வாடகை கார்களை இயக்கும் நிறுவனங்கள் பல செயல்படுகின்றன. இவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகளை துபை போக்குவரத்து துறை (RTA) விதித்துத்துள்ளது.

கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை (ID) போன்ற தனிப்பட்ட ஆவணங்களை பெறக்கூடாது.

கார் வாடகைக்கு விடும் நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களை பொது பார்க்கிங் நிறுத்தக்கூடாது மாறாக தங்களுக்கு சொந்தமான பார்க்கிங் அல்லது கேரேஜ்களில் மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறுபவர்களின் லைசென்ஸ் முடக்கப்படும்.

புதிதாக கார் வாடகை நிறுவனம் ஆரம்பிப்போரிடம் குறைந்தது 10 வாகனங்களாவது இருத்தல் வேண்டும் மேலும் அதே நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் 3 வாகனங்களாவது இருத்தல் வேண்டும். 6 லட்சம் திர்ஹம் மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய வாகனங்களை வைத்திருப்போர் குறைந்தது 5 வாகனங்காளவது வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

தாய்லாந்து நாயின் பாசப் போராட்டம் (வீடியோ)

அதிரை நியூஸ்: மார்ச்-01
தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஊர் 'புரிராம்' (Buriram). இங்கு ஒரு தாய் மக்களாக பிறந்த நாய்களில் ஒன்று எதிர்பாரவிதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது.

இறந்த நாயை மற்றொரு நாய் ஒரு குழியில் தள்ளி தனது மூக்கால் மண்ணை தள்ளி மூடியது மேலும் மண்ணை தள்ளுவதற்கு தனது கால்களை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை என்பதுடன் அது அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே தானும் குழிக்குள் இறங்கி உயிரழந்த தனது சகோதர நாயின் உடலை வாஞ்சையுடன் நுகர்ந்த காட்சிகள் நெஞ்சைப்பிழியும் நெகிழ்வான சம்பவமாக அமைந்திருந்தது.

துபாய் ஸாலிக் டோல்கேட் பற்றி கூடுதல் தகவல்...

அதிரை நியூஸ்: மார்ச்-01
துபையின் அமுதசுரபிகளாக பார்க்கிங் கட்டணங்களும் டோல்கேட்களும் விளங்குகின்றன என்றால் மிகையல்ல, அது யாருக்கு என்பதும் தெரிந்த ஒன்றே!

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் உள்ளது போல் கடந்த 2017 பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையிலேயே அடுத்தடுத்து அமைந்துள்ள அல் ஸபா (Al Safa) மற்றும் அல் பர்ஸா (Al Barsha) ஸாலிக் கேட்டுகளில் (Salik Toll Gates) தனித்தனியாக 4 திர்ஹம் என மொத்தம் 8 திர்ஹங்கள் ஒவ்வொருமுறையும் வெட்டப்படுகின்றதும் அறிந்ததே ஆனால் இதிலிருந்து தப்பித்து மாற்றுப்பாதையில் எவ்வாறு பயணிப்பது என்பது குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸாலிக் கேட்டுகள் குறித்தும் தற்போது கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதிவேக போக்குவரத்து நெடுஞ்சாலையான ஷேக் ஜாயித் சாலையில்,

1. பெரும் வணிக நிறுவனங்களும், சர்வதேச வணிகர்களும் பயனுறும் வகையில் வாகனங்களின் போக்குவரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் அல் ஸபா, அல் பர்ஸா என பிரித்து ஸாலிக் கட்டணம் வெட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2. அபுதாபி அமைத்து விரைவில் திறக்கப்படவுள்ள ஷேக் முஹமது பின் ராஷித் எனும் புதிய 62 கி.மீ நெடுஞ்சாலை இரு எமிரேட்டுகளின் எல்லையான ஷைஹ் சொஹைப் (Saih Shoaib) என்ற இடத்தில் நிறைவுறுவதாலும், இதில் வரும் துபை, ஷார்ஜா மற்றும் பிற எமிரேட்டுகள் செல்ல வேண்டிய வாகனங்கள் ஷேக் ஜாயித் சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளதால் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடனும்,

3. அல் ஸபா மற்றும் அல் பர்ஸா ஸாலிக் பிரிக்கப்பட்டுள்ளதால் ஷேக் ஜாயித் சாலைகளை பயன்படுத்துவோர் மாற்றுப்பாதைகளான அல் கைல் ரோடு (Al Khail Road), ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு (Sheikh Mohammed Bin Zayid Road) மற்றும் எமிரேட்ஸ் ரோடுகளை (Emirates Road) தேர்ந்தெடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸாலிக்கை தவிர்க்க உதவும் மாற்றுப் பாதைகள்:
1. கர்ஹூத் பிரிட்ஜ்  (Garhoud Bridge) (மக்தூம் பிரிட்ஜை) தவிர்த்துவிட்டு துபை கிரீக் ரோடு (Dubai Creek Road) செல்ல விரும்புபவர்கள் ஷிண்டாக டனலை (Shindhaga Tunnel) பயன்படுத்தலாம்.

2. மக்தூம் பிரிட்ஜ் (Maktoum Bridge) அருகிலுள்ள மிதவை பாலத்தை (Floating Bridge) பயன்படுத்துவது மற்றொரு வழி.

3. ராஸ் அல் கோர் (Ras Al Khor Road) மற்றும் அல் கைல் ரோடுகளை (Al Khail Road) பயன்படுத்தியும் ஸாலிக்கை தவிர்க்கலாம்.

ஸாலிக் கேட்டுகள் அமைவிடம் குறித்த விபரங்கள்:
அனைத்து ஸாலிக் டோல்கேட்டுகளிலும் ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போதும் 4 திர்ஹம் கணக்கிலிருந்து வெட்டப்படும்.

1. அல் பர்ஸா (Al Barsha)
2. அல் ஸபா (Al Safa)
3. அல் கர்ஹூத் (Al Garhoud)
4. ஏர்போர்ட் டனல் (Airport Tunnel)
5. அல் மக்தூம் (Al Maktoum) 
(சனிக்கிழமை முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 6 மணிவரையும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 9 வரையும் ஸாலிக் கட்டணம் இல்லை)

6. அல் மம்ஸார் சவுத் (Al Mamzar South)
(அல் மம்ஸார் சவுத் மற்றும் நார்த் கேட்டுகள் வழியாக ஒரு மணிநேரத்திற்குள் அதே திசையில் (On Same Direction Only) பலமுறை சென்றாலும் ஒரு முறை மட்டுமே ஸாலிக் கட்டணம் வெட்டப்படும்)

7. அல் மம்ஸார் நார்த் (Al Mamzar North)
(அல் மம்ஸார் சவுத் மற்றும் நார்த் கேட்டுகள் வழியாக ஒரு மணிநேரத்திற்குள் அதே திசையில் (On Same Direction Only) பலமுறை சென்றாலும் ஒரு முறை மட்டுமே ஸாலிக் கட்டணம் வெட்டப்படும்)

குறிப்பு: ஏர்போர்ட் டனல் மற்றும் மம்ஸரில் அமைக்கப்பட்டுள்ளவை புதிய ஸாலிக் டோல்கேட்டுகளாகும்.

ஸாலிக் கட்டணத்திலிருந்து முழுவிலக்குப் பெற கீழ்க்காணும் வகைகளின் கீழ் வரும் மாற்றுத்திறனாளிகள் துபை போக்குவரத்து துறையிடம் (RTA) விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

1. மனநல குறைபாடு உள்ளவர்கள் (Mental disabilities)
2. உடல்நல குறைபாடு உள்ளவர்கள் (Physical disabilities)
3. ஆட்டிஸம் எனும் மதி இறுக்கம் உள்ளவர்கள்
(Autism)
4. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். (Visual disabilities)

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதி அரேபியா, ஜித்தா மாநகரில் இந்தியன் சோசியல் ஃபோரம் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஜித்தா, மார்ச் 1,
சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்களுக்கு பல்வேறு தன்னார்வ பணிகளை இந்தியன் சோசியல் ஃபோரம் செய்துவருகின்றது. பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவுவது, இரத்த தானம் மற்றும்  விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது என் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றது. 

கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையன்று இந்தியன் சோசியல் ஃபோரம் ஜித்தா தமிழ்ப்பிரிவின் சார்பாக மாபெரும் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி  சவுதி அரேபியா, ஜித்தா மாநாகரில் ஷரபிய்யா இம்பாலா கார்டன் திறந்தவெளி அரங்கில்; ‘தேசத்தின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு’ என்ற தலைப்பில் சோசியல் ஃபோரம் ஜித்தா மாகாண தமிழ்பிரிவு தலைவர் சகோதரர் அல் அமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி சரியாக மாலை 7:30 மணியளவில் இளவல் சிபகத்துல்லாஹ்  திருமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். ஜித்தா மாகண சோசியல் ஃபோரம் பொதுச் செயலாளர் சகோதர் நாஞ்சில் நாசர்கான் அவர்கள் வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்று உறையாற்றினார்;. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சகோதரர் அல் அமான் அவர்கள் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் பணிகள் மற்றும் செயல்;பாடுகள் குறித்து தலைமை உரையாற்றினார்.

இஷா தொழுகையை தொடர்ந்து நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வு 8:30 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் இந்தியா பிரடெர்னிட்டி ஃபோரத்தின் ஜித்தா மாகாண தமிழ்பிரவு தலைவர் சகோதரர் அமீர் சுல்தான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து  ஜித்தா தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்; ஜெய்சங்கர், அப்துல் அஜீஸ், செந்தமிழ் மன்ற நிறுவனர் பாண்டியன், மெப்கோ துணைத்தலைவர் இஜாஸ் அஹமது, தப்ரஜ் தலைவர் சீனி அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இம்மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தாயகத்தில் இருந்து வருகைப் புரிந்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியா தற்போது பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகி தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புதன்மையை இழந்து கொண்டிருப்பதை தனது உரையில் விவரித்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலையையும் இந்திய அரசியல் சூழலையும் தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எடுத்துக் கூறினார். வாடிவாசலில் ஆரம்பித்த தமிழ தன்னெழுச்சிப் போராட்டம் தற்போது நெடுவாசல் வரை நீண்டுள்ளதையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சி அணைத்து போராட்டங்களிலும் முன்னிற்பதை எடுத்துக்கூறினார்.

அயல்நாடுகளில் பொருள் ஈட்ட வந்தும் தன்னலம் பாராமல் பிறர் நலம் நாடி, சிறந்த முறையில் செயல்பட்டு வரும் சமூக சேவையாளர்களை இந்தியன் சோசியல் போரம் ஒவ்வொரு வருடமும் “”சிறந்த சமூக சேவகர்”; விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. அது போன்று இவ்வருடம்  ஜித்தா தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்; ஜெய்சங்கர், அப்துல் அஜீஸ், செந்தமிழ் மன்ற நிறுவனர் பாண்டியன், மெப்கோ துணைத்தலைவர் இஜாஸ் அஹமது, தப்ரஜ் தலைவர் சீனி அலி ஆகியோருக்கு  சிறந்த சமூக சேவகர் கேடயத்தினை; எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள அவர்கள் வழங்கினார்கள். இவர்களின் சேவை வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரமாய் திகழ வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் என்பது நிறைவாய் தெரிந்தது. 

நிகழ்ச்சியின் இறுதியாக சோசியல் ஃபோரத்தின் துணைத்தலைவர் சகோதரர் முஹம்மது ராஃபி அவர்கள் இம்மாபெரும் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியினை சமூக சேவகர் பத்திரிகையாளர் ஜாபர் அவர்கள் தொகுத்து வழங்கினார். 

கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 400க்கும் மேற்ப்பட்டோர் பங்கெடுத்து பயன்பெற்றனர்.