.

Pages

Saturday, April 27, 2013

இலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் சிறப்புக் கவிதை ஒளிபரப்பு [ காணொளி ] !

இலண்டன் வானொலியில் ஒளிபரப்பாகும் கவிதை நேரம் நிகழ்ச்சிக்கு கவிதை எழுத ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் வித்தியாசமாக விருப்புத்தலைப்பிலும், நிறுவனத்தினரால் இடும்  தலைப்பிலும் கவிதை ஆர்வமுள்ளோர்கள் கவிதை பதியலாம். விருப்பமுள்ளோர் அனுப்பி வைக்கப்படும் தகுதியான கவிதையை இலண்டன் வானொலியின் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்வார்கள்.  அந்த வகையில் கடந்த வாரம் அன்று ''அடுத்தவர் எதிர்பார்ப்பு'' என்ற தலைப்புக்கொடுத்து  கவிதை  எழுதச்சொல்லி குறுகிய கால இடைவெளியில் கேட்டிருக்க  அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அதிரை.மெய்சா அவர்கள் உடன் எழுதி  அந்நிறுவனத்திருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு தரும் கவிதையை அங்கீகரித்து இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 25-04-2013 ] வியாழன் அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

கடந்த  [ 11-04-2013 ] அன்று இவரின்  'ஏங்கி நின்றான்' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர் எதிர்பார்ப்பு :

மண்ணுலகின் மாயவாழ்வில்
மடிதனில் நீ தவழும்போதே
விண்ணுயர வளர்ந்திட்டு
வீறுகொண்டு நின்றிடவே
உள்மனதில் உன்மீது
உறக்கமில்லா கனவுகளில்
கறக்கத்துடன் காத்திருக்கும்
தாயவளின் எதிர்பார்ப்பு

பஞ்சம் பசி போக்க்கிடத்தான்
பாரினிலே வாழ்ந்திடத்தான்
நெஞ்சம் உருகி கேட்டிடும்
நிர்க்கதியான மனிதர்கள்
தஞ்சம் என்று தரணியிலே
தவமாய் கிடந்தும் பாராமல்
கொஞ்சம் ஈரம் படைத்தவர்கள்
கொடுத்துதவும் கரங்களாய்
தர்மம் ஒரு எதிர்பார்ப்பு

கண்ணுக்கு இமையாக
கருமேகத்து மழையாக
மின்னிவரும் ஒளியாக
மிளிர்ந்திருக்கும் உடையாக
கொடியிடையில் நடையாக
கோடிப்பூக்கள் உடலாக
சொல்லில் அடங்கா வரியாக
சுகமான நினைவாக
காதல் ஒரு எதிர்பார்ப்பு

ஆசானின் ஆசைகளோ
அன்பான மாணாக்கள்
அகம் மகிழ தேர்வாகி
அவன் வாழ்வு சிறந்திட்டு
அகிலத்தில் திழைத்திட்டு
அன்புடனே ஆதரிக்கும்
அடியேனை மறவாது
அனுதினமும் நினைவுகூற
அன்னவரின் எதிர்பார்ப்பு

வாக்குகள்பெற வாக்குறுதிபல
வழங்கிட்ட தலைவர்கள்
நாக்குறுதி இல்லாமல்
நழுவிச்செல்லும் செயல் கண்டு
நாட்டுமக்கள் நலம் பயக்க
நல்லவர்கள் ஆட்சி செய்ய
நா வறண்டு நடுப்பகலில்
நடத்திட்ட போராட்டம்
மக்களின் ஒரு எதிர்பார்ப்பு

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்த நிலைகண்டு
துகில்பாடி வளம் வந்து
தொடரான அவலம் கண்டு
மதியதனை மனம் வென்று
மகிழ்வதனை பகிர்ந்திட்டு
சிறப்புடனே சீராட்டி
செழிப்புடனே வாழ்ந்திருக்க
அனைத்து ஆன்மாக்களின் எதிர்பாப்பு

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் கலந்துகொண்டோருக்கு மோர் உபசரிப்பு !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் வழக்கம் போல் நேற்றும் [ 26-04-2013 ] ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 'மார்க்க பிரச்சாரகர்' அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி அவர்கள் ' அனுமதிக்கப்பட வேண்டிய விருந்துகளும் / புறக்கணிக்கப்பட வேண்டிய விருந்துகளும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த ஜும்மா தொழுகையில் பெரும்பாலனோர் தொலை தூரங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்து கலந்துகொண்டனர். இதில் அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது.

Friday, April 26, 2013

தரகர் தெரு ஜூம்மாப் பள்ளியில் அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக் கூட்டம் !


அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் இனி ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து கடந்த [ 29-03-2013 ] அன்று மாலை 4.30 மணியளவில் முதல் கூட்டமாக நமதூர் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இன்று [ 26-04-2013 ] மாலை 4.30 மணியளவில் இரண்டாவதுக் கூட்டம் நமதூர் தரகர் தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஹாஜி ஜனாப். SKM. ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையில், தரகர்தெரு ஜமாத் நிர்வாகிகளின் முன்னிலையில், பைத்துல்மால் நிர்வாகிகளின் பங்களிப்போடு இனிதே துவங்கின.
[ Click on image to enlarge ]





நிகழ்ச்சியின் நிரல் :

1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் OKM. சிஹாப்துல்லா [ பொருளாளர் ]

2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் வழக்கறிஞர் A. அப்துல் முனாப் [ துணைத் தலைவர் ]

3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [ செயலாளர் ]

4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டம் கடந்த கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து முதன் முறையாக செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் இத்திட்டம் தொடர்பாக பேசப்பட்டது. இறுதியில் தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக தரகர்தெரு மஹல்லாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூபாய் 10,000/-ம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ]  முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையைக் கோரினார் அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி ஜனாப். SKM. ஹாஜா முகைதீன் அவர்கள்.

6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் OKM. சிஹாப்துல்லா [ பொருளாளர் ]

குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் புதுத்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

பலத்த மழையால் சூட்டை தணித்துக்கொண்ட அதிரை !

அதிரையில் இன்று [ 26-04-2013 ] காலை 7 மணி முதல் 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தெருவின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

கடும் வெயில் காரணமாக வெப்பத்தால் தவித்து வந்த அதிரை மக்களுக்கு, இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கின்ற அதிரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[ Click on image to enlarge ]




கடைசி செய்தி : மீண்டும் காலை 9 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

சென்னை அப்போலோ மருத்துவர்கள் அதிரைக்கு வருகை !

சென்னை அப்போலோ மருத்துவமனையின் எலும்பு, மூட்டு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள் அதிரைக்கு வருகை தர இருக்கின்றனர்.

Thursday, April 25, 2013

அதிரை தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணி !

அதிரையில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட  ரேஷன் கடைகள் உள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நியாய விலைகளில் சீனி, மண்எண்ணெய், இலவச அரிசி, சமையல் எண்ணெய், உளுந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன.

அதிரையில் அதிக எண்ணிக்கையில், அதாவது மேலத்தெரு, காட்டுபள்ளித் தெரு, பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதியில் இருந்து ஏறக்குறைய 2000 த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மேலத்தெருவில் அமைந்துள்ள நியாய விலைக் கடை எண் 6  பெற்றுள்ளது.



இந்தக் கடையிலிருந்து பொருட்களை வாங்கிச் செல்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருகை தரும் தாய்மார்கள் கடையைச் சுற்றிய வெளிப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்ற அவல நிலை காணப்பட்டு வந்தது. இதனால் வயதான ஒரு சிலர் அவ்வப்போது மயங்கி கீழே விழுவதும் உண்டு.

இதைக்கருத்தில் கொண்டு மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கம் நிர்வாகத்தின் சார்பாக வெயிலின் கொடுமையை குறைக்கும் விதமாக கடையைச்சுற்றி பந்தல் அமைத்துக் கொடுத்து, அதில் தண்ணீரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இதனால் இந்தக் கடையில் பொருட்கள் வாங்கிச்
செல்லும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைதுள்ளதோடு மட்டுமல்லாமல்  தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணியை பாராட்டத் தவறியதில்லை.

இது தற்காலிக பந்தல் என்றாலும் எதிர்காலத்தில் நிரந்திர செட் அமைத்து பொதுமக்களை வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்போம். இதுபோல் மற்ற மஹல்லாவில் அமைந்துள்ள நியாய விலைக்கடைகளிலும் அந்தந்த சங்க நிர்வாகத்தின் சார்பாக பந்தல் அமைத்து தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்தால் பொதுமக்கள் மிகவும் பயனடைவர்.

மரண அறிவிப்பு [ ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ]



காலியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது ஷெரிப் அவர்களின் மகனும், முஹம்மது புகாரி அவர்களின் சகோதரரரும், மர்ஹூம் முஹம்மது இல்யாஸ் அவர்களின் மருமகனும், முஹம்மது ஷெரிப் அவர்களின் தகப்பனாரும், இர்ஷாத் அஹமது அவர்களின் மாமனாரும், ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமாகிய செய்யது அலி ஆலிம் அவர்கள் நேற்று [ 24-04-2013 ] மாலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [  25-04-2013 ] மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

Wednesday, April 24, 2013

புதுப்பட்டினம் அபு மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் புதிய அட்மிஷன் !

காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் துல்கருணைன் அவர்கள் நிறுவனராக செயல்படும் புதுப்பட்டினம் அபு  மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் புதிதாக மாணவ மாணவியர் சேர்க்கை பணிகள் வருகின்ற [ 06-05-2013 ] அன்று முதல் துவங்க உள்ளது.
[ Click on image to enlarge ]






இந்தப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் :
1. பத்தாம் வகுப்பு தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

2. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

3. எல்லா வகுப்புகளுக்கும் [ ஸ்மார்ட் கிளாஸ் ] முறையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தாரின் உதவியோடு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

4. சிறந்த ஈடுபாட்டுடன் கூடிய தகுதி வாய்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

5. முப்பருவ கல்வி முறையின் அடிப்படையில் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையிலான கல்வி அளிக்க தகுந்த ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

6. தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலமாக உடற்கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ஸ்மார்ட் கிளாஸ் தவிர கணினி பாட பயிற்சி வகுப்புகள் சிறந்த நிறுவனத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது.

8. மாணவர்கள் அன்றாடம் கவனிக்கப்பட்டு நேரம் தவறாமை சீருடையில் வருதல் போன்ற நல்லொழுக்கங்கள் பேணப்படுகிறது.

9. இஸ்லாமிய மாணவர்களுக்கு அரபி மற்றும் தீனியாத் வகுப்புகளும் மற்ற மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

10. இந்தி பாட வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

11. மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு அன்றாடம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

12. வெளியூர் மாணவர்களுக்கு வாகன வசதி மற்றும் உணவு தங்கும் வசதி உண்டு.

மேலும் கூடுதல் விவரங்கள் தொடர்புக்கு :
தொலைபேசி : 04373 285555