.

Pages

Saturday, November 28, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் விளக்குகள் !

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் காணப்படும் சோடியம் மின் விளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிரை ஈசிஆர் சாலை கல்லூரி முக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையில் 10 க்கும் மேற்பட்ட மின்கம்பத்தில் சோடியம் மின் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று காலை அனைத்து மின் விளக்குகளும் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 
 
 

மறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் !

திமுக அதிரை அவைத்தலைவரும், அதிரை பேரூராட்சி 13 வது வார்டு உறுப்பினருமாகிய ஹெச். அப்துல் காதர் அவர்கள் கடந்த [ 24-11-2015 ] அன்று காலமானார். இவரது இறுதி சடங்கு மறுநாள் பகல் நடைபெற்றது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் மறைந்த ஹெச். அப்துல் காதர் அவர்களின் இல்லத்திற்கு இன்று காலை நேரிடையாக சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

அப்போது தமாகா அதிரை நகர தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அதிரை மைதீன், தமாகா பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், திமுக அதிரை வார்டு பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர் இப்ராஹீம், சுஹைப்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 

அதிரையில் அதிகபட்சமாக 16.1 மி.மீ. மழை !

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 16.1 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் இன்று ( சனிக்கிழமை ) காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ) அதிரை 16.1, பட்டுக்கோட்டை 6, வெட்டிக்காடு 4.4, பேராவூரணி 5, ஒரத்தநாடு 6.4, மதுக்கூர் 6.2, அய்யம்பேட்டை 4,  வெட்டிக்காடு 4.4, திருக்காட்டுப்பள்ளி 2.8, திருவையாறு 2 என பதிவாகியுள்ளது.

அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் வடிகால் தூர்வாரும் பணி !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரின் கோரிக்கை அடிப்படையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை செயல் அலுவலர் முனியசாமி ஆகியோரின் உத்தரவின் பேரில் மழை காலங்களில் தேங்கி நிற்கும் நீரை சீராக கொண்டுசெல்லும் வகையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு காட்டுப்பள்ளி தெரு பகுதி, மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில்  உள்ள வடிகால் வாய்க்கால் ஆகியவற்றில் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்த பகுதியில் படர்ந்து காணப்பட்ட முட்புதர்கள் அகற்றும் நடவடிக்கைகளில் அதிரை பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மற்றும் மேஸ்திரி நாடிமுத்து ஆகியோரின் மேற்பார்வையில் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பாதைகள் சரிசெய்யப்பட்டன.

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!


பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது 

காரணங்கள் என்ன?
இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்து அழுகின்ற குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

இப்படி பலர் நினைக்கின்றனர்.

வேறு சிலர் இப்படி கூறுகின்றனர்.

அதாவது, குழந்தை பிறந்தவுடன், சீரான சுவாசம் பெறுவதற்கு நுரையீரல் சீராக இல்லாமல் சுருங்கியே இருக்கும், அது விரிவடைய வேண்டுமானால், அதில் உள்ள பல்லாயிரக் கணக்கான அறைகள் திறக்க வேண்டும். அந்த அறைகள் திறந்தால் தான் சீராக முறையில் சுவாசிக்க முடியும்.

அதனாலேயே, இயற்கையிலேயே குழந்தை பிறந்த உடன் அலறுகிறது, அப்படி அலறும்போது நுரையீரலில் உள்ள அறைகள் படிப்படியாக திறக்குமாம்.

இன்னும் வேறு சிலர் இப்படி கூறுகின்றனர்.

அதாவது, குழந்தை தாயின் கருவறையில், தாயின் சூட்டோடு இருந்து விட்டு, வெளியில் வந்ததும் வித்தியாசமான சீதோஷ்ண நிலையின் காரணமாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

எது எப்படி? என்னதான் இருந்தாலும் குழந்தை பிறந்த உடன் அழுதே தீரும் என்று முதியோர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் கூறப்போவது என்னவோ? எதுவோ?

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.

Friday, November 27, 2015

பட்டுக்கோட்டையில் மாணவ மாணவியருக்கு விலையில்லா கல்வி வழிகாட்டி கையேடு மற்றும் மடிக்கணினிகள் வழங்கும் விழா !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா வழிகாட்டி மற்றும் விலையில்லா மடிக்கணினிகளை மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் அவர்கள் வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமை தாங்கினார்.

118 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 14 ஆயிரத்து 827  செட் விலையில்லா கல்வி வழிகாட்டி கையேடுகளையும், 29 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 4153 விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.  கல்வி மூலமாகத்தான் வறுமையை அகற்ற முடியும் என்பதால் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்.  இன்றைய சூழ்நிலைக்கேற்றார்போல் புதுமையான கல்விமுறைகளை வழங்கி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மடிக்கணினி திட்டத்தினை வழங்கி வருகிறார்.  கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர்கள் நேரத்தை மிச்சப்படுத்த மிதிவண்டி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.   மேலும் 14 வகையான உதவிகளையும் கல்விக்காக வழங்கி வருகிறார்.  கல்வியால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி பெறும் என்பதால் தேர்வுக்கு தயாராகும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கல்வி வழிகாட்டி மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவிற்கிணங்க இன்று வழங்கப்படுகிறது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத தயாராக உள்ள மாணவää மாணவியர்களுக்கு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும்.  மாணவää மாணவியர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழ் நாட்டிலேயே தஞ்சாவூர் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற்றுத்தர கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.

முன்னதாக விழாவில் கோவை பொறியாளர் ஆர். விஜயகுமார் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு புத்தாக்கல் மற்றும் நினைவாக்கல் பயிற்சியினை வழங்கினார்.  பயிற்சி வகுப்பில் மாணவ மாணவியர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது, படிப்பதை எவ்வாறு நிலைநிறுத்துவது, எவ்வாறு பழகுவது, அடுத்தவர்களுக்கு உதவும் பழக்கவழக்கங்கள், செய்யக்கூடாத தீய பழக்கங்கள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் எவ்வாறு மாணவ, மாணவியர்களுக்கு போதிப்பது, வெளிக்கொணர வேண்டிய திறமைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி. அமுதாராணி ரவிச்சந்திரன், முதன்மைக்கல்வி அலுவலர். திருமதி.ரெ.திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.எஸ். மதிவாணன், நகர்மன்ற தலைவர் திரு.எஸ்.ஆர். ஜவகர்பாபு, ஒன்றியக்குழு தலைவர் திரு.குழ.சுந்தரராஜன், கல்வி புரவலர்கள் திரு.பி.என்.ராமச்சந்திரன், திரு. இரா.கார்த்திகேயன், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.வி.கே.டி.பாரதி, திரு.சுப. ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் திரு.உ.துரை.மாணிக்கம், திரு.சுப்ர மணியன், மத்திய கூட்டுறவு இயக்குநர் திரு.ஜெயபிரகாஷ் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.மயில்வாகணன், ஆசிரியை, ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

துபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு !

துபாய்: வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம், செடிகளோடு இயற்கை சூழலை உருவாக்க முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் அழகிய‌ தோட்டங்களை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில் 2013ம் வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் வித விதமான‌ பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் துபாயில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக மூடப்பட்ட  துபாயில் உள்ள பிரம்மாண்ட மலர் பூங்கா நேற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பூங்கா அரங்கில் நடைபெற்றது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர். இப்பூங்கா வருடத்தில் ஆறுமாத காலம் செயல்படும்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 4.5 கோடிக்கும் மேற்பட்ட மலர்களோடு இப்பூங்கா ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அழகிய வடிவங்களோடு மலர் அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். உலகின் மிகப்பெரிய மலர் பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 

நன்றி:தினகரன்

சாபூத்திரி விளையாட்டுடன் செக்கடி குளத்தில் உற்சாக குளியல் !

அதிரை பேரூராட்சியின் சார்பில் அதிரை அருகே உள்ள நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைத்து செக்கடி குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வந்தடைந்த பம்பிங் நீரால் செக்கடி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் செக்கடி குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால் நாளுக்கு நாள் குளத்திற்கு குளிக்க வரும் கூட்டம் அதிகமாகிறது. தினமும் சராசரியாக 100 பேர் வரை குளித்து மகிழ்கின்றனர். குளத்தில் டைவ் அடித்து, நடுப்பகுதி வரை நீந்தியும் செல்கின்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இவர்களின் குளியல் செக்கடி குளம் நடை மேடையில் வாக்கிங் செல்வோரை சுண்டி இழுக்கிறது. நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை அசைபோடும் விதமாக 'சாபூத்திரி' விளையாட்டுடன் மனம் மகிழ்வுடன் குளிக்கும் ஒவ்வொருவரும் குளித்து முடித்தவுடன் வீட்டில் இருந்து ஸ்பெஷலாக சமைத்து எடுத்துவரும் காலை உணவுகளை குளத்தின் கரையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

தினமும் செக்கடி குளத்தில் குளித்து வரும் கால்பந்தாட்ட பயிற்சியாளர் அன்வர் அலி அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
கடல் போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் தினமும் காலை நேரத்தில் இந்த பகுதி நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து குளித்து வருகிறேன். குளத்தின் நீர் சுத்தமாக இருப்பதால் நீண்ட நேரம் குளிப்பதில் அதிக ஆர்வம் வருகிறது. குளத்தின் நடுப்பகுதி வரை நீந்தியும் செல்கிறேன். இதனால் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. குளத்தில் நீந்தி குளிப்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மேலும் குளித்து முடித்தவுடன் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை பசியாற செய்கிறோம். மலேசியாவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய 'நாசிலிமாஹ்' என்ற உணவை நேற்று காலை சாப்பிட்டோம். நண்பர்கள் மத்தியில் இந்த உணவிற்கு கிடைத்த உற்சாக வரவேற்பை அடுத்து இன்று காலை நோன்பு கஞ்சியுடன் வடை சமூசா, இஞ்சி டீ ஆகியவற்றை சாப்பிட்டோம். நாளை காலை புரோட்டோ, மாட்டுக்கறி உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்து உபசரிப்பில் 50 பேர் முதல் 60 பேர் வரை கலந்துகொள்கிறோம்' என்றார்.