தஞ்சாவூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கலால் துறையின் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக அரண்மனை வளாகம் சென்றடைந்தது. திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், போதைப்பொருள் உட்கொள்வதால் மன ரீதியான பாதிப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தியும், போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் அவர் லேடி நர்சிங் கல்லூரி, மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் ரெட் கிராஸ் சங்க பிரதிநிதிகள், யூத் ரெட் கிராஸ் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.