.

Pages

Sunday, December 31, 2017

ஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்!

அதிரை நியூஸ்: டிச.31
ஷார்ஜா எமிரேட்டிலும் கிருஸ்தவ புத்தாண்டையொட்டி இலவச பார்க்கிங் இன்றும் நாளையும் அதாவது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது. அதேவேளை பார்க்கிங் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷார்ஜா போக்குவரத்து துறையின் அலுவலக நேரம் 2018 ஆம் வருடம் முதல் மாற்றி அமைக்கப்படுகிறது. ஞாயிறு முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணிமுதல் பகல் 2 மணிவரை செயல்படும். இதற்கு முன் காலை 7.30 மணிமுதல் பகல் 2.30 வரை செயல்பட்டு வந்தது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்திகை நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், டிச. 31
விவசாயத்தை போற்றும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் கின்னஸ் சாதனை முயற்சியாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் பரத நாட்டிய நிகழ்ச்சி, இன்று டிச.31 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், முதன் முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 2 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்.

இதையொட்டி, பள்ளி மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
 

Saturday, December 30, 2017

13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீதிமன்றம்!

அதிரை நியூஸ்: டிச.30
13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீதிமன்றம்.

தாய்லாந்தில் 'புடித் கிட்டித்ரடிலோக்' என்ற 34 வயது நபர் 'ஒருத்தன ஏமாத்தனும்னா முதல்ல அவனோட ஆசைய தூண்டனும்' என்ற புகழ்பெற்ற வசனத்திற்கேற்ப பல மோசடி நிறுவனங்களைத் துவக்கி சுமார் 160 மில்லியன் டாலர்களை (சுமார் 120 மில்லியன் யூரோக்கள்) சுமார் 40,000க்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ஆட்டையை போட்டுள்ளார்.

நிறைய லாபம் தருவதாக சொன்ன படித் துவங்கியது எல்லாமே வெறும் லட்டர்பேடில் மட்டுமே செயல்பட்ட நிறுவனங்கள் தான். எனவே இவர் மீது சுமார் 2,653 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2 குற்றங்கள் புடித் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் சுமார் 13,000 சொச்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 6,637 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தால் போதும் என சலுகை வழங்கப்பட்டது. கேலிக்கூத்து இத்துடன் நின்றுவிடவில்லை. தாய்லாந்து சட்டப்படி ஒரு குற்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானாது என்பதால் 2 குற்றங்களுக்கும் சேர்த்து 20 ஆண்டுகள் உள்ளே இருந்து விட்டு வெளியே வந்து விடலாமாம். அப்புறம் என்ன கூந்தலுக்கு 13,000, 6,657 ஆண்டுகள் சிறை என கனவிலும் நடக்காத காரியத்தை தண்டனையாக வழங்க வேண்டும்?

ஊர்ஜிதம் செய்யப்பட்ட அந்ந 2 குற்றங்களின் மீது புடித் நடத்தி வந்த 2 நிறுவனங்கள் 20 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகையை கொண்டு வட்டியுடன் 2,653 முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போ முதலீடு, வரும் ஆனா வராது.

Source: BBC News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

துபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மீட்டது போலீஸ்!

அதிரை நியூஸ்: டிச.30
துபையில் பாலைவனத்தில் சிக்கியிருந்த நபரை நவீன தொழிற்நுட்ப உதவியுடன் மீட்டது போலீஸ்

துபையின் நட்டநடு பாலைவனப் பகுதியில் இரவு நேரத்தில் காருடன் சென்று வெளியேற முடியாமல் சிக்கி இருந்த நபரை துபை போலீஸார் ஹெலிகாப்டர் உதவியுடன் 'தெர்மோ-கேமராவை' பயன்படுத்தி தேடியதன் விளைவாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

இந்த போட்டோவைத் தவிர வேறு எந்த தகவலையும் துபை போலீஸார் வெளியிடவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்!

அதிராம்பட்டினம், டிச.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவ்வமைப்பின் கலந்தாலோசனைக்கூட்டம் செக்கடிப் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். சுமுக தலைவர் தமீம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் செக்கடிப் பள்ளிவாசல், முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை சாலையோர மரக்கன்றுகள் வளர்வதற்கு பயன்படுத்தும் வகையில், இப்பணியை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், ரசூல், மிஃப்த்தா, ஆஷிக், கமாலுதீன், அமீன், சேக் அலி, அபூபக்கர், சாகுல் ஹமீது, முகமது சலீம், சேக் மதினா, அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

தமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை பெறுகிறார்!

தஞ்சாவூர் மாவட்டம், தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் சலங்கை நாதம் நிறைவு விழா மற்றும் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 171வது  ஆராதனை துவக்க விழா நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கலந்து கொள்ள 01.01.2018 அன்று வருகை தரவுள்ளார்கள்.

02.01.2018 அன்று தஞ்சாவூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் மாலை 3.30 மணியிலிருந்து 05.00 மணி வரை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள்  மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க உள்ளார்கள். 

எனவே, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை சந்திக்க விருப்பமுள்ள மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் 02.01.2018 ஆம் தேதி அன்று மாலை 3.30 மணியிலிருந்து 5.00 மணி வரை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை சந்தித்து மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக பட்டமளிப்பு விழா!

அதிராம்பட்டினம், டிச. 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-2 தலைவர் ஃபஜால் முகைதீன் தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.எஸ் சுலைமான் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகள் 15 பேருக்கு 'ஆலிமா' பட்டங்கள் வழங்கி பேசியது; மாணவிகள் தான் கற்றறிந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறையை முழுமையாக பின்பற்றுபவராகவும், பிறருக்கு எடுத்துரைப்பதில் சிறந்தவராகவும் விளங்க வேண்டும்' என்றார்.

விழாவில், அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக முதல்வர், அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி, டிஎன்டிஜே தஞ்சை மாவட்டத் தலைவர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். விழா முடிவில் கல்லூரி ஆசிரியை நூருல் ஜன்னா நன்றி கூறினார்.

விழா ஏற்பாட்டினை, அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக நிர்வாகம் செய்தது. இதில், அதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

Friday, December 29, 2017

எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் தன்னார்வல இளைஞர்கள் முகமது  நியாஸ், முஹம்மது, இப்ராஹிம்ஷா, அல் அமீன், நியாஸ் கான், ஆரீப் அகமது, அசாருதீன், முகமது கனி, நசீர் அகமது, பாவா பகுருதீன், அபூதாஹிர், அப்துல் ரஹ்மான், சாகுல்ஹமீது, கமாலுதீன் ஆகியோர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து, இப்பகுதியையொட்டி அமைந்துள்ள செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர் வடிகால் வசதி, பழுதடைந்த  சாலைகளை சீரமைத்து புதிதாக தார்சாலை வசதி, பிலால் நகர் இணைப்பில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையை, இப்பகுதி பொதுமக்கள் கடந்துசெல்ல புதிதாக நடைபாலம் ஆகிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து செய்துதர வலியுறுத்தி மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட பகுதிகளை தான் நேரில் ஆய்வு செய்து, கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார். அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் பேரூர் செயலர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை அம்மா பேரவை இணைச்செயலர் ஆதிராஜாராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.