.

Pages

Tuesday, October 7, 2014

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு -அதிரையில் பரபரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தர பெங்களூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த வாரம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவருக்கு இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என அதிமுகவினர் அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் பெங்களூர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளமை தமிழகம் முழுவதும்  அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது அதிரையிலும் பிரதிபலித்தது. இன்று காலை  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் பலருக்கும் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக ஜாமீன் கிடைத்ததாக ஊடகங்களில் செய்தி பரவியதை அடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் அது சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு அது பொய்யான தகவல் என்றவுடன் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.





1 comment:

  1. வஞ்சரம் மீன் இருக்குன்றான் .. வாள மீன் இருக்குன்றான்...கெண்ட மீன் இருக்குன்றான்....கெளுத்தி மீன் இருக்குன்றான்...அவ்வளவு எதுக்கு ? திருக்க மீன் கூட இருக்குன்றான்,,,,ஆனா ஜாமீன் மட்டும் இல்லவே இல்லேன்னு சொல்லுரான்னே! இப்படி சொல்லி சிரிக்க வேண்டியது தான்.

    4 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது அம்மாவுக்கு விசுவாசம் காண்பிக்க என்ன பில்டப் பண்ண முடியுமோ அத்தனையும் இந்த அல்லகைகள் பண்ணுது. மற்ற 3 பேருக்கு ஒரு ஏறும்புக்கூட எதிர்ப்பு தெருவிக்க வில்லை.

    ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடி சுருட்டியவங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களே! , காமராஜர் தன் கார் பழுதான போது டாக்ஸில் அலுவலகத்துக்கு வந்தார் அப்போ தன் உதவியாளரிடம் டாக்சி காரருக்கு பணம் கொடுக்க சொன்னாராம், கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன் என்றார் உதவியாளர், கேட்ட பணத்தை கொடுப்பதா? மீட்டர் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று டோஸ் விட்டதோடு " மக்கள் பணம், அது நெருப்பு போன்றது அதை பக்குவமாக பயன்படுத்த வேண்டும் என்றாராம்". இப்போ உள்ள தலைவர்கள் மக்கள் பணத்தை எப்படி திட்டம் அறிவித்து கொள்ளை அடிக்கலாம் என்று இருக்கிறார்கள்.

    உங்கள் விசுவாசத்தை காட்ட MP , MLA மேயர், ஊராட்சி, கௌன்சிலர் பதவில்லாம் ராஜினாமா செய்து விட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெருவிக்கலாமே?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.