.

Pages

Sunday, October 12, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் நடந்த வாகன விபத்தில் மீனவர் பரிதாப பலி !

அதிரை கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் சின்ன தங்கராசு ( வயது 58 ). இன்று மதியம் 2.15 மணியளவில் ஈசிஆர் சாலையில் சைக்கிளில் தனது இருப்பிடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்றபோது அதே சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடியை நோக்கி மீன்களை ஏற்றிசென்ற டெம்போ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த தமுமுக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. பிரத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரத பரிசோதனை முடிந்த பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து அதிரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

3 comments:

  1. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக மாறிவிட்டது எனவே ECR ரோடு என்பதை DEAD ZONE என பெரிய போர்டை வாகன ஓட்டிகளின் பார்வை படும்படி வைக்க வேண்டும்,

    ஊழல் புரிந்த அம்மாவுக்கு ஆதரவு காட்டிய மீனவ சமுதாயம் சாராய கடையெய் அகற்ற போராடதது ஏன்?

    பெரியவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.

    ReplyDelete
  2. வெளிமானிலம்,வெறிமாவட்டங்களில்லிருந்து பயணம் மேற்கொள்பவர்கள நேரத்தையும் தூர்த்தையும் மட்டும்மே கருத்தில் கொண்டு வேகத்தை குறைக்காமல் வருகிறதை திண்மும் e c r காணமுடிகின்றன பாதசாரிகளும் பயனாலிகளும் நாம் e c r என்ற நெடுஞ்சாலையின் தன்மை அறிந்து நாம்தான் கவனமாக கடக்கவேண்டும் என்ற உணர்வு இருந்தால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  3. பொதுவாக கவனக் குறைவே காரணம்.இடம் பார்த்து வாகனம் செலுத்த வேண்டும் .அதுபோல், சாலை கடப்பவறும் சற்று கவனித்து சென்றாள் இந்த சோகத்தினை தவிர்க்கலாம் ..அவர் குடும்பத்தார்களுக்கு எனது இரங்களை செலுத்துகின்றேன். இறைவன் .அவர் பாவம் மன்னித்து நல் அருள் பாலிப்பானாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.