.

Pages

Tuesday, October 7, 2014

நிறைவுற்றது ஹஜ் ; ஹாஜிகள் பெருமிதம்!

கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வுகள் இன்றோடு முடிவுற்றது. ஹாஜிகள் அனைவரும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று ஷைத்தானுக்கு கல்லெறிந்து தங்களது ஹஜ் கடமையை இனிதே நிறைவேற்றினார்கள்.

கடல் கடந்து வந்து இந்த கடமையை நிறைவேற்றிய அனைத்து ஹாஜிகளும் வாழ்வில் ஒருமுறையேனும் இந்த புனித இடத்தில் காலடி பட வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.

இன்று சவூதியில் பிறை 13 சில ஹாஜிகள் இன்றும் மினாவில் தங்கி ஷைத்தானுக்கு கல்லெறிந்து வருவதும் வழக்கம்.

3 comments:

  1. இன்ஷா அல்லா இந்த ஹாஜிகளின் உண்மை தக்வாவை வல்ல இறைவன் ஏற்று நன்மை அருளட்டும் ஆமீன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எனக்கு 1988 ல் ஹஜ்ஜில் அக்பர் ஹஜ்ஜை நிறைவேற்ற வல்ல நாயன் கிருபை செய்ததை நினைவு கூர்ந்து அல்லாஹ்வை புகழ்கின்றேன்..மேலும் 1989-1993 முதல் மக்காவிலும் ஜித்தாவிலும் பனி நிமிர்த்தம் மக்காவின் அதிக இடங்களை சுற்றி பார்த்தவன் ஹிரா மலை மேல் ஏறுவது இலேசான காரியமல்ல மலைமேல் இருக்கும் அந்த குகையில் அப்போதைய என்னுடைய மெலிந்த உடல் கூட சிரமபட்டே உள்புக முடிந்தது அதன் பாக்கியமும் கிடைக்க பெற்றேன் ..நாம் அனைவர்களின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுகொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் ஆமீன் .நான் அங்கு வசித்த காலங்களில் மக்கா அருகில் ஜூமூம் என்ற இடத்தில் தான் எனது இருப்பிடம் அங்கே தான் ரசூல் (ஸல் ) அவர்களின் மனைவிமார்களின் ஒருவரான மைமூன் (ரலி ) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது இது ஹஜ்ஜாளிகள் அதிக பேர்களுக்கு தெரியாது என்றே சொல்லலாம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.