.

Pages

Sunday, October 12, 2014

அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி - நேரடி ரிப்போர்ட் !

இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரை இளைஞர்களின் சார்பில் இரண்டாம் ஆண்டாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ( ஈத் மிலன் ) அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் இன்று 12-10-2014 காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம். ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். ஊர் ஜமாத் தலைவர்கள் - கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எஃப்.டி அறக்கட்டளையின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, வழக்கறிஞர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் எம். ஹாஜா முகைதீன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

8 comments:


  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete

  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. விருந்து வச்சா கூட்டம் கூடும் , சமயம் கிடைக்கும் போது வாலாட்டாமல் இருந்தால் சரிதான். இதன் மூலமாவது சகோதரத்தன்மை ஓங்கட்டும்- வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரத்துவம் ஓங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .

      Delete
  6. ஒற்றுமையுடன் ஒன்றுகூடும் நிகழ்ச்சியா ! அதிரை பேரூர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் என்னச்

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள நிகழ்ச்சி


    இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு கடிதம்!!
    http://kadithams.blogspot.com/2014/10/blog-post.html

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.