.

Pages

Monday, October 6, 2014

ஆஹா... ஆஹா.. பெருநாள் ! [ காணொளி இணைப்பு ]

ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
அல்லாஹ் நமக்களித்த
அழகான ஒருநாள்!

ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!

அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!

குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!

புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...

உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!

தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!

ஊருக்கே உரித்தான ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!


KulluAam WaAnthum BiKhair

பாடல் வரிகள் : சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
குரல் : ஜஃபருல்லாஹ் 

நன்றி : அதிரை நிருபர்
பரிந்துரை : ஜஃபருல்லாஹ்

4 comments:

  1. ஆஹா கவிதையும் குரலும் அருமை !

    அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஜோரான பெருநாள்
    சூப்பரான தியாகத் திருநாள்
    கவிதை வரியிலும் பாடி
    கலக்கும் நல்ல பெருநாள்

    அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    தம்பி சேக்கனா நிஜாம்,

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    குல்லுஆம் வஅன்த்தும் பிஹைர்!

    ReplyDelete
  4. ஆஹா கவிதையும் குரலும் அருமை !

    அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.