.

Pages

Friday, October 10, 2014

அதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் !

தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் கடற்கரைத் தெரு இல்லத்தில் இன்று (10-10-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.

இதில் நமதூர் காட்டுப்பள்ளி தெருவை சேர்ந்த காலஞ்சென்ற S.S. சம்சுதீன் அவர்களின் மகன் தமீம் அன்சாரி மணமகனுக்கு, கடற்கரைதெருவை சேர்ந்த காலஞ்சென்ற முஹம்மது தமீம் அவர்களின் மகளை 16 கிராம் தங்க நகையை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் முஜாஹிதீன் கலந்து கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட வரதட்சணையின் தீமை குறித்தும், மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். இதில் ஜமாஅத் நிர்வாகிகள், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது. ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







7 comments:

  1. திருமண வாழ்த்துக்கள் தமீம்...........

    ReplyDelete
  2. Masha Allah,,,, திருமண வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திருமண வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  4. மணமக்களுக்கு என் திருமண நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

    ஸஹீஹுல் புகாரி 1905. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
    Volume:2,Book:30.

    ஸஹீஹுல் புகாரி 5112. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 'ஷிஃகார்' முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஒருவர் மற்றெவாருவரிடம் 'நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்'' என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே 'ஷிஃகார்' எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் 'மஹ்ர்' (விவாகக் கொடை) இராது.
    Volume:5,Book:67.

    ஸஹீஹுல் புகாரி 5171. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அறிவித்தார் (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் திருமணம் குறித்து அனஸ்(ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்து பின்) வலீமா - மணவிருந்தளித்த அளவு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.
    Volume:5,Book:67.

    ReplyDelete
  6. பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்

    ReplyDelete
  7. மாஷா அல்லா, இன்ஷா அல்லா இந்த தம்பதிகள் நீடோடி வாழ இறைவன் அருள் பொழி யட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.