.

Pages

Saturday, May 9, 2015

அதிரையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் எதிர்வரும் [ 16-05-2015 ] காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று மாலை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி அவர்களை கும்பகோணம் இல்லத்தில் நேரடியாக சந்தித்து தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:

2 comments:

  1. We will get to success gaol very soon. ........

    ReplyDelete
  2. நந்தவனத்தில் ஒரு ஆண்டி.. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி.. கொண்டுவந்தான் ஒரு தோண்டி. அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைச்தாண்டி .... இது தான் நினைவுக்கு வருது, 24 மணி நேர சேவைக்கு எத்தனையோ முயற்சியடுத்தமை காட்டிலும் பஸ் மறியலுக்கு கிடைத்த ஆதரவு இந்த அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்குமா என்பது கேள்வி தான் அதிலும் தேர்ந்தெடுத்த இடமோ மக்கள் அதிகம் கூடும் இடமல்ல. வாக்குர்தி கொடுத்தும் நிறைவேரவில்லையனால் அதில் உள்குத்து வேலை நடந்திருக்க கூடும் அல்லது அரசு அதிகாரிகள் எதையோ எதிர் பார்க்கிறார்கள் போல. தமிழ்நாட்டின் நிலைமை அப்படி தான் உள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.