.

Pages

Thursday, December 26, 2013

மரண அறிவிப்பு [ கீழத்தெரு அரிசிக்கடை M.ஹாஜா அலாவுதீன் அவர்கள் ]

 

கீழத்தெருவை சேர்ந்த பாட்டன் வீட்டு மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனாரும், மர்ஹூம் தியாகி S.S.இப்ராஹீம் அவர்களின் மருமகனும்   மர்ஹூம் பக்கீர் முகம்மது, மர்ஹூம் செய்கு நசுருதீன் ஆகியோரின் சகோதரரும் , H.அலிஅக்பர்கான், H.நிஜாமுதீன்,H.இம்ரான்கான் ஆகியோரின் தகப்பனாருமாகி அரிசிக்கடை ஹாஜா என்கிற M.ஹாஜா அலாவுதீன் அவர்கள் [26/12/2013] இன்று இரவு 8.00 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா 27/12/2013 நாளை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்ப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் !

பட்டுகோட்டை பேருந்து நிலையம் அதிக நெரிசல் உள்ளதால், புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை அறந்தாங்கி சாலை, வளவன்புரம், தென்னை ஆராய்ச்சி நிலையம் அருகிலும், சாந்தன்காடு, கோழிப்பண்ணை மற்றும் நீரேற்று நிலையம் ஆகியவற்றின் அருகில் உள்ள இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என். சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வருவாய் துறை அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ், நகர் மன்ற தலைவர் ஜவஹர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

அமெரிக்கா கலிபோர்னியாவில் விடுமுறை தினத்தில் ஒன்றுகூடிய அதிரையர்கள் ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் பே ஏரியா பகுதியில் உள்ள தமிழ் சங்கமும் அதிரையர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சகோதரர் மீயன்னா சலீம் அவர்களின் இல்ல அலுவலக கான்பரென்ஸ் ஹாலில் நடைபெற்றது.

இன்று அமெரிக்காவில் டிசம்பர் 25 விடுமுறை தினம் ஆதலால் அதிரையர்களும் தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்ந்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

குழைந்தைகள் அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மதிய உணவு மற்றும் ஈவ்னிங் டீ பார்ட்டி ஏற்பாடுகளை சகோதரர் மீயன்னா சலீம் அவர்களும், சகோதரர் கபூர் அவர்களும் தமிழ் சங்கத்தை சேர்ந்த சகோதரர் கம்பம் அப்துல்லாஹ் அவர்களும், சகோதரர் தஞ்சை வல்லம் ஜுபைர் அவர்களும் சகோதரர் கம்பம் அசீம் அவர்களும் மற்றும் பே ஏரியா தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

கலிபோர்னியாவிலிருந்து அதிரை நியூஸ் செய்தியாளர்




     

அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்ட அறிவிப்பு !

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நாளை 27-12-2013 மாலை 6 மணியளவில் தக்வா பள்ளி அருகே மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் 'ஏகத்துவம்' என்ற தலைப்பில் மவ்லவீ முர்ஷீத் அப்பாஸி அவர்களும், 'இளைஞர்களே உங்களைத்தான் !' என்ற தலைப்பில் மவ்லவீ சித்தீக் இஸ்லாமி அவர்களும் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Wednesday, December 25, 2013

அதிமுக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் அவர்களோடு ஒரு நேர்காணல் !

கடந்த 2011 ம் ஆண்டு நடந்த அதிரை பேரூர் மன்ற உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டியில் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்களுக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக புதிய பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதை செய்தியாக அதிரை நியூஸ் வெளியிட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஊர் வந்திருப்பதை அறிந்துகொண்ட நாம் காலை பொழுதில் அவரது அலுவலகத்தில் சந்தித்து நமது வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு கீழ்கண்ட நமது கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

1. அதிமுக கட்சி உங்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் செயலாளராக பொறுப்பு வழங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன ?
2. கட்சி வழங்கியுள்ள இந்த பொறுப்பின் மூலம் அதிரை நலன் சார்ந்த என்னென்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
3. கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற தங்களின் பங்கீடு எவ்வகையில் இருக்கும் ?
4. இஸ்லாமியர்கள் விடுமுறை தினமாக கடைபிடித்து வரும் வெள்ளிக்கிழமை அன்று சில வேளைகளில் அரசு பொதுத்தேர்வு நடத்திவருவது தொடர்பாக உங்களின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் ?

இதோ அவருடைய பதில்கள்...





மரண அறிவிப்பு [ தக்வா பள்ளி டிரஸ்டின் செயலாளர் ஹாஜி அப்துல் சுக்கூர் அவர்கள் ]

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அஹமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், அப்துல் ஹாதி, சைஃபுதீன், முஹம்மது ஸாலிஹ் ஆகியோரின் தகப்பனாரும், MKN டிரஸ்டின் தலைவரும், தக்வா பள்ளி டிரஸ்டின் செயலாளருமாகிய ஹாஜி A. அப்துல் சுக்கூர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவது குறித்து பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

வறண்டு காணப்படும் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயற்சிக்கும் தாஜுல் இஸ்லாம் சங்கத்தினர் !

அதிரையில் வாழுகின்ற அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்த அதிரை செடியன் குளம் மற்றும் நமதூர் பெண்கள் பயன்படுத்தி வந்த மரைக்கா குளம் ஆகியவற்றில் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையை கருத்தில் கொண்டு அதிரை பெரிய ஜும்மா பள்ளி, தாஜுல் இஸ்லாம் சங்கம், கீழத்தெரு சங்கம், பிலால் நகர் ஜமாத் ஆகியவற்றின் சார்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியரை கடந்த [ 23-12-2013 ]அன்று சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்கள்.

தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் சிஎம்பி வாய்க்காலிலிருந்து தண்ணீரை மரைக்கா குளத்திற்கு கொண்டு வருவதற்காக இன்று காலை முதல் தற்காலிக வாய்க்கள் அமைக்கும் பணியை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மரைக்கா குளத்தில் மண்டிகிடக்கும் கருவ முள்ளுகளை அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.

இந்த பணிகளை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஜஃபருல்லா, PMK தாஜுதீன், அப்துல் ரெஜாக், தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகி B. ஜமாலுதீன் ஆகியோர் களத்தில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தபணிகளை கீழத்தெரு சங்க நிர்வாகிகள் மான் A. நெய்னா முஹம்மது, சேக்தாவூது, N.M.S. மன்சூர், மான் A. சேக் மற்றும் பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகி முகம்மது மொய்தீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.





2013 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வுகள் - ஒரு தொகுப்பு [ புகைப்படங்கள் ]

06-01-2013 : அதிரையில் கடந்த [ 06-01-2013 ] அன்று காலை அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டபந்தயத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.  சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறுவர்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள்,பெரியவர்கள் என பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். 

20-01-2013 : அதிரை கடற்கரை தெரு தர்ஹாவின் ஒரு பகுதியில் ஜொஹரா அம்மா என்ற பெயரில் திடீர் தர்ஹா ஏற்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

07-02-2013 : AAMF'ன் நிர்வாகிகள் கும்பகோணம் சென்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து நமதூர் பொது நலன் தொடர்பான அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது, அதிராம்பட்டினத்திலிருந்து – மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம் – திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்துகள் வசதி செய்து தரக்கோருதல், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலையைப் புதுபித்தல் ஆகிய முக்கிய பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.

04-03-2013 : இன்று [ 04-03-2013 ] காலை 9.45 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்கள் லேப்டாப் வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 01-04-2013 : கடந்த [ 01-04-2013 ] அன்று நடுத்தெரு தக்வாப் பள்ளியின் நிர்வாக பொறுப்புக்கு புதிய நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட வக்ஃப் அலுவலர்களின் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து கடந்த [ 04-04-2013 ] அன்று இரவு தக்வா பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி நடைபெற்றது. 

28-04-2013 : வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு கடந்த [28-04-2013 ] அன்று பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. முதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்று இருந்தன.

17-04-2013 : அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிலம் தொடர்பாக பள்ளியை நிர்வகித்து வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கும், அதிரை பேரூராட்சி நிர்வாகித்தினருக்கும் வாதி பிரதிவாதியாக வழக்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன.

இவற்றில் மற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முக்கியமாக கருதப்படுகிற ‘இந்த இடம் யாருக்கு சொந்தம் ? ‘ என்ற வழக்கில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் இந்த இடம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு சொந்தம் என்றும், அதில் பள்ளிவாசல் கட்டுவதற்குரிய முயற்சியில் சங்கத்தினர் ஈடுபடலாம் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

21-04-2013 : நக்கீரன் என்ற புலனாய்வு வார இதழின் 'சொன்னா நம்பமாட்டீங்க !' என்ற பகுதியில் அதிரை பேரூராட்சியின் ஊழல் குறித்த செய்தி இந்த வார [ 2013 ஏப்ரல் 20-23 ] என்ற தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது. இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தன. இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
21-05-2013 : பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும், இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

[ 21-05-2013 ] பகல் 1 மணியளவில் திருவாரூரிலிருந்து வருகை தந்த இரயில்வே கோட்ட பொறியாளர் அருள் மொழி அவர்கள் ஆய்வை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், JCP இயந்திரத்தைக் கொண்டு சாலையில் அமைந்துள்ள வேகத்தடைகள், அபாயகரமான வளைவை எச்சரிக்கும் அறிவிப்பு பலகைகள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்திவிட்டு மூடிய கேட்டுகளை வாகன போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.

01-06-2013 : அதிரை அரசு பொதுமருத்துவமனையின் கூடுதல் மருத்துவருடன் கூடிய 24 மணி நேர சேவை, அதிரையிலிருந்து மன்னார்குடிக்கு புதிதாக அரசு போக்குவரத்து துவக்குதல், அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலையை மறு சீரமைத்து தருதல் உள்ளிட்ட அதிரை நகர பொதுமக்களின் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை நியூஸ் வலைத்தள நிர்வாகிகள் நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களை சந்தித்து நேர்காணலை நடத்தினர்.

17-06-2013 : தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அதில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி எழுப்புவதற்காக ரூபாய் 85 இலட்சம் பொருட்ச்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக கடந்த [ 17-06-2013 ] அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

29-07-2013 : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் இன்று பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  பஸ் கவிழ்ந்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர். இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

01-08-2013 : நாகப்பட்டினத்திலிருந்து ஈசிஆர் சாலை வழியாக அதிரையை கடந்து செல்லும் போது எதிரே வந்த நாய் குறுக்கே புகுந்ததால் திடிரென்று பிரேக் போடும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆறு மாதமே ஆன பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வாகனத்தில் பிரயாணம் செய்த மற்ற நால்வர்களும் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர்கள் ஆவார்.

விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை வாழ் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து உதவினர். இறந்த உடல்களை எடுத்துச்சென்ற உறவினர்கள் இஸ்லாமிய சகோதரர்களின் மனித நேயத்தையும், ஒன்றிணைந்து உதவிய மேன்மையான பண்பையும் வியந்து பாராட்டிவிட்டுச்சென்றனர்.

17-08-2013 : அதிரை காட்டுப்பள்ளித் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் அருகே நெய்னாப் பிள்ளை அவர்கள் அடங்கிய அடக்கஸ்தலமும் உள்ளது. இவற்றின் மேற்கூரை கீற்றால் அமைக்கப்பட்டு அடக்கஸ்தலத்தைச் சுற்றி சுவற்றால் எழுப்பபட்டு சிறிய குடிலாக காட்சியளித்து வந்தன. கடந்த [ 17-08-2013 ] அன்று அதிகாலை 12 மணிக்கு மேல் ஏற்பட்ட தீயில் அடக்கஸ்தலத்தின் குடில் முற்றிலும் எறிந்து கருகின.  இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

10-08-2013 : கடந்த இரண்டு பெருநாளன்றும் அதிரை நியூஸ் குழுவினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர்  ஃபுல்  புகைப்படங்கள் தளத்தில் பதியப்பட்டு வாசகர்கள் அனைவரின் மிகுந்த வரவேற்பை பெற்றது.

02-10-2013 : தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில்   இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, கோழிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின. இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.


05-09-2013 : இன்று [ 05-09-2013 ] மாலை 4.30 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.


20-10-2013 : அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
26-09-2013 : அதிரை நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை குறைப்பது, நகரில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ?, நகரில் பிளாஸ்டிக் கேரி பைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாமா ? அல்லது தடை செய்யலாமா ?, அதிரை நகரின் வளர்ச்சிக்காக பேரூராட்சியின் சார்பாக என்னென்ன திட்டப்பணிகளை அமல்படுத்தலாம் ? ஆகியன குறித்து மேற்கண்ட விவாதங்களை எடுத்துக்கொண்டு கடந்த [ 26-09-2013 ] அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.


05-11-2013 : ஒரு கிலோ 160 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிராய்லர் கோழி இறைச்சி இன்று அதிசயமாக 90 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.


02-11-2013 : 'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' தகவல் தொழில்நுட்பமா !?   அல்லது மாறிவரும் கலாச்சாரமா !? என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள் அதிரை நியூஸ் சார்பாக நடத்தப்பட்டது. இவை அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றன.


02-12-2013 : அதிரை பேரூராட்சிக்குட்பட்ட 8, 9, 10 ஆகிய வார்டுகளில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீரை விநியோகிக்கவில்லை எனக்கூறி இப்பகுதி மக்கள் திரண்டு வந்து பேரூராட்சி எதிரே உள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.


16-12-2013 : அதிரையில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவது தொடர்பாக அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.


தொகுப்பு : அதிரை நியூஸ் குழு