.

Pages

Sunday, March 21, 2021

பட்டுக்கோட்டை பகுதியில் காய்ச்சல் தடுப்பு முகாம்: ஆட்சியர் நேரில் ஆய்வு!


பட்டுக்கோட்டை; நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி மற்றும் சுகாதார துறையின் சார்பில் நடைபெற்று வரும்  மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ்  (20.03.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. 

தஞ்சாவூர் மாவட்டததில் தற்போது பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள்ää ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிருந்தாவனம் பள்ளியில் உள்ள 14 நபர்களுக்கு கொரோனா தொற்று இதில் 1 ஆசிரியருக்கும்ää 2 வாகன ஓட்டுநருக்கும் மற்றும் 11 மாணவருக்கும்ää கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதுவரை 11 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுää சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருக்கும் அனைத்து மாணவர்கள்ää ஆசிரியர்கள்ää ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட பள்ளி மீது வழக்கு பதிவு மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பள்ளிகள் மீது தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டு அப்பள்ளிகளை 14 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டபட்டுள்ளது.

11 பள்ளிகளை சேர்ந்த 140 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர் இதில் நேற்று அம்மாபேட்டையை சேர்ந்த 60 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாணவர்களும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். யாருக்கு பெரிய பாதிப்பு இல்லை. தஞ்சை மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளியில் நேற்று 11 ஆசிரியர்கள்ää 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 1ää123 பேருக்கு முழுமையாக பரிசோதனை செய்து மற்றும் பெற்றோர்கள்ää அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை செய்ததில் மேலும் 15 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதின் காரணமாக அப்பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மற்ற பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வழிநெறிமுறைகளை கடைபிடிக்காமல் பள்ளிகளில் அலட்சியமாக இருந்து கொரோனா பரவும் சு10ழ்நிலை இருந்தால் அந்த பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரம் என்பதால் அனைத்து பறக்கும்படையினர்ää நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தேர்தல் பணியுடன் சேர்ந்து பொதுமக்கள் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகும் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதித்து வருகின்றனர். முன்கள பணியாளர்கள்ää தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும்ää 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை தேசிய அளவில் நிறைய மாவட்டங்களில் பரவுகிறது. தமிழகத்தில் கூட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மாணவர்களும் பள்ளிக்கு செல்லும்போது முக கவசம் அணிய பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் நுழைவு வாயிலேயே மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வைக்க வேண்டும். 

சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா முதல் அலை வந்தபோது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால் பெரியஅளவில் பாதிப்பு இல்லாமல் தடுக்க முடிந்தது. தற்போது 2வது அலை வந்து கொண்டிருக்கிறது. இப்போது கூட பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் மக்களை காக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி 9 பறக்கும் படையினர்ää 9 நிலையான கண்காணிப்பு குழு மூலம் வாகன தணிக்கையில்ää 24 மணி நேரமும் சுழற்ச்சி முறையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை ரூ. 58 லட்சம் வானக தணிக்கையின் போது பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் லாரியில் கொண்டு வரபட்ட 600 குக்கர் பரிமுதல் செய்யப்பட்டு சம்மந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம. கோவிந்தராவ் இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்தார். 

தொடர்ந்து பட்டுக்கோட்டைää அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என ஆய்வு செய்தார். மாணவர்களை சந்தித்து பேசி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார். மாணவர்கள் அவர் அவர்ää வீட்டில் உள்ளவர்களையும் முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என அறிவுறித்தினார்.

பின்னர் பட்டுக்கோட்டைää அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சரியான அடிப்படை வசதிகளää; பள்ளியில் உள்ள சுற்று சுவர்கள்ää வகுப்பறைகள்ää குடிநீர் வசதிகள்ää கழிப்பறைகள் போதுமான அளவில் உள்ளதா என மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ் ஆய்வு மேற்க்கொண்டார்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருமதி. உமா மகேஸ்வரிää பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு. சென்னு கிருஷ்ணன்,   சுகாதார துறை துணை இயக்குநர் மரு. ரவிந்திரன்ää நகராட்சி செயற்பொறயாளர் திரு. ஜெயசீலன்ää வட்டாட்சியர் திருமதி. தரணிகா மரு. ஆடலரசி மற்றும் மருத்துவர்கள்ää அலுவலர்கள் உடன் இருந்தனர்






Sunday, March 14, 2021

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!


வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்

தஞ்சாவூர் மாநகராட்சி அருளானந்த நகரில்  மாநகராட்சி சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ்  இன்று (14.03.2021) தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நடைபெற்று வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் 100 சதவீதம் வாக்களித்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் கடந்த நாடளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவு பதிவான பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இன்று அருளானந்த நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக அருளானந்த நகரில் 50 மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியிணை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து பி.வி. செல்வராஜ் மகளிர் மேல்நிலைபள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து வாக்காளர் சீட்டு வழங்கும் முகாமினை பார்வையிட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன, தஞ்சாவூர் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.





மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 சட்டமன்ற தொகுதிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 சட்டமன்ற தொகுதிக்கு தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட  தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர். ம.கோவிந்த ராவ் அன்று (13.03.2021) அனுப்பி வைக்கப்படுவதை பார்வையிட்டார்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து 8 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2886 வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 170-திருவூடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களுக்கு 423 வாக்குப்பதிவு இயந்திரம் 423 கட்டுப்பாட்டு கருவியும், 462 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 171- கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 378 வாக்குச்சாவடி மையங்களுக்கு 450 வாக்குப்பதிவு இயந்திரம், 450 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 492 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 172- பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடி மையங்களுக்கு 431 வாக்குப்பதிவு இயந்திரம், 431 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 471 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 173-திருவையாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள 385 வாக்குச்சாவடி மையங்களுக்கு 459 வாக்குப்பதிவு இயந்திரம், 459 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 501 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 

174-தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 406 வாக்குச்சாவடி மையங்களுக்கு 484 வாக்குப்பதிவு இயந்திரம்,  484 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 528 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும்,  175-ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களுக்கு 405 வாக்குப்பதிவு இயந்திரம், 405 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 442 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 176-பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களுக்கு 411 வாக்குப்பதிவு இயந்திரம்,  411 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 449 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 177-பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரம், 375 கட்டுப்பாட்டு கருவியும்ää என்றும் 410 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், ஆக மொத்தம் 2886 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3438 வாக்குப்பதிவு இயந்திரமும், 3438 கட்டுப்பாட்டு கருவியும்ää 3755 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், வாக்குப்பதிவு எந்திரங்கள் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 3900 பேட்டரியும், வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 4000 பேட்டரியும், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை என மாவட்ட  தேர்தல் அலுவலர் ஃமாவட்ட ஆட்சித் தலைவர். ம.கோவிந்த ராவ் பார்வையிட்டார். அந்த அந்த சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணி திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணன், ஒரத்தநாடு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், திருவையாறு தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி மஞ்சுளா, வாக்குப்பதிவு இயந்திரம் மேலாண்மை அலுவலர் சுப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Wednesday, March 10, 2021

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிரை பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தீர்மானங்கள்...




Wednesday, March 3, 2021

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், மார்ச்.03

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின பிப்ரவரி மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (28-02-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.


























Tuesday, March 2, 2021

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்கு எண்ணும் மையமான அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கரம்பயம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடி, புதிய துணை வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் இன்று (02.03.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்ததாவது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில், 3 பறக்கும் படை, மூன்று நிலையான கண்காணிப்புக்குழு ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுää 24 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுää அதேபோல் இந்திய தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி முழுமையான அனைத்து கண்காணிப்பு குழுக்கள் மூலம் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு 2291 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இப்பொழுது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகிணங்க 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குää துணை வாக்குச்சாவடி மையங்களாக 595 கூடுதல் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆகமொத்தம்  8 சட்டமன்ற தொகுதிக்கு 2886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைவரும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம், மற்றும் மாற்றுத் திறனாளிக்கு முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம்  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளனவா எனவும்; ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், விரைவாக சரிசெய்ய வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8 சட்டமன்றங்களுக்கு தேர்தல் 3 வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூர் பகுதியில் குந்தவை நாச்சியார் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை பகுதிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் பகுதிக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்து அனைத்து அலுவலர்கள்ää காவல் துறை ஒருங்கிணைந்து பணிகளை செய்து வருகிறார்கள் வாக்காளர்களுக்கு பணம் பொருள் கொடுப்பதாக தகவல் தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கட்டுபாட்டு எண் 1950 இலவச எண்ணிற்கு உடனுக்குடன் தகவல் அளிக்கலாம். புகாரின் மீது ஏந்த ஓரு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் தெரிவித்தார்.



ஆய்வின்போது சார் ஆட்சியர் பாலச்சந்தர், பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலர்  ஐவண்ணன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட பள்ளி கல்விதுறை அலுவலர் ராதாகிருஷ்ணன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா, பேராவூரணி வட்டாட்சியர் திருமதி. விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.