.

Pages

Thursday, January 2, 2014

காண்ட்ராக்டர் வீரையனின் கடின உழைப்பில் மிளிரும் செய்னாங்குளம் !? [ புகைப்படங்கள் ]

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிரை பேரூராட்சியின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செயல்படுத்திவரும் காண்ட்ராக்டர் திரு. வீரையன் அவர்கள் கடந்த சில மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகளில் களத்தில் நின்று மும்முரமாக பணியாற்றி வந்தார். இவரின் கடின உழைப்பின் கீழ் குளத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் திறப்புவிழா காணப்படவுள்ளது.

நமது அதிரை நியூஸ் உள்ளூர் வாசகர் ஜஹபர் சாதிக் அவர்கள் மிளிரும் செய்னாங் குளத்தை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து நமக்கு அனுப்பி வைத்தார். அழகாக காட்சியளிக்கும் குளத்தின் புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ...











த.மு.மு.க வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அழைப்பு !

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 03-01-2014 மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதில் தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி மற்றும் மாநில அமைப்புச்செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதன் செயலாளர் அஹமது ஹாஜா அழைக்கிறார்.

Wednesday, January 1, 2014

அதிரையில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் !


அதிரை சாரா மண்டபத்தில் இன்று மாலை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இலியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், PFI மாவட்ட செயலாளர் ஹாஜி சேக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக வரவேற்புரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் நிகழ்த்த, நன்றியுரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அவர்கள் வழங்கினார். இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியில் புதிதாக இனைந்தவர்களுக்கு உறுப்பினர் கார்டுகள் வழங்கப்பட்டன. 

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அதிரை நகர நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.







உடல் நிலை பாதிக்கபட்ட பிலால்நகர் சகோதரருக்கு லண்டன் வாழ் அதிரையர் வழங்கிய ரூ 10,000/- த்தை த.மு.மு.க நிர்வாகிகள் ஒப்படைத்தனர் !

அதிரை பிலால் நகரை சேர்ந்தவர் ஹாஜா. இவர் பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் சில செயலிழந்து படுத்த படுக்கையாய் காணப்பட்டார். ஏழ்மை நிலையில் இருக்கும் இவருக்கு போதிய பொருளாதார வசதியின்மையால் தொடர்ந்து இவரால் சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை.

இவரின் நிலை குறித்து அதிரை நியூஸ் தளத்தில் கடந்த [ 12-12-2013 ] அன்று 'உயிருக்கு போராடும் பிலால் நகர் சகோதரனுக்கு உதவிடுவீர் !' என்ற தலைப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களிடம் உதவி கோரப்பட்டது. இதில் இவருடைய குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள ஹாஜா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது அன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதிரை நியூஸ் சார்பாக அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் பதிவிட வேண்டுகோள் விடப்பட்டதின் அடிப்படையில் அவற்றை பதிவிட்டும் இருந்தனர். இவற்றை பார்வையிட்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் ஹாஜா அவர்களுக்கு உதவும் விதமாக நேரடியாகவும், வங்கி கணக்கின் வழியாகவும் முன்வந்தனர்.

இதில் சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்றி செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 10,000/- த்தை த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகள் முன்னிலையில் இன்று மாலை வழங்கப்பட்டது. உதவியை பெற்றுக்கொண்ட ஹாஜா குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு வழங்கியோருக்கு துவாவும் செய்தனர்.

குறிப்பு : இதுவரையில் ஹாஜா குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட உதவிகள் குறித்த தகவல்கள் சகோ. ஹாஜா அவர்களின் நன்றி அறிவிப்போடு விரைவில் தளத்தில் வெளியிடப்படும்.

அதிரை மீன் மார்க்கெட்டில் வாங்கிய தாளன் சுறா மீனில் பாம்பு ! [ புகைப்படங்கள் ]

தாளன் சுறா மீன் சீசன் என்பதால் அதிரை மீன் மார்க்கெட்டிற்கு அதிகளவில் இந்த வகை மீன்கள் விறபனைக்கு வந்துகொண்டு இருக்கின்றது. இன்று காலை செட்டித்தெருவை சேர்ந்த அகமது அவர்கள் மீன் மார்கெட்டில் விற்பனைக்கு வந்த தாளன் சுறா மீனை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அந்த மீனை வீட்டில் உள்ளவர்கள் அறுத்து சுத்தம் செய்த போது மீன் வயிற்றில் ஒரு பாம்பு இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதிரையில் நிகழ்ந்த இரு வேறு மரணங்கள் !

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வெற்றிலைகாரத்தெரு :
மின்னார் வீட்டு மர்ஹூம் அசனா லப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும்,அப்துல் காதர், சர்புதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் சம்சுதீன், அபுல் குலாம் ஆகியோரின் மாமியாருமாகிய காதர் மரியம் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

புதுக்குடி நெசவுத்தெரு :
மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனும், காதர் சேக்காதி, முத்து மரைக்கான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அசனா மரைக்காயர் அவர்களின்  மருமகனும், ஜும்மா அப்துல் காதர், சேக் அலாவுதீன் ஆகியோரின் மச்சானுமாகிய சேக் நசுருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

கின்னஸ் சாதனைக்காக துபாயில் நடந்த வானவேடிக்கை நிகழ்ச்சி ! [ புகைப் படங்கள் ]

அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம்  ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் திரண்டனர்.

அதன் புகைப்படங்கள் இதோ...


























சென்னையில் நடைபெற்ற TNTJ உரிமை முழக்க பொதுகூட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 29-12-2013 அன்று மைலாப்புர் கிளையில் மாபெரும் உரிமை முழக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்தக்கூட்டத்தில் இஸ்லாமியர்களின் தனி இட ஒதுக்கீடை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனங்களை ஈர்க்கும் வகையில் ஜனவரி 28 அன்று சிறை செல்லும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்வதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. இதில் அதிரையர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தகவல் : M அப்துர் ரஹ்மான் / M.I. அப்துல் ஜப்பார்
அதிரை