.

Pages

Thursday, November 28, 2013

பட்டுக்கோட்டையில் நடைபெற உள்ள மின்சார தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

பட்டுக்கோட்டையில் எதிர்வரும் [ 28-11-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள மின்சார தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் மின்சார தொடர்பான குறைகளை புகாராக அலுவலகரிடம் தெரிவித்து தீர்வு காண முயற்சிக்கலாம்.

Wednesday, November 27, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் இணையதளம் மீண்டும் இயக்கம் !

அஸ்ஸலாமு அலைக்கும்.

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் இணையதளத்தில் ( www.adiraitntj.com ) ஏற்பட்டுயிருந்த தொழில் நுட்ப கோளாறு இறைவனின் பேருதவியால் சரி செய்யப்பட்டு, இணையதளம் மீண்டும் இயங்க துவங்கிவிட்டது.

எமது இணையதளத்தை வழக்கம் போல் www.adiraitntj.com என்ற முகவரியில் பார்க்கலாம். சில நாடுகளில் நாளை வரை இந்த கோளாறு நீடிக்கலாம்.

TNTJ அதிரை கிளை
தகவல் : M.I. அப்துல் ஜப்பார்

ஓமன் நாட்டிற்கு நேர்முக தேர்வு!


அதிரையில் முதல் முறையாக  ஓமன் நாட்டிற்கு நேர்முக தேர்வு  வண்டிபேட்டையில் வரும் 29 தேதி காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது ஓமனிலிருந்து தேர்வாளர் முன்னிலையில் தகுதியுள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற அழைக்கிறது டெர்மினல் டிராவல்ஸ்

முன் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் தரப்படும். 

முகவரி :
செய்தி : தினத்தந்தி நாளிதழ் - நாள் 27-11-2013

TERMINALS TRAVELS
(Lic No : C/o Anandu air travels B-0090/KER/PER/1000+/5/7339/2005)
3/B MSS COMPLEX, VANDIPETTAI
ADIRAMPATTINAM, THANJAVUR DIST-614701
TAMIL NADU, SOUTH INDIA

PH-04373241555,                                              MOB-7708327441,9600265080

EMAIL: terminalstravels@gmail.com, ahamedimp008@yahoo.com






குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது 

அதிரையரை கவர்ந்திழுத்த புள்ளித்திருக்கை மீன் !

அதிரையின் பிரதான மார்க்கெட் என கருதப்படும் பெரிய மார்க்கெட் பகுதிக்கு தினமும் வருகை தரும் பல வகை மீன்களில் திருக்கை மீனும் ஒன்று. கருந்திருக்கை, முன்டாங்க்கனி திருக்கை, முள்ளந்திருக்கை, ஆடா திருக்கை, குருவி திருக்கை, வலுவாடி திருக்கை, பால் திருக்கை, கொம்பு திருக்கை, பூவா திருக்கை என பலவகை இருந்தாலும் அதிரையர்கள் அதிகமானோர் விரும்பி சாப்பிடுவது புள்ளி திருக்கை என அழைக்கப்படும் இவ்வகை மீனைத்தான்.

நேற்று மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக 8 கிலோ எடையை கொண்டுள்ள பெரிய திருக்கை மீன் ஒன்று வந்தன. வந்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த திருக்கை மீன் இறுதியில் வெறும் 1200 க்கு விற்பனையானது வியப்பில் ஆழ்த்தியது.


அதிரை சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு அவசர இரத்தம் தேவை !

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதிரை சகோதரிக்கு A1 வகை இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது.

உதவ முன்வரும் சென்னை வாழ் பொதுமக்கள் கீழ்கண்ட அழைப்பேசியில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 9944426360  

தகவல் : அதிரை புதியவன் ஹசன்

மரண அறிவிப்பு !

மேலத்தெரு விசிறி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.P. முஹம்மது அப்துல்லா அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது, முஹம்மது முஹைதீன், முஹம்மது சாலிஹு ஆகியோரின் சகோதரியும், கோஸ் முஹம்மது அவர்களின் தாயாரும், மர்ஹூம் உமர் தம்பி, முஹம்மது புஹாரி, ஜெஹபர் அலி, நவாஸ்கான், சேக் முஹம்மது ஆகியோரின் மாமியாருமாகிய பரீதா அம்மாள் அவர்கள் நேற்று [ 26-11-2013 ] இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 27-11-2013 ] காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.

Tuesday, November 26, 2013

அதிரை பேரூராட்சி தலைவருக்கு எதிராக சதியா !?

அதிரை பேரூராட்சி தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றவர் S.H. அஸ்லம். அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் பன்னீர். தன்னை சாதியின் பெயரைச்சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லி அதிரை பேரூராட்சி தலைவர் மீது வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதை அடுத்து பேரூராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவரோடு தொடர்புடைய அவரது நண்பரிடம் விசாரித்த வகையில்...
நமதூர்  பேரூராட்சி தலைவராக ஜனாப் அஸ்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதிராம்பட்டினம் பேரூராட்சி மிகப்பெரிய மாற்றத்தை பொதுமக்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

சுத்தம் சுகாதாரம் என்ற கொள்கையில் முழு முயற்சியாக பேரூராட்சி ஈடுபட்டு ஊழலற்ற நிர்வாகத்தை தர நமதூர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் அறிந்ததே.

தவறுகளை சுட்டி காட்டினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், கூப்பிட்ட குரலுக்கு ஊர் பிரச்சினைகளை தீர்க்க முன்னிற்கும் ஆர்வம் போன்றவைகளால் பேரூராட்சி தலைவர் அஸ்லம் பாராட்டுக்குரியவராக இருக்கிறார். இதனை பொறுக்காத சிலர் அவர் மீது அவதூறுகளை சுமத்தியும், வீண் பொய்களை பரப்பியும் வருகின்றனர். இவர் மீது பொய் வழக்கும் நேற்று பதியப்பட்டு ஜாமீனுக்காக காத்திருக்கிறார்.

இவரது வளர்ச்சி பொறுக்காத சிலரே ஆளும் கட்சியின் உதவியுடன் தமது அதிகாரத்தை துஷுபிரயோகம் செய்து இவரை செயல்படாமல் தடுக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் இவர் சிறுபான்மை இனத்தவர் என்பதாலும் இவரை இந்த பணியை செய்யவிடாமல் தடுக்க  ஒரு பிரிவினரும், இவரது வளர்ச்சியை பொறுக்காத ஒரு சில எதிர்கட்சியினரும் பொய் வழக்குகளை போட்டு இவரது பணியை முடக்கி அதிராம்பட்டினத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

இதனை பொதுமக்கள் உணர்ந்து உண்மையை தெரிந்து இதுபோன்ற நயவஞ்சகர்களை அடையாளம் கண்டு கொண்டு புறக்கணிக்க வேண்டும் என முடித்துக்கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்து கொள்ள பன்னீர் அவர்களை தொடர்புகொண்ட போது நமது முயற்சி பலனளிக்கவில்லை. 

பழுதடைந்த சிஎம்பி லேன் சாலை சீரமைப்பு !

அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சிஎம்பி லேன்னும் ஒன்று. இந்தப் பகுதியில் அமைந்துள்ள வண்டிப்பேட்டையிலிருந்து வள்ளியம்மை நகர் வழியாகச் செல்லும் பிரதான சாலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. கிராமங்களை இணைக்கும் இந்த சாலை பல வருடங்களுக்கு முன்பு போட்டப்பட்டது. இவை புதுப்பிக்காமல் இருந்ததனால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளித்து வந்தன. மழை காலங்களில் இந்த சாலை வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், வழிபாட்டுத்தளங்களுக்கு செல்லுவோர் என அவதியுற்று வந்தனர்.

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள், உள்ளூர் செய்திகளை வழங்கி வருகின்ற இணையதளங்கள் ஆகியன அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைப்பது தொடர்ந்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரையில் பெய்த தொடர் மழையால் குண்டு குழியுமாக உள்ள இடங்களில் நீர் தேங்கி சகதிகளாக காட்சியளித்தன. 

இந்த பகுதியின் 21 வது வார்டு உறுப்பினர் இப்ராஹீம் அவர்கள் பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்சென்று சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இன்று காலை அதிரை பேரூராட்சியின் சார்பாக குண்டு குழியுமாக காணப்படும் இடங்களில் கிராவல் ஜல்லி கொட்டப்பட்டு பழுதடைந்த சாலைகளை சீரமைத்து வருகின்றனர்.

இது குறித்து 21 வது வார்டு உறுப்பினர் இப்ராஹீம் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய வகையில்...
இந்த சாலையை நிரந்தரமாக புதுப்பிக்ககூடிய பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்றும், பொதுமக்கள் நலன் கருதி இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு பழுதடைந்த சாலையை சீரமைக்க ஏற்பாடு செய்த அதிரை பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோருக்கு தனது நன்றியையும் பாராட்டுதலையும் அன்புடன் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.