.

Pages

Tuesday, November 29, 2016

துபாய் கால்வாய் அருகே புதிய கார் பார்க்கிங் மற்றும் சொகுசு படகு சேவை !

அதிரை நியூஸ்: துபாய், நவ-29
துபையின் நவீன அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள துபை கால்வாயை (Dubai Canal) கண்டுகளிக்கவும், இருபுறமும் காலார நடந்து அனுபவிக்கவும் தடங்களாக இருந்த பார்க்கிங் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, சுமார் 1600 புதிய கட்டண பார்க்கிங் (Paid parking) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிஸ்னஸ் பே (Business bay) பகுதியில் 652 பார்க்கிங்களும், ஷேக் ஜாயித் ரோடு பாலம் (Under the Bridge of Shk. Zayed Road) மற்றும் சபா (Safa) பகுதியில் 628 பார்க்கிங்களும், துபை கால்வாயை சுற்றி 322 பார்க்கிங்களும் (Around Dubai Canal) ஏற்படுத்தப்பட்டுள்ளன. Code G சீசன் பார்க்கிங் டிக்கெட்டுகள் செல்லாது, Code G சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் துபை கால்வாயை சுற்றியுள்ள Code A பார்க்கிங்களில் மட்டுமே தங்களின் வாகனத்தை நிறுத்தலாம்.

மெட்ரோ பயணிகள் பிஸ்னஸ் பே நிலையத்திலிருந்து 10 நிமிட நடை பயணத்தில் துபை கால்வாயை அடையலாம் மேலும் ஷேக் ஜாயித் ரோடு பாலத்திலிருந்து இருபுறமும் தலா 2 லிப்டுகள் (Lifts) இயக்கப்படுகின்றன.

துபை கால்வாயில் பயணம் செய்ய அழைப்பின் பேரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வாட்டர் டேக்ஸிக்கள் (Water Taxies) கிடைக்கும்.

மேலும், ஜூமைரா பீச் பார்க் அருகிலுள்ள துபை கேனல் படகுத்துறை (Dubai canal marine station) மற்றும் கிரீக் மெட்ரோ நிலையம் ((Creek Metro) அருகிலுள்ள அல் ஜத்தாப் படகுத்துறை (Al Jaddaf Marine Station) ஆகியவற்றிலிருந்து காலை 10 மணி, பகல் 12 மணி, மாலை 5.30 மணிக்கும்

ஷேக் ஜாயித் பாலத்தின் கீழுள்ள செயற்கை அருவி அருகிலிருந்து ஜூமைராவை நோக்கி பயணம் செய்ய காலை 11.25 மணிக்கும், பகல் 1.25 மணிக்கும், மாலை 6.25 மணிக்கும்

ஷேக் ஜாயித் பாலத்தின் கீழுள்ள செயற்கை அருவி அருகிலிருந்து ஜத்தாப் நோக்கி பயணம் செய்ய பகல் 12.25 மணிக்கும், பிற்பகல் 2.25 மணிக்கும், மாலை 7.25 மணிக்கு படகுகள் (Ferries) இயக்கப்படுகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

IT வேலைக்கு ஆட்கள் தேவை (சவூதியில் உள்ள நபர் மட்டும்)

சவூதி ரியாத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு IT WEB DEVELOPER தெரிந்த நபர் தேவை. தங்கும் இடம் இலவசம். 3 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தற்பொழுது சவுதியில் உள்ளவராக இருக்க வேண்டும்.

Email: jobs@theworldtop.com
Job: PHP E-commerce Web Developer
Date: Nov 28, 2016
Location: Riyadh, Saudi Arabia.
Company: The World's Top Co Ltd.
Email: jobs@theworldtop.com
Website: www.theworldtop.com

Job Duties and Responsibilities 
Develop and support multiple unique consumer product websites.
Design, develop, and maintain client web and mobile web friendly web pages.
Continuously monitor and update web content to include dynamic and interactive functionality, data, features, etc.
Collaborate with product development and marketing in the development of a compelling user experience for the consumer.
Provide subject matter expertise in the design of web pages to include mobile optimization.
Keep the project/business owner and/or IT project manager regularly informed regarding progress, challenges, timelines, and deliverables.
Coordinate with internal and external resources.
Create and produce project documentation as deemed necessary or required.
Troubleshoot as needed to address end user experience problems and functionality errors.
Ensure website integrates with applicable third party platforms and services.
Assist in optimizing website for increased opt-ins, better organic search rankings, as well as user engagement and retention.
Ensure website compatibility with multiple browsers and platforms to include cross-device compatible.
Other duties as deemed necessary.

Qualifications
Minimum 3+ years of web development experience required
Experience working with databases (MySQL, SQL Server)
Experience building web pages and sites.
Experience in WordPress, Joomla, Magneto etc.
PHP, HTML, CSS, and JavaScript <Capability configuring or managing Apache and IIS web servers.

திருவாரூர் - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை திட்டப்பணி 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம் !

முத்துப்பேட்டை நவ-29
திருவாரூர் முதல் காரைக்குடியிலான ரயில்வே சாலை அங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அணைத்து ரயில்வே சாலைகளையும் அகல ரயில்வே பாதைகளாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் முக்கிய வழிப்பாட்டு தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ரயில் சாலையை மட்டும் அகல ரயில்வே பாதையாக மாற்றுவதில் ரயில்வேதுறை காலதாமதம் படுத்தி வந்தது.

இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 650 கோடிகளுக்கு மேலாக நிதி ஒதிக்கீடு செய்து திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான சாதாரண ரயில்வே சாலையை அகல ரயில்வே சாலையாக மாற்றி அமைக்க முடிவு செய்தனர். இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சென்று வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணி துவங்கி மிகவும் ஆமைவேகத்தில் நடந்து வந்ததால்.. பணி நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் ரயில் வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். பல இடங்களில் பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து நடந்து வந்த ரயில் பாதை பணிகளை சென்று ஆண்டு முதல் ரயில்வே நிர்வாகம் பணிகளை துரித படுத்தியது. அதன் வகையில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில்பாதை பணிகள் 80 சதவிதம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் மீதம் உள்ள பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை பணிகளை இந்தாண்டு தொடக்கத்தில் தீவீரமாக நடந்தது வந்தது.

தற்பொழுது பெரும்பாலான ரயில்வே பாலங்கள் பணிகள் முடிந்து விட்ட நிலையில் ரயில் தண்டவாளங்கள் அமைக்க பூமி மட்டத்தை சுமார் ஆறு அடி வரை உயர்த்தி கப்பி மணல்கள் நிரப்பும் பணிகள் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவீரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த பணிகளை பார்வையிடுவதற்க்காக பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ், தலைமை பொறியாளர் காளிமுத்து, உதவி தலைமை பொறியாளர் விஜயக்குமார் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள், முத்துப்பேட்டை பகுதிகளில் நடந்து வரும் அகல ரயில் பாதை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஜாம்புவான்னோடை சென்ற அதிகாரிகள் முத்துப்பேட்டை ரயில்வே போராட்டக்குழு தலைவர் எஸ்எஸ். பக்கர் அலி சாஹீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ரயில்வே போராட்டக்குழு சார்பில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இப்பகுதியில் உலக புகழ்பெற்ற ஜாம்புவான்னோடை தர்கா, தில்லைவிளாகம் ராமர்கோவில் உள்ளிட்ட அணைத்து மதத்தினரின் வழிப்பாட்டு தளங்கள் மற்றும் லகூன் மற்றும் பல்வேறு சுற்றுலா நிறைந்த பகுதியாகவும், அதிகளவில் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் உள்ளதால் இந்த ரயில்வே நிலையத்தை எந்தவகையிலும் தரம் குறைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே உயரதிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ் கூறுகையில்: 
திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில்வே பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் 80 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில் தற்பொழுது திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்பொழுது திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை உள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.. இந்த பணியை அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்' என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 

புற்றுநோய் பாதிப்படைந்தவருக்கு TNTJ அதிரை கிளை மருத்துவ நிதி உதவி !

அதிராம்பட்டினம், நவ-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் மீராஷா ( 45 ). அதிராம்பட்டினம் பகுதிகளில் சுண்டல் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ரம்ஜான் பேகம் என்ற மனைவியும், 10 ம் வகுப்பு கல்வி பயிலும் 15 வயது மகள் மற்றும் 4 ம் வகுப்பு கல்வி பயிலும் 10 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

கடந்த 2014 ம் ஆண்டில் மூக்கில் கட்டி ஏற்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. இதன் பின்னர் இம்மருத்துவமனையில் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில், முகத்தின் தாடை பகுதியில் மீண்டும் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் தாடை அகற்றப்பட்டன. இதனால் இவரது முழுமையாக பேசும் திறன் குறைந்துவிட்டது. மேலும் இவரது இடது கண் முற்றிலும் செயல் இழந்துவிட்டன. கண்ணாடி அணிந்துபடி வெளியே சென்று வருகிறார். கடந்த 1- 1/2 ஆண்டுகளாக சுண்டல் வியாபாரத்தை நிறுத்திவிட்டார்.

தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் மருத்துவர் அறிவுரையின் படி மாதத்திற்கு இரண்டு முறை மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் தவித்து வருகிறார். மேலும் இவர்களது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது.

புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை மற்றும் அன்றாட வாழ்வாதார உதவிக்காக இக்குடும்பத்தினர் நிதி உதவி கோரி இருந்தனர்.

இதையடுத்து பல்வேறு கொடையாளர்கள் வங்கி கணக்கின் வழியாகவும், நேரடியாகவும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் ஜமால் முகமது ரூ 20 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை மீராஷாவிடம் வழங்கினர். அப்போது கிளைப் பொருளாளர் அல்லா பிச்சை மற்றும் சமூக ஆர்வலர்கள் அன்வர், ஜமால் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

குறிப்பு: மிகவும் நலிவுற்றிருக்கும் இவரது குடும்பத்திற்கு பிறரும் உதவ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இச்செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையங்கள் அதிகரிப்பு !

அதிரை நியூஸ்: துபாய், நவ-29
அமீரகத்தில் சுமார் 2.6 மில்லியன் இந்தியர்கள் வாழும்நிலையில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் கடந்த சில ஆண்டுகளாக தனியார் சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது சேவைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தின் இருமுறை நீட்டிக்கப்பட்ட சேவைகள் எதிர்வரும் 2017 ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளன.

2017 பிப்ரவரி மாதத்திருந்து ஒன்றுக்கு பதிலாக 2 தனியார் நிறுவனங்கள் சேவைகளை வழங்கவுள்ளன அதுவும் ஏற்கனவே இயங்கிவரும் துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி சேவை மையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்ட நிலையில். எனவே, புதிய சேவை நிறுவனங்களை நியமிப்பதற்கான விண்ணப்ப டெண்டர்கள் ஜனவரி 9 ஆம் தேதி பரிசலீக்கப்படும் என்பதால் அதற்கு முன் ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு: www.indembassyuae.org

ஆண்டொன்றுக்கு அபுதாபியில் செயல்படும் இந்திய தூதரகம் வழியாக 60,000 பாஸ்போர்ட் சேவைகளும், துபையில் செயல்படும் துணைத் தூதரகம் வழியாக சுமார் 240,000 பாஸ்போர்ட் சேவைகள் என 3 லட்சம் பாஸ்போர்ட் சேவைகளுடன் 74,000 விசா சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தனியார் பாஸ்போர்ட் சேவை மையங்களில் கூடும் அதீத கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இனி துபையில் 2 மையங்களுக்கு பதிலாக 4 மையங்கள், ஷார்ஜாவில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு, அபுதாபியில் ஒன்று பதிலாக இரண்டு என 2 வெவ்வேறு தனியார் நிறுவனங்கள் வழியாக சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இதில் அபுதாபி மண்டலத்திற்கான சேவை மையம் தொழிலாளர்கள் அதிகமுள்ள முஸஃபா பகுதியில் அமையவுள்ளது.அதேவேளை கல்பா மற்றும் கொர்பக்கான் பகுதிகளில் இயங்கிவந்த சேவை மையங்கள் மூடப்படுகின்றன.

பாஸ்போர்ட் சேவை கட்டணங்களில் மாற்றமிருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய தூதரக பொறுப்பு அதிகாரி நீதா பூஷன் அவர்கள், தற்போது சேவை வழங்கிவரும் நிறுவனம் சேவை கட்டணமாக 9 திர்ஹமும் வெளிநாடுவாழ் இந்தியர் நல நிதியாக 6 திர்ஹமும் வசூலிக்கின்றன. தற்போதைய புதிய டெண்டரின் வழியாக கோரப்படும் சேவைக்கட்டணத்தை பொறுத்தே மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை ஈசிஆர் சாலை ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிய குடியிருப்பு வாசிகள் !

அதிராம்பட்டினம், நவ-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் (ஈசிஆர் சாலை) 10 அடி அகலத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் பகுதியிலுள்ள நீர் நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 66 பேர் வீடு, கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பட்டுக்கோட்டை வருவாய்த்துறைக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் கடந்த செப். 27-ம் தேதி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு தலைமையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கல்லணைக் கால்வாய்) செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். அப்போது நில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை அளந்து குறியீடு செய்து, கால அவகாசம் தாருங்கள். நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என வாதிட்டனர்.

இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை நவ. 28-ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் அண்மையில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டடங்களை ஊழியர்களை கொண்டு இடித்து அப்புறப்படுத்தும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். அகற்றப்படாமலுள்ள கடைகள், வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை அகற்ற வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பேரூராட்சி பகுதிகளின் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி !

தஞ்சாவூர் மாவட்டம், பேரூராட்சி பகுதிகளின் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திட்டம் மற்றும் விதிகள் 2015 விதி எண்.26-ன் கீழ் அறிவிக்கை.

தமிழ்நாடு அரசிதழ்  எண்.230 (அசாதாரணம்) நாள் 02.11.2015-ல் தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வதார பாதுகாப்பு மற்றும் தெருவியாபாரம் முறைப்படுத்துதல்) திட்டம் மற்றும் விதிகள் 2015-ல் The Tamilnadu street Vendors ( Protection of livelihood and Regulation of street vending )  Scheme and Rules 2015 விதிகளை இயற்றி அவ்விதிகளில் தமிழ்நாடு தெருவியாபாரிகள் நலன் கருதி திட்டம் தீட்டுதல், தெருவியாபாரிகளின் கணக்கெடுப்பு நிபந்தனைக்குட்படுத்தி தகுதியுடையவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், வியாபாரம் வாரியாக வகைப்படுத்துதல், அடையாளச்சான்றிதழ் வழங்குதல்,  பரப்பளவிற்கு ஏற்ப வியாபார கட்டணம் செலுத்துதல், சான்றிதழை இரத்து செய்தல், மாற்று இடம் ஒதுக்குதல், தகுதியற்ற இடங்களில் வியாபாரம் செய்வதை கட்டுப்படுத்துதல், சுற்றுப்புற சூழலை துhய்மைப்படுத்துதல் ஆகிய இனங்களைக் கொண்டு உரிய படிவங்கள் வரையறுக்கப்பட்டு இப்பொருளுக்கான சட்டம் மற்றும் விதிகள் வடிவமைக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், மேற்படி திட்டம் மற்றும் சட்ட விதிகளை   பேரூராட்சிகளில் முறையே நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இவ்வறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இக்கணக்கெடுப்பு பணியின் போது, சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் நபர்கள் தங்களது பெயர், வசிக்கும் நிரந்தர முகவரி, பிறந்த தேதி, வகுப்பு, வாக்காளர் அடையாள அட்டை / குடும்ப அட்டை / ஆதார் எண், செய்யும் தொழில், வியாபாரம் செய்யும் இடத்தின் அமைவிடம் முதலான சுய விவரங்களை, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி பணியாளர்களிடம்  தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேற்று  28.11.2016 ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, November 28, 2016

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் (நவ. 30ந் தேதி) மின் தடை !

அதிராம்பட்டினம், நவ-28:
அதிராம்பட்டினம் பகுதிகளில் புதன்கிழமை  (நவ. 30) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.