அதிராம்பட்டினம், அக்.25
அதிராம்பட்டினத்தில் காவலர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அறிவுரையின் பேரில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் வழிகாட்டுதலில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானிப் பிரிவு சாா்பில், அதிராம்பட்டினம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம் முகாமை தொடங்கி வைத்து, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை கவுன்சிலர் பாரதி டெங்கு ஒழிப்பு வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.