இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று 25 வது தடவையாக இரத்தத்தை வழங்கி சாதனை புரிந்துள்ளார். இவர் இதுவரையில் 8 லிட்டர் 750 மில்லி கிராம் இரத்தம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரின் குருதிகொடையை பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதல் வழங்கி பாராட்டியது, மத்திய இணை அமைச்சர் E. அஹமது MP, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் MP, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
பிறருக்கு முன் மாதிரியாக மேலும் இரத்ததானங்கள் பல செய்து சமூகத்தொண்டை தொடர்ந்து செய்திடவேண்டும் என்ற வேண்டுகோளுடன் 'அதிரை நியூஸ்' சார்பில் A. சாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
மேலும் இரத்ததானம் செய்த அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யது அவர்களுக்கும் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் குழு

.jpg)





















