.

Pages

Wednesday, September 27, 2017

ஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு !

அதிரை நியூஸ்: செப். 27
ஷார்ஜாவில் 3 ஆண்டுகளை சிறையில் கழித்த 149 இந்தியர்கள் பொதுமன்னிப்புடன் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா சிறைகளில் பொருளாதார குற்றங்கள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் அல்லாத இதர காரணங்களுக்காக 3 ஆண்டுகளை ஷார்ஜா சிறையில் கழித்துவிட்ட சுமார் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியும், அவர்களுடைய பொருளாதார, கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 20 மில்லியன்களை ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார் ஷார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள்.

முன்னதாக, கேரளாவிற்கு வருகை தந்துள்ள ஷார்ஜா ஆட்சியாளருக்கு காலிகட் யூனிவர்ஸிட்டியின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டத்தை கேரள கவர்னர் சதாசிவம் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் வர்த்தகர்களும் பங்கேற்றனர்.

டாக்டர் பட்டம் பெற்றபின் ஏற்புரை நிகழ்த்தி ஷார்ஜா ஆட்சியாளர் கடந்த 70 வருடங்களாக அமீரகத்திற்கும் கேரளாவிற்கும் இடையில் நிலவும் நட்பையும், அமீரக வளர்ச்சிக்காக கேரளா மக்கள் வழங்கியுள்ள உழைப்பையும் நினைவுகூர்ந்தார்.

டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்களுக்கு நினைவுப்பரிசாக பழமையான அரிய புத்தகங்கள், பண்டைய வரைபடங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார். அவற்றில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குர்ஆன் பிரதி ஒன்றும், மலையாள வரலாற்று புத்தகமும் அடக்கம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்

அதிரை நியூஸ், செப். 27
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தாயாரும், ஷபூர்கான், ஹாஜா நசுருதீன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப், தமீம் அன்சாரி ஆகியோரின் வாப்புச்சாவும், சமீர்கான் அவர்களின் உம்ம்மாவுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள்  கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று (27-09-2017) பகல் லுஹர் தொழுதவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, September 26, 2017

துபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட்டம் வெற்றி !

அதிரை நியூஸ்: செப். 26
உலகின் முதன்முதலாக, துபையில் பைலட் இல்லாமல் பறக்கும் 2 இருக்கைகள் கொண்ட தானியங்கி டேக்ஸி வெற்றிகரமாக 'துபை ஜூமைரா பீச் ரெஸிடென்ஸ் ஏரியா மற்றும் ஜூமைரா பீச் பார்க் பகுதிகளில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

ஜெர்மனியின் Volocopter எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி பறக்கும் டேக்ஸிகள் 30 நிமிடத்திற்கு 50 km/h முதல் 100 km/h வரை பறக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சோதனை ஓட்டங்களுக்குப் பின் இவை பொதுமக்களின் போக்குவரத்திற்கு கொண்டு வரப்படும்.

துபை பஸ், மெட்ரோ, டேக்ஸிக்கள், படகு போன்ற போக்குவரத்துகளுள் ஒன்றாக தானியங்கி பறக்கும் டேக்ஸியும் இணைக்கப்படும் என்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் மூலம் இயக்கப்படும் இந்த பறக்கும் டேக்ஸியை 'ஆப்' AAP மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

இந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் 51 நாடுகள் !

இந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் 51 நாடுகளின் பட்டியல்:

S.No Visa on Arrival        No visa required
1 Bolivia                                Bhutan
2 Cambodia                        Dominica
3 Cape Verde                        Ecuador
4 Comoros                                El Salvador
5 Cote d'Ivoire (Ivory Coast) Fiji
6 Ethiopia                                Grenada
7 Guinea-Bissau                 Haiti
8 Hong Kong                         Indonesia
9 Jordan                                Jamaica
10 Kenya                                Macao
11 Laos                                Macedonia
12 Madagascar                        Gambia
13 Maldives                                Mauritius
14 Marshal Islands                Micronesia
15 Mauritania                        Nepal
16 Mozambique                        Palestinian Territories
17 Palau                                Saint Kitts and Nevis
18 Saint Lucia                        Senegal
19 Samoa                                Serbia
20 Sri Lanka                        St. Vincent and the Grenadines
21 Seychelles                        Trinidad and Tobago
22 Suriname                                Vanuatu
23 Tanzania
24 Thailand
25 Timor-Leste
26 Togo
27 Tuvalu
28 Uganda
29 Ukraine

Source: Gulf News

அபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணாடி !

அதிரை நியூஸ்: செப். 26
அபுதாபி ஷேக் மக்தூம் பின் ராஷித் சாலையில் சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்ற காரிலிருந்து அதன் பின்புற ஜன்னல் (Rear Window) கண்ணாடி பெயர்ந்து பறந்ததை 'ஸ்னிப்பர்' (Sniper) எனப்படும் ரகசிய கேமராவில் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் படம்பிடித்தனர். சம்பந்தப்பட்ட அந்த கார் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக சுமார் 187 Km/Ph வேகத்தில் சென்றுள்ளதை அடுத்து துறைசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் !

சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன்
அதிராம்பட்டினம், செப்.26
அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக கே. அன்பரசன் (செப்.25) திங்கட்கிழமை முதல் பொறுப்பேற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தினமும் 10 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை, துப்புரவு பணியாளர்கள் சுமார் 60 பேர் வரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ( 7 ஆண்டுகளாக ) நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் மேற்கொள்ளும் துப்புரவுப் பணிகளை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவுகளை பதிந்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நிரந்தர சுகாதார ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கடந்த செப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதார ஆய்வாளராக திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் சுகாதர ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. அன்பரசனை, அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்ற உத்தரவு பிறபித்தார். மேலும், பேரூராட்சியில் தற்காலிக செயல் அலுவலராக பணியாற்றி வந்த எல். ரமேஷ் நிரந்தர செயல் அலுவலராக பணியாற்ற அறிவுறுத்தினார். இதையடுத்து செயல் அலுவலர் எல். ரமேஷ், சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன் ஆகிய இருவரும் நேற்று திங்கட்கிழமை முதல் தங்களது பொறுப்புகளை ஏற்றனர். 

துபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் !

அதிரை நியூஸ்: செப். 26
இன்று காலை சுமார் 7.20 மணியளவில் பரபரப்பு நிறைந்த துபை மரீனா பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. மெர்ஸா ஸ்ட்ரீட் 'லா ரிவேரா டவர்' அருகே இந்த தீ சம்பவம் நடைபெற்றதால் கடுமையாக போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இந்த பஸ் தீ விபத்தால் ஏற்பட்ட பிற சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் போராடி அணைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, September 25, 2017

கத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா !

வளைகுடா நாடுகளில் ஒன்றாகிய கத்தாரில் ஹெவி டூட்டி வாகன ஓட்டுநர் பணிக்கு 1 நபர் தேவை. கத்தார் லைசன்ஸ் வைத்து இருப்போருக்கு முன்னுரிமை. இலவச விசா மற்றும் இதர சலுகைகள் உண்டு.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 0097470449588 என்ற அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.