.

Pages

Wednesday, September 27, 2017

ஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு !

அதிரை நியூஸ்: செப். 27
ஷார்ஜாவில் 3 ஆண்டுகளை சிறையில் கழித்த 149 இந்தியர்கள் பொதுமன்னிப்புடன் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா சிறைகளில் பொருளாதார குற்றங்கள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் அல்லாத இதர காரணங்களுக்காக 3 ஆண்டுகளை ஷார்ஜா சிறையில் கழித்துவிட்ட சுமார் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியும், அவர்களுடைய பொருளாதார, கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 20 மில்லியன்களை ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார் ஷார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள்.

முன்னதாக, கேரளாவிற்கு வருகை தந்துள்ள ஷார்ஜா ஆட்சியாளருக்கு காலிகட் யூனிவர்ஸிட்டியின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டத்தை கேரள கவர்னர் சதாசிவம் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் வர்த்தகர்களும் பங்கேற்றனர்.

டாக்டர் பட்டம் பெற்றபின் ஏற்புரை நிகழ்த்தி ஷார்ஜா ஆட்சியாளர் கடந்த 70 வருடங்களாக அமீரகத்திற்கும் கேரளாவிற்கும் இடையில் நிலவும் நட்பையும், அமீரக வளர்ச்சிக்காக கேரளா மக்கள் வழங்கியுள்ள உழைப்பையும் நினைவுகூர்ந்தார்.

டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்களுக்கு நினைவுப்பரிசாக பழமையான அரிய புத்தகங்கள், பண்டைய வரைபடங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார். அவற்றில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குர்ஆன் பிரதி ஒன்றும், மலையாள வரலாற்று புத்தகமும் அடக்கம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.