.

Pages

Thursday, September 14, 2017

அதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்டாம் ~ அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அறிவுரை !

அதிராம்பட்டினம், செப்.14
அதிராம்பட்டினத்தில் வேகமாக பரவும் சீசன் பீவர். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகை அதிகரிப்பு. பயப்படத் தேவையில்லை - அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அறிவுரை...

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால், நீர் தேங்கி நின்ற இடங்களில் கொசு உற்பத்தி அதிகமாகி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை கடந்த சில வாரங்களாக வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வரிசையில் நின்று சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ. அன்பழகன் கூறியது;
வழக்கமாக மழை காலங்களில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான் தற்போது பரவி உள்ளது. தொண்டை வலி, இடுப்பு, முதுகு வலி, தலைவலி, வயிற்று வலி, வாந்தி, வறண்ட இருமல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. இரண்டு, மூன்று தினங்களில் குணமாகிவிடும். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருப்பில் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. காய்ச்சல் இருந்தால் தினமும் 3 வேளை அருந்தலாம். நீர் ஆதாரம் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மழை காலங்களில் பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும். மேலும் மருத்துவமனையில் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்படுகிறது. கடும் காய்ச்சலால் பாதிப்படைந்த நோயாளிகள், தனி வார்டில் தங்க வைத்து, அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.