தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் 2 வது தடவையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் நுழைவாயில் அருகே இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முகாமில், ஜாவியா மஜ்லீஸ் வருகையாளர்கள் 1200 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் பெண்களுக்கு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் சில பயனாளிகள் நிலவேம்பு குடிநீரை அருந்திவிட்டு, தங்களது குடும்பத்தினருக்கு ப்ளாஸ்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர்.
இம்முகாமில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், வழக்குரைஞர் அப்துல் முனாப் அப்துல் மாலிக், அப்துல் ஜலீல், வாப்பு மரைக்காயர், முகமது முகைதீன், பேராசிரியர் நசுருதீன், அப்துல் ஜலீல் மற்றும் அதிரை பைத்துல்மால் உறுப்பினர்கள், மேலாளர் ஹாஜா சரீப், ஜலால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல அறுமையான் திட்டம்
ReplyDeleteநிர்வாகி அப்துல் ஹ்மீத் காக்கா பெயர் விடுபட்டு விட்டது, அவர்களின் பனி சிறப்பாக இருந்தது, வாழ்த்துக்கள்