.

Pages

Sunday, September 24, 2017

சுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா?

அதிராம்பட்டினம், செப். 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியின் பெரும்பாலான சாலைகளில் அள்ளப்படாத குப்பைக் கூளங்கள் ஆங்காங்கே குவிந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் பிரதான சாலைகளில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. செடியன் குளம் தென்கரை முதல், ஈஸ்ட் கோஸ்ட் சாலை வரையிலான சாலைகளில் கழிவு நீர் தேங்காதவாறு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இப்பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகிக்கும் குடிநீர், உப்பு நீராக உள்ளது. இந்நீர் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்று நீரா என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தெரிவிக்க வேண்டும்.

எம்.ஆர் கமாலுதீன்,
பிலால் நகர், ஏரிப்புறக்கரை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.