.

Pages

Friday, September 15, 2017

கோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் (படங்கள்)

தஞ்சாவூர் வைரம் நகரில் அமைந்துள்ள கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையொட்டி 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.09.2017) தொடங்கி வைத்தார்.

குத்து விளக்கேற்றி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழ்நாட்டிலுள்ள பிரதான கைத்தறி நெசவாளர் சங்கங்களின் தாய்ச் சங்கமாக திகழும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் முக்கிய குறிக்கோள்களான தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கவும், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணி இரகங்களை விற்பனை செய்ய இந்தியா முழுவதும் விற்பனை நிலையங்களை கோ-ஆப்டெக்ஸ் தன்னத்தே கொண்டு கொண்டுள்ளது.

தஞ்சாவூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர் மற்றும் அரியலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 19 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.  கடந்த ஆண்டில் தஞ்சாவ10ர் மண்டலத்தின் மொத்த விற்பனை ரூ.1111.04 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கு (2017-18) ரூ.14 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை திட்டத்தின் கீழ் ரூ.102.75 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  தற்போது ரூ.135 இலட்சங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.343.81 இலட்சம் விற்பனை செய்யப்பட்டது.  தற்போதையை இலக்கு ரூ.4.85 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு  காஞ்சிபுரம் பட்டு சேலைகள், ஆரணி (வுநஅpடந டீழசனநச) பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், சுங்கடி சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், நெகமம் காட்டன் சேலைகள், எல்லோருக்கும் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், லினன் ரெடிமேட் சட்டைகள், ஜீன்ஸ் டாப்ஸ், மீரட் போர்வைகள் சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுமுகை, அருப்புக்கோட்டை, பரமக்குடி, மணமேடு, வனவாசி, சேலம் பருத்தி சேலைகள், அச்சிட்ட பருத்தி சேலைகள், ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு இரகங்கள் ரெடிமேட் சட்டைகள், மேலும் கால் மிதியடிகள் நைட்டில் உள்பாவாடைகள்  மற்றும் மாப்பிள்ளை செட் என ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸ் 30 சதவிகித தள்ளுபடியுடன் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது.  இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை அணிந்து மகிழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது வாடிக்கையாளர்களுக்கு தங்க மழைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ரொக்க விற்பனையில் ரூ.2000க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது. பொது மக்கள் இச்சலுகைகளை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்க்கை சிறக்க கோ-ஆப்-டெக்ஸ் சிறப்பு விற்பனை துணிகளை பெற்று  தீபாவளி சிறந்த முறையில் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் இரா.சுரேஷ்குமார், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) எம்.அன்பழகன், கணேசன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.