அதிரை நியூஸ்: செப்.14
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மன்னர் சரபோஜி அரசு கல்லூரியுடன் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை 23.09.2017 அன்று காலை 7.00 மணி முதல் 3.00 மணி வரை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடத்தவுள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் (Job Seekers) www.ncs.gov.in மற்றும் http://jobfair.pythonanywhere.com ஆகிய இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டுடன் வேலைவாய்ப்பு முகாம் நாளன்று வருகைதரவும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்களும் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்து, பதிவு செய்த விவரத்தை jobmelathanjavur@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 7639319539.
இம்முகாமிற்கு வருகைதரும் வேலைநாடுநர்கள் போதுமான எண்ணிக்கையில் சுயவிபர குறிப்பு நகல்கள், சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளவும்.
இம்முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு விபரம் அறிந்து கொள்ளவும், பதிவு செய்துகொள்ளவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் (OVERSEAS MANPOWER CORPORATION LTD) அரங்கு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
வேலைநாடும் இளைஞர்கள் தங்களது தொழில்திறனை வளர்த்துக்கொள்ள, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION) மூலமாக வழங்கப்படும் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அரங்குகளில் இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக கிளை ஒன்று முகாம் நாளில், முகாம் வளாகத்தில் செயல்பட உள்ளது. இங்கு முகாமிற்கு வருகைதரும் நபர்கள் பதிவு, புதுப்பித்தல், சிறப்பு புதுப்பித்தல் மற்றும் கூடுதல் பதிவு பணிகளை செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் தமிழகத்தின் 200க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5000க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலைநாடும் இளைஞர்கள் நம்பிக்கையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.