.

Pages

Saturday, September 30, 2017

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை எண்டோஸ்கோபி பரிசோதனை சேவை தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவில் நவீன கருவி மூலம் பரிசோதனை சேவை தொடக்கம்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவில் வீடியோ எண்டோஸ்கோபி முறையில் பரிசோதனை சேவையை, மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்து, வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் எஸ். கார்த்திகேயன் நவீன கருவி மூலம் பரிசோதனையை மேற்கொண்டார். இதில் 50 பேருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும்  சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ. அன்பழகன் கூறியது;
'அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி பரிசோதனைக் கருவி மூலம் காது, மூக்கு, தொண்டையில் ஏற்பட்டுள்ள  பாதிப்புகளை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரதி வாரம் புதன்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனை மகப்பேறு மருத்துவர் கெளசல்யா, செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.