.

Pages

Saturday, September 23, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்துகொண்ட அதிராம்பட்டினம் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதரப்பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தி, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தி, சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில், முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை அப்துல் அஜீஸ் உள்ளிட்ட மஹல்லாவாசிகள் இணைந்து சென்னையில் மாநில பேரூராட்சி இயக்குநர் பழனிச்சாமியிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதரப் பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்தார். சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி ஹசன், செயலாளர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ராஜா (திருநாகேஸ்வரம் பேரூராட்சி),  ராஜசேகரன் (மேல திருபருந்திருத்தி பேரூராட்சி) , தியாகராஜன் (வேப்பந்துர் பேரூராட்சி) ஆகியோர் கலந்துகொண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதரப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விவாதித்தனர்.

இக்கூட்டத்தில், முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட வீடுதோறும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் எடுத்துச்செல்லும் திட்டத்தை தொடங்க வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு மேற்கொள்ள வேண்டிய சுகாதரப்பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.