.

Pages

Wednesday, September 13, 2017

சசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் படங்கள் எரிப்பு !

பட்டுக்கோட்டை, செப். 13
அ.தி.மு.க.(அம்மா), அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) ஆகிய அணிகள் சார்பில் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து என்றும், டி.டி.வி.தினகரன் அறிவித்த நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களை எரித்து முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.