அரசு உரிமம் பெறாமல் செயல்படும் உணவகங்கள், சுகாதாரமற்ற உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட அளவிலான வழிப்படுத்தும் குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாட்டத்தில் செயல்படும் உணவகங்கள், தேநீர் நிலையங்கள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருக்கோயில்கள், புனித தலங்கள் அருகில் உள்ள உணவகங்கள், இரவு சிற்றுண்டி நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் அதிகளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் செயல்படும் உணவகங்கள், தேநீர் நிலையங்களில் உணவு தயாரிக்கும் கூடங்கள், சமையலறைகள் உள்ளிட்ட இடங்களில் வழிப்படுத்தும் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்கள் மீது நிரந்தரமாக மூடும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் தேநீர் மற்றும் உணவுகள் வழங்கும் உணவகங்கள், தேநீர் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களும் அரசிடம் உரிமம் பெற்றுச் செயல்பட வேண்டும்.
அவ்வாறு உரிமம் புதுப்பிக்காத உணவகங்களை மூட உத்தரவிட வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்பாபு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பூங்கோதை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.