அதிராம்பட்டினம், செப்.21
தூய்மை, பொது சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16, 17 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய மேலத்தெரு பகுதிகளில் புதிதாக குப்பைத் தொட்டிகள் 10 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் சார்பில், 16, 17 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய சவுக்கு கொள்ளை நுழைவாயில் எதிரே, பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் மின்மாற்றி அருகே, மகிழங்கோட்டை சாலை பிஸ்மி காம்ப்ளக்ஸ், மேலத்தெரு பூங்கா, புதுக்குளம் அருகே, சானா வயல், அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளிவாசல் உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 70 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது;
'அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16, 17 ஆகிய வார்டுகளின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே குப்பைக் கூளங்கள் சிதறிக்கிடந்தன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும், தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகம் சார்பில், 10 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் மட்டும் கொட்டிச்செல்ல வேண்டும். சாலைகளில் கொட்டிவிட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்த வேண்டாம்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.