அதிரை நியூஸ்: செப்.14
இன்றைய சிறார்கள் கூட, அவ்வளவு ஏன் பள்ளிப்பருவ மாணவிகள் கூட போலீஸாரை முகத்திற்கு நேராய் சந்திக்கும் துணிவை கடந்த சில நாட்களுக்கு முன் கண்முன்னே கண்டு அதிசயத்திருப்பீர்கள்! இன்று 40, 45 வயதை கடந்தவர்கள் அன்று போலீஸை கண்டு ஒரு சமூகமே நடுங்கிய காலகட்டத்துடன் சற்றே ஒப்பிட்டு அசைபோட்டுப் பாருங்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு சுமார் 4 வயது முதலே போலீஸ் என்றாலே தீரா பயம், போலீஸ் தன்னை தேடுவதாக நினைப்பு. தற்போது குடும்பத்துடன் அஜ்மானில் வாழ்ந்து இவரை ஒரு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என மனநல ஆலோசகர் ஒருவர் ஆலோசணை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், அஜ்மான் ரேடியோவில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின் வழியாக தனது மகளின் போலீஸ் பயம் குறித்து எடுத்துச் சொன்னார். ரேடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இதை உடனடியாக அஜ்மான் போலீஸ் துறைக்கு கொண்டு செல்ல, அல் ஹமீதியா போலீஸ் நிலையத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கிடைத்தது.
அஜ்மான் போலீஸ் நிலையத்தையும் அதன் செயற்பாடுகளை தனது பெற்றோர்களுடன் முழுமையாக சுற்றிப்பார்த்த அந்த இளம்பெண்ணுக்கு போலீஸ் நிலைய கம்ப்யூட்டரை இயக்கி 'போலீஸாரால் தேடப்படுவோர் பட்டியலில்' தனது பெயர் இல்லை என்பதை தானே ஊர்ஜிதம் செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இறுதியாக, போலீஸாரின் கனிவான வரவேற்பு, உபசரிப்பு, போலீஸ் நிலையத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க அனுமதி என்பன போன்ற செயல்களால் போலீஸ் போபியா என்ற அச்சம் அகன்ற நிலையில் புத்துணர்வுடன் காணப்பட்ட இளம்பெண்ணுக்கு போலீஸார் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
அஜ்மான், அல் ஹமீதியா போலீஸ் நிலைய இயக்குனர் லெப்டினண்ட் கர்னால் யஹ்யா அல் மத்ரூஸி அவர்கள் கூறும் போது, பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு போலீஸ் குறித்து (மாக்காண்டி ரேஞ்சுக்கு) எதிர்மறை எண்ணங்களை விதைக்காமல் போலீஸார் மக்களின் பாதுகாப்புக்காக செய்யும் தியாகங்களை எடுத்துக்கூறி நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.