அதிராம்பட்டினம், செப்.16
அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் ஹோமியோபதி மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வரிசையில் நின்று சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். மீனவர். இவரது மகன் வாசன் (வயது 17). பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 7 தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு அதிராம்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் போலி மருத்துவர்கள் இருக்கின்றனரா ? என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணி திடீர் ஆய்வை இன்று சனிக்கிழமை மேற்கொண்டார்.
இதில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்தகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஊசி மருந்துகள், சிரஞ்சி உள்ளிட்ட அலோபதி மருந்துகள் மருத்துவமனையில் இருந்ததைக் கண்டறிந்தார். அங்கு மருத்துவர் இல்லாததால், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
ஆய்வின் போது, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, வட்டார மருத்துவ அலுவலர் ஜி. அறிவழகன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன், வட்டார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், காசி நாதன், வெங்கடேஷ், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.